Published:Updated:

நாயகிகள் மட்டும் ஏன் இறக்குமதி செய்யப்படுகிறார்கள்? - உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்

தமிழர்களின் இணைபிரியா உறவாகிப்போன திரை அனுபவங்கள் குறித்து நேரடியாய் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு பதினைந்து வருடங்களுக்கு முன் கிடைத்தது.

சினிமா என்னும் கலை உலகெங்கும் பரவினாலும் இடத்திற்கேற்ப கொஞ்சம் நெகிழ்ந்துகொடுக்க முன்வந்தது. உலகத் திரைப்படங்கள் எல்லாம் சமகால அரசியல், உயர்தர நகைச்சுவை, புதுப்புதுத் தொழில்நுட்ப யுக்திகள் என உற்சாகமாகப் பயணம் மேற்கொள்ள, இந்தியத் திரைப்படங்களோ நாடகத் தாக்கத்திலும், பிரிட்டிஷ் தணிக்கையைத் தவிர்க்கவும் தொடக்கத்தில் புராணக் கதைகளையே பெரிதும் சார்ந்திருந்தன. ஆழமாக யோசித்துப் பார்த்தால் `சினிமா என்னும் திரை மொழியின் அழகியல் உன்னதங்களை முழுவதுமாக உள்வாங்கிடாமல் ஓர் மாயவலைக்குள் சிக்கிக்கொண்ட தமிழ்ச் சமூகம்' என்றே இருபதாம் நூற்றாண்டின் வரலாறு குறித்துக்கொள்ளக்கூடும்.

அது மட்டுமல்ல, வரலாறு நெடுகிலும் மூவேந்தர்களுக்கு இடையே முரண், பல்வேறு இனக்குழுக்களுக்கு இடையே பிரிவும் மோதலும் எனச் சுழன்றுகொண்டிருந்த தமிழ்ச் சமூகம் முதன்முறையாக சமூக, அரசியல், பண்பாட்டுத் தளங்களிலும் நேரெதிர் இரு துருவங்களுக்கு இடையே வாழ்ந்திடப் பழகிக்கொண்டதையும் குறிப்பிட வேண்டும்.

நாயகிகள் மட்டும் ஏன் இறக்குமதி செய்யப்படுகிறார்கள்? - உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்

நூறு ஆண்டுக் காலத் தமிழ் சினிமா வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், திரைப்படத்தின் தலைப்புகளில் மட்டுமல்ல, கதைப் பாத்திரங்களின் பெயரிலும் ஆழ்ந்த பொருளுண்டு. `வியட்நாம் வீடு', `கிழக்குச் சீமையிலே', `எஜமான்', `வடசென்னை' எனத் தமிழ்த் திரைப்படங்களின் கதைக்களமும், நாயகர்களின் பெயரும், பேச்சுவழக்கும் மாறிக் கொண்டேயிருப்பது தமிழ்ச் சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களின் நிழல் திரையுலகம் நோக்கியும் நீள்கிறது.

கதையின் நாயகர்கள் உள்ளூரிலிருந்து எழுச்சி பெற, நாயகிகள் மட்டும் ஏன் தொடர்ந்து இறக்குமதி செய்யப்படுகிறார்கள்? கொடூர மனம் படைத்த வில்லன்களைத் தேடி அண்டை மாநிலங்கள், வட இந்தியா தாண்டி சீனா, ஆப்பிரிக்கா வரை நம்மவர்கள் படையெடுக்க உளவியல் காரணம் ஏதேனும் உண்டா? திரையில் தோன்றும் நகைச்சுவை நடிகர்களின் பெயர், நிறம், பேச்சுவழக்கு மட்டும் ஏன் மாறுபட்டு இருக்கின்றன? மரபு மீறலும், சட்டத்தை வளைக்கவும் துணிகின்ற பாத்திரங்களின் பெயர்களில் உள்ள ஒற்றுமையைக் கவனித்தது உண்டா? ஆழ்ந்த ஆய்வுக்குரிய கேள்விகள் இவை.

நாயகிகள் மட்டும் ஏன் இறக்குமதி செய்யப்படுகிறார்கள்? - உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்

தமிழர்களின் இணைபிரியா உறவாகிப்போன திரை அனுபவங்கள் குறித்து நேரடியாய் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பு பதினைந்து வருடங்களுக்கு முன் கிடைத்தது. சென்னை மாநகராட்சிப் பகுதியில் சுனாமி நிவாரணப் பணிகளைப் பார்வையிட, தலைநகர் தில்லியிலிருந்து வருகை புரிந்த உயர்மட்டக் குழுவினரோடு பயணம் செய்துகொண்டிருந்தேன்.

காசிமேட்டுத் துறைமுகம் அருகே ஒரு பெண் சோகம் கவிந்த தன் கதையைக் கூறிக்கொண்டிருக்கிறார். ஆழிப் பேரலையில் வயதான தன்னுடைய தாயையும், பத்தே வயதான தன் மகளையும் ஒரு சேரப் பறிகொடுத்துச் சில நாள்கள்தான் ஆகின்றன. கண்களில் நீர் வற்றிப்போய் எதிர்காலத்தையே இழந்த நிலையில் அந்த ஞாயிற்றுக்கிழமை காலை என்ன நடந்தது என்று விவரிக்கும்போது, அந்த நேரத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நகைச்சுவைத் தொடரின் பெயரை அந்தச் சோகத்திலும் குறிப்பிட்டுச் சொன்னதைக் கேட்டு எங்களுக்கு நெகிழ்ச்சியாகவும் வியப்பாகவும் இருந்தது.

அந்தத் தொடரின் பெயர், `மீண்டும் மீண்டும் சிரிப்பு.'

- தமிழ்ச் சமூகத்தில் தவிர்க்க முடியாத இழையாக சினிமா மாறிப்போனதன் பின்புலத்தை தன் அனுபவப் பயணங்களின் மூலமாக உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் எழுதும் தொடரின் இந்த வார அத்தியாயத்தை முழுமையாக வாசிக்க > மாபெரும் சபைதனில் - 31 Click Here https://bit.ly/2WT6ILR

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு