Published:Updated:

அமலா பால் பார்ட்டி, `துப்பாக்கி 2’ டாக், சமந்தா 2.0! - இது சோசியல் மீடியா ரவுண்ட் அப்

லாக்டெளனில் பரபரப்பாக இருக்கும் ஒரே இடம், சோஷியல் மீடியாதான். பிரபலங்கள் அங்கே ஷேர் செய்யும் சுவாரஸ்யங்கள், இங்கே உங்கள் பார்வைக்கு. #சோஷியல் மீடியா ரவுண்டப்!

லாக்டெளனால் ஏற்பட்டிருக்கும் இந்த அசாத்தியச் சூழலில் பலரும் விர்ச்சுவல் உலகிற்கு மாறியிருக்கிறார்கள். திருமணம், பிறந்தநாள் கொண்டாட்டம் எனப் பலதும் இப்போது விர்ச்சுவல் ஆகியிருக்கிறது. இந்தநிலையில், தனது சகோதரரின் பிறந்தநாளை வீட்டில் இருந்தபடியே விர்ச்சுவலாக பார்ட்டி கொண்டாடியிருக்கிறார் நடிகை அமலாபால்.

பின்னணியில் பாடல் ஒலித்தபடி இருக்க, மாஸ்க் அணிந்தபடி, ‘பிறந்தநாள் வாழ்த்துகள். நானும் அம்மாவும் இங்கே உனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறோம். மிஸ்யூ!’ எனப் பிறந்தநாள் வாழ்த்தைப் பதிவு செய்துள்ளார்.

நந்திதா
நந்திதா

’மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு நடிகர் விஜய்யின் 65வது படத்தை எந்த இயக்குநர் இயக்குவார் என்ற சஸ்பென்ஸ் நீண்ட நாள்களாகவே நீடித்து வந்தது. இந்த நிலையில், இயக்குநர் முருகதாஸ் உடன் அடுத்த படத்திற்கு விஜய் இணைகிறார் எனவும், 2012ம் ஆண்டு, முருகதாஸ்- விஜய் கூட்டணியில் ப்ளாக்பஸ்டர் ஹிட்டடித்த ‘துப்பாக்கி’ படத்தின் பார்ட்-2வாக இருக்கும் எனவும் செய்திகள் வரத்தொடங்கின. இந்த நிலையில், ‘துப்பாக்கி’ படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் விஜய்யின் ‘துப்பாக்கி’ பட ஸ்டில்களை போஸ்ட் செய்ய, பரபரவென ‘துப்பாக்கி 2’ என சோஷியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆனது.

இதனை விஜய் ரசிகர் ஒருவர் சந்தோஷ் சிவனை ட்விட்டரில் டேக் செய்ய, ‘’துப்பாக்கி’ மட்டுமல்ல, மற்ற படங்களின் ஸ்டில்களையும் நான் போஸ்ட் செய்துள்ளேன். மற்றபடி எந்தக் குறிப்பும் இல்லை’ என விளக்கம் அளித்துள்ளார்.

View this post on Instagram

Tiktok with daddy 😂😍

A post shared by Manasvi (@manasvi01) on

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சமீபகாலமாக, ‘யூ டர்ன்’, ‘ஓ பேபி’, ‘சூப்பர் டீலக்ஸ்’, ‘ஜானு’ எனத் தமிழ், தெலுங்கு இரண்டிலும் தனது நடிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களாகத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகை சமந்தா. இவர் தேர்ந்தெடுக்கும் படங்களும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற, தொடர்ந்து அதுபோன்ற படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், தனது நடிப்பை மேலும் மெருகேற்ற பயிற்சி பெற்று வருகிறார் சம்மு.

‘ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்’, ’தி குயின்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவரும், இயக்குநருமான ஹெலனிடம் ஆன்லைனில் பயிற்சி பெற்று வருகிறார் சமந்தா. இதைத் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளவர், ’நேரம் கிடைக்கும்போது அதைச் சரியான வழியில் உபயோகப்படுத்த வேண்டும். அதற்காகத்தான் இது. இனி படங்களில் என்னுடைய சிறந்த நடிப்பைப் பார்க்கலாம்’ என்கிறார் சமந்தா.

சின்னபாப்பா டூ பெரிய பாப்பா
சின்னபாப்பா டூ பெரிய பாப்பா

தனது படங்கள், தான் மேற்கொள்ளும் சமூகப்பணிகளின் அப்டேட் என சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் திரைப்பிரபலங்களில் நடிகர் விவேக்கும் ஒருவர். லாக்டெளனால், வீட்டில் இருப்பதால் பியானோ வாசிக்கும் வீடியோ, கொரோனா குறித்தான விழிப்புணர்வு என ட்விட்டரில் பிஸியாக இருக்கிறார். சமீபத்தில் மே3 வரை சொந்தப் பணிகளுக்காக சோஷியல் மீடியாவிலிருந்து பிரேக் எடுப்பதாக அறிவித்திருந்தார். தற்போது மீண்டும் சோஷியல் மீடியா உலகிற்கு வந்துள்ளார் விவேக்.

முதல் ட்வீட்டாக, ஷங்கர் இயக்கத்தில் தான் காமெடியனாக நடித்த ‘சிவாஜி’ படத்தின் க்ளைமேக்ஸில் ‘அந்நியன்’னாக மாறியிருப்பார் விவேக். அந்தக் காட்சி படத்தில் இடம்பெறாமல் போனது. அந்த வீடியோவுடன் ரசிகர் ஒருவர் விவேக்கை டேக் செய்திருக்க, ‘ஐயம் பேக்!’ என்ற கேப்ஷனோடு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் விவேக்.

View this post on Instagram

😍❤️Chingam 1 wishes

A post shared by Saranya Mohan (@saranyamohanofficial) on

‘சோலோ’, ‘96’ படங்களில் தன் இசையால் அனைவரையும் கவர்ந்தவர் கோவிந்த் வசந்தா. தனியிசைக் கலைஞராக இருந்தவருக்குத் தமிழில் ‘96’ படப்பாடல்களின் மூலம் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. அதன்பிறகு, ‘உறியடி2’, ‘தம்பி’, ‘ஜானு’ என தமிழ்ப் படங்கள் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு என சமீபத்தில் இவரது பாடல்கள் பலரது ப்ளேலிஸ்ட்டிலும் ரிப்பீட் மோடில் இருந்தன.

View this post on Instagram

@arrahman #violin #music

A post shared by Govind Vasantha (@govind_vasantha) on

க்வாரன்டீன் நாளில் தனது இன்ஸ்டா பக்கத்தில் வயலினுடன் கோவிந்த் செம பிஸி. ‘என்னவளே’ பாடலை வாசித்து இன்று இவர் வெளியிட்ட வீடியோவில் மயங்கிக் கிடக்கின்றனர் இசை ரசிகர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு