Published:Updated:

சாணிக் காயிதம் - சினிமா விமர்சனம்

சாணிக் காயிதம்
பிரீமியம் ஸ்டோரி
சாணிக் காயிதம்

பொன்னியாய் கீர்த்தி சுரேஷ். முதல் சில நிமிடங்கள் கொஞ்சம் உறுத்தலாய்த் தெரிந்தாலும் போகப் போக பொன்னியாகவே கம்பீரமாய் உயர்ந்து நிற்கிறார்.

சாணிக் காயிதம் - சினிமா விமர்சனம்

பொன்னியாய் கீர்த்தி சுரேஷ். முதல் சில நிமிடங்கள் கொஞ்சம் உறுத்தலாய்த் தெரிந்தாலும் போகப் போக பொன்னியாகவே கம்பீரமாய் உயர்ந்து நிற்கிறார்.

Published:Updated:
சாணிக் காயிதம்
பிரீமியம் ஸ்டோரி
சாணிக் காயிதம்

பேனாவை சதைத்துணுக்குகள் மிதக்கும் ரத்தத்தால் நிரப்பி ஒரு பழிக்குப் பழிக் கதையை வன்முறையாய் கிறுக்கினால் அதுதான் இந்த ‘சாணிக் காயிதம்.’

அரிசி ஆலையில் வேலை பார்க்கும் மாரி, உடன் வேலைபார்க்கும் ஒருவரை கவுன்சிலர் தேர்தலில் நிற்கச் சொல்கிறார். இது ஆலை முதலாளிகளுக்கு எரிச்சலூட்ட, மோதல் நிகழ்கிறது. சண்டையின்போது எதிர்த்தரப்பு வார்த்தைகளை வீச, மாரியும் பதிலுக்கு ஏசுகிறார். ஆதிக்க சாதியைச் சேர்ந்த முதலாளிமார்களால் இதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பாலியல் வன்புணர்வு, கொலை எனக் கோரத் தாண்டவமாடுகிறார்கள். இப்போது குடும்பத்தில் எஞ்சியிருப்பது மாரியின் மனைவி பொன்னியும், பொன்னியின் அண்ணன் சங்கையாவும்தான். இருவரும் தங்கள் குடும்பத்தைச் சிதைத்தவர்களைத் தேடித் தேடி கொடூரமாய் வேட்டையாடுவதுதான் மீதிக்கதை.

சாணிக் காயிதம் - சினிமா விமர்சனம்

பொன்னியாய் கீர்த்தி சுரேஷ். முதல் சில நிமிடங்கள் கொஞ்சம் உறுத்தலாய்த் தெரிந்தாலும் போகப் போக பொன்னியாகவே கம்பீரமாய் உயர்ந்து நிற்கிறார். இழப்பின் வலி, ரெளத்திரத்தின் வெறி எனப் பலமுகங்களை வெளிக்காட்டி அசரடிக்கிறார் கீர்த்தி. நடிகராய் செல்வராகவனுக்கு இது முழுமையான படம். அலட்டிக்கொள்ளாமல் நக்கல் உடல்மொழியோடு கொலைகளைச் செய்யும் கதாபாத்திரத்திற்கு பக்கா பொருத்தம். ஆடுகளம் முருகதாஸ், கண்ணா ரவி, வினோத் முன்னா, விஜய் முருகன் என மற்ற நடிகர்கள் இருந்தாலும் பிரதானமாய் திரையை நிறைப்பது இவர்கள் இருவரும்தான்.

அதீத வன்முறையை அதன் அசல் தன்மையோடும் காட்டவேண்டும். அதில் பார்ப்பவர்கள் ரசிக்க ஏதுவாய் அழகியலும் இருக்கவேண்டும் என்கிற கத்திமேல் நடக்கும் வித்தையை மிகத்திறமையாய் மேற்கொண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் யாமினி யக்னமூர்த்தி. திலீப் சுப்பராயனின் சண்டை வடிவமைப்பும் நாகூரானின் எடிட்டிங்கும் படத்தின் பெரும்பலம். சாம் சி.எஸ்ஸின் இசை ஓகே!

சாணிக் காயிதம் - சினிமா விமர்சனம்

பல்லாண்டுகளாகப் பார்த்துச் சலித்த கதையையும் விறுவிறுப்பான காட்சியமைப்புகளால் வித்தியாசமாய்ச் சொல்லிவிடமுடியும் எனக் காட்டியவிதத்தில் இயக்குநர் அருண் மாதேஸ்வரனுக்கு வெற்றியே.

ஆனால் அதுமட்டுமே ஒரு படைப்பிற்குப் போதுமா என்றால், இல்லை. சாதிப்பிரச்னை பற்றி மேலோட்டமாகப் பேசிச் செல்வது கமர்ஷியல் திணிப்பாகவே தெரிகிறது. மேலும், கதை நிகழும் நிலப்பரப்பு, அங்கு வாழும் மனிதர்களின் உணர்வுகள் என எதுவுமே இல்லாமல் வெற்றிடத்துக் கட்டடங்களில் ரத்தத்தைத் தெறிக்கவிட்டு அதை அழகான ஷாட்களால் காட்டினால் போதும் என்ற நினைப்புதான் காகிதத்தைச் சுட்டு ஓட்டையாக்கியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism