Published:Updated:

`` `துப்பறிவாளன் -2'... அந்த ரெண்டு பேர்ல ஒருத்தர்தான் டைரக்டர்!'' - `சவரக்கத்தி' ஆதித்யா

``குடும்பத்துல கணவன், மனைவிக்கு இடையே சண்டை வந்தால் பேசாமலேயே போயிடுவாங்களா என்ன... அதே மாதிரிதான் `துப்பறிவாளன் - 2’ பிரச்னையும்!''

`சவரக்கத்தி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் மிஷ்கினின் தம்பி ஆதித்யா, தற்போது தனது இரண்டாவது படத்தை ஆரம்பித்திருக்கிறார். `பிதா’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. ஆதித்யாவிடம் பேசினேன்.

``உங்களுடைய இரண்டாவது படத்தை ஆரம்பிப்பதில் ஏன் இந்தத் தாமதம்?"

பிதா
பிதா

`` `சவரக்கத்தி’ படத்தை முடிச்சதும் மிஷ்கின் அண்ணா டைரக்ட் பண்ண படங்கள்லயும், நடிக்கிறதுலயும் பிஸியாகிட்டேன். `ஜீ5’ தளத்துக்கு `கண்ணாமூச்சி’னு ஒரு வெப் சீரிஸ் பண்ணலாம்னு அதுக்கான ஸ்கிரிப்ட் வேலைகளை ஆரம்பிச்சேன். அதோட ஷூட்டிங் போற நேரத்தில் `துப்பறிவாளன் - 2’ படத்தோட ஷூட்டிங் ஆரம்பிச்சிடுச்சு. எனக்கு இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்க வேண்டிய வேலை இருந்ததால, `கண்ணாமூச்சி’ வெப் சீரிஸுக்கு நான் கதை, திரைக்கதை மட்டும் எழுதிக்கொடுத்தேன். இந்த வெப் சீரிஸ் ரிலீஸானதுக்கு அப்புறம் நல்ல விமர்சனங்கள் வந்துச்சு. உடனே என்கிட்ட இருந்த `பிதா’ கதையோட லைனை வொர்க் பண்ண ஆரம்பிச்சிட்டேன். `சவரக்கத்தி’க்கு அப்பறம் நான் எழுதிய கதை இதுதான். ஆனால், இதைப் படமாக்குறதுக்கு சரியான நேரமும் சரியான ஆள்களும் தேவை. அது நடக்குறதுக்கு இவ்வளவு நாள் எடுத்துடுச்சுன்னும் சொல்லலாம்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``படத்தோட கதை என்ன, யாரெல்லாம் நடிக்கிறாங்க?"

மதியழகன். ஆதித்யா, மிஷ்கின்
மதியழகன். ஆதித்யா, மிஷ்கின்

``ஒரு அப்பாவுக்கும் குழந்தைக்கும் இடையேயான கதைதான், `பிதா’. தன்னோட குழந்தைக்கு ஒரு பிரச்னைனா, அந்த அப்பாவோட தவிப்பு எப்படி இருக்கும் என்பதுதான் படத்தோட முக்கியமான எமோஷன். உதாரணத்துக்கு சொல்லணும்னா, இருட்டா இருக்கிற ஒரு கிணத்துக்குள்ள ஒரு குழந்தை விழுந்திடுது. அதில் தண்ணி இருக்கா, கல்லு இருக்கா, பாம்பு, முதலை இருக்கானு எதுவும் தெரியாமல், அந்தக் குழந்தையைக் காப்பாற்ற அந்தக் குழந்தையோட அப்பா குதிக்கிறார். இதுதான் படத்தோட கருனு சொல்லலாம். அந்தக் குழந்தைக்கு என்ன ஆச்சுங்கிற பதற்றமும், அந்த அப்பாவோட தவிப்பும் சேர்ந்ததுதான் படத்தோட எமோஷன். `பிதா’ படத்தில் அப்பா கேரக்டருக்காகத் தயாரிப்பாளர் மதியழகன்கிட்ட கேட்டேன். அவரும் கதை கேட்டுட்டு உடனே ஓகே சொல்லிட்டார். முக்கியமான கேரக்டர்கள்ல கலையரசன், ரமேஷ் திலக் நடிக்கிறாங்க. 2018-ல `மிஸ் இந்தியா’ பட்டம் வாங்குன அனுகீர்த்தி வாஸ்கிட்டேயும் ஒரு முக்கியமான கேரக்டருக்காகக் கேட்ருக்கேன். அவங்களுக்கும் கதை பிடிச்சிருக்கு. ஆனால், இன்னும் அவங்க கமிட்டாகல. படத்தோட ஸ்கிரிப்டை ஃபைனல் பண்ற வொர்க்தான் இப்போ போயிட்டு இருக்கு. எழுத்தாளர் தேவி பாரதியும் என்னோட சேர்ந்து வசனம் எழுதுறார். லாக்டெளன் முடியறதுக்குள்ள ஸ்கிரிப்ட் ஃபைனல் ஆகிடும். லாக்டெளன் முடிஞ்சதும் ஷூட் போகலாம்னு பிளான் பண்ணியிருக்கோம். `ஸ்ரீ கிரீன்’ நிறுவனமும் மிஷ்கின் அண்ணாவும் சேர்ந்துதான் படத்தைத் தயாரிக்கிறாங்க.’’

``வெப் சீரிஸ் அனுபவம் எப்படி இருந்தது?"

கண்ணாமூச்சி
கண்ணாமூச்சி

``வெப் சீரிஸில் வொர்க் பண்ணது ஒரு புது அனுபவம். தியேட்டர்ல ஒரு படத்தை ரிலீஸ் செய்றப்ப, அங்க கலெக்டிவ் ஆடியன்ஸ் இருப்பாங்க. 10 ரூபாய் டிக்கெட் வாங்கிட்டு சிலரும், 60 ரூபாய் டிக்கெட் வாங்கிட்டு சிலரும், 120 ரூபாய் டிக்கெட் வாங்கிட்டு சிலரும் இருப்பாங்க. அவங்க எல்லாரையும் திருப்திபடுத்திற மாதிரி தியேட்டர் ரிலீஸ் படங்கள் இருக்கணும். அதனாலதான், தியேட்டர் ஆடியன்ஸுக்காக படங்கள் பண்றது எப்போதுமே சவாலா இருக்கு. ஆனால், வெப் சீரிஸ் பண்ணும்போது, அங்க இருக்கிறவங்க எல்லாரும் ஏ சென்ட்டர் ஆடியன்ஸ்தான். இப்போ இருக்கிற லாக்டெளனிலும் ஏ சென்ட்டர் ஆடியன்ஸ்தான், நெட்ஃபிளிக்ஸ், அமேசான்னு எல்லா தளங்களிலும் ஆக்டிவா இருக்காங்க. அவங்களுக்கு ஒரு கதை பண்றதும் வித்தியாசமான அனுபவம்தான். எந்த பிளாட்ஃபார்மிற்காக படங்கள் பண்ணாலும் ஒரு நல்ல கதையை மக்களுக்குச் சொல்லணும். அதுதான் முதன்மையான விஷயம். ஆன்லைன் தளங்களில் சென்சார் இல்லை. அதனால், நாம நினைச்சதை முழுமையாச் சொல்லலாம். எனக்கு ஆன்லைன் தளங்களில் படம் பண்றதுலேயும் அதிக ஆர்வம் இருக்கு.’’

`துப்பறிவாளன் - 2’ படத்தில் நீங்க நடிச்ச போர்ஷனுக்கான ஷூட்டிங் முடிஞ்சிடுச்சா?

துப்பறிவாளன்
துப்பறிவாளன்

`` `துப்பறிவாளன் - 2’ல என்னோட போர்ஷன் இன்னும் 20 சதவிகிதம் ஷூட் பண்ணணும். இப்போ கொஞ்சம் பிரச்னை போயிட்டு இருக்கிறதுனால, இன்னும் அதுக்கான ஷூட் ஆரம்பிக்கலை. மீதமிருக்கும் காட்சிகளை விஷால் அண்ணன் இயக்கினாலும் சரி, மிஷ்கின் அண்ணணே இயக்கினாலும் சரி. அதுல என்னோட போர்ஷனை நடிச்சுக் கொடுத்திடுவேன். இந்தப் பிரச்னை எப்போவேணாலும் முடியுறதுக்கு வாய்ப்பு இருக்கு. குடும்பத்தில் கணவன், மனைவிக்கு இடையில சண்டை வந்தால் பேசாமலேயே போயிடுவாங்களா என்ன. அதே மாதிரிதான், இந்த பிரச்னையும். மிஷ்கின் அண்ணணும், விஷால் அண்ணணும் இப்போ பேசாமல் இருக்காங்க. ஆனால், அது எப்போனாலும் சரியாகிடும்.’’

``விஷாலுக்கும் மிஷ்கினுக்கும் இடையே இருக்கிற நட்பைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். உங்களுக்கும் விஷாலுக்கும் இடையிலான நட்பு எப்படி?"

ஆதித்யா
ஆதித்யா

``எனக்கு விஷாலும் அண்ணன்தான். இப்போ நடக்கிற இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் சூழ்நிலைதான் காரணம். இப்போ கொரோனா வந்திருக்கு. இதுக்கு யார் காரணம்னு யாரையும் சொல்ல முடியாதுல. அந்த மாதிரி இந்தப் பிரச்னைக்கும் யாரையும் நாம காரணம்னு சொல்ல முடியாது. கொரோனா ஒரு நாள் போயிடும்ல, அந்த மாதிரி இந்த பிரச்னையும் ஒரு நாள் போயிடும். வாழ்நாள் முழுக்க ஒருத்தர் நமக்கு எதிரினு நாம யாரையும் வெச்சுக்க முடியாது. சண்டை வரும், மன்னிக்கணும் நட்பாகிடணும் என்பது மனிதர்களோட இயல்புதானே. அதுமாதிரி எல்லாம் சரியாகிடும்னு நான் நம்புறேன்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு