Published:Updated:

விஜய்யை இயக்கப்போகும் முதல் பெண் இயக்குநர்... `விஜய் 65' அப்டேட்! #VikatanExclusive

விஜய்-யின் அடுத்த படத்தை இயக்கப்போகும் இயக்குநர் யார் என்கிற பரபர போட்டி கோலிவுட்டில் நிலவிக்கொண்டிருக்கும் நிலையில், சஸ்பென்ஸுக்கு இன்று விடை சொல்கிறது விகடன்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் `மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு, இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. இதற்கிடையே, விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போகும் இயக்குநர் யார் என்கிற பரபர போட்டி கோலிவுட்டில் நிலவிக்கொண்டிருந்த நிலையில், சஸ்பென்ஸுக்கு இன்று விடை சொல்கிறது விகடன்.

சுதா கொங்கரா
சுதா கொங்கரா

'விஜய் 65' படத்தை இயக்கப்போகும் இயக்குநர் சுதா கொங்கரா. இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சுதா... மாதவன், ரித்திகா சிங் நடித்த 'இறுதிச்சுற்று' படத்தின் மூலம் கவனம் ஈர்த்தார். இந்தப் படத்துக்கு அடுத்தபடியாக, சூர்யா இயக்கத்தில் 'சூரரைப் போற்று' படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்தப் படம் ஏப்ரல் மாதம் ரிலீஸுக்குத் தயாராகியிருக்கும் நிலையில்தான், விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு சுதாவுக்கு கிடைத்திருக்கிறது. இதன்மூலம் தமிழில் ஒரு மாஸ் ஹீரோவை இயக்கும் முதல் பெண் இயக்குநராகியிருக்கிறார் சுதா.

விஜய் 65 படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் என்பது முதலிலேயே முடிவுசெய்யப்பட்டது. இயக்குநர் யார் என்பதில்தான் இவ்வளவு நாள்களாக இவரா, அவரா என சஸ்பென்ஸ் நீடித்தது. முதலில், வெற்றிமாறன் சொன்ன கதை விஜய்க்குப் பிடித்துப்போக, சன் பிக்சர்ஸும் ஹேப்பியானது. ஆனால் 'சூரி' படம், அடுத்து சூர்யா படம் என இரண்டையும் முடித்தபிறகுதான் விஜய்-க்கு படம் பண்ண முடியும் என வெற்றிமாறன் சொன்னதால் அந்தத் திட்டம் கேன்சலானது.

விஜய்தான் நம்பர் 1?

அதன்பிறகு, ஒரு கிராமத்துப் படம் பண்ணலாம் என விஜய் முடிவெடுக்க, இயக்குநர் பாண்டிராஜிடம் கதை கேட்டார். விஜய்க்கு கதை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் தயாரிப்பு தரப்போ, பெரிய பட்ஜெட்டில் படம் பண்ணலாம் எனச் சொல்ல, பாண்டிராஜ் வெளியேறினார். அடுத்து, கார்த்திக் சுப்புராஜிடம் கதை கேட்டார் விஜய். அதுவும் டேக் ஆஃப் ஆகவில்லை. இதற்கு அடுத்தபடியாக, சுதா கொங்கராவிடம் கதை கேட்ட சன் பிக்சர்ஸ், அவரை விஜய்-யிடம் கதை சொல்ல அனுப்பியிருக்கிறது. விஜய் -க்கு கதை பிடித்துவிட்டது. ஆனால், உடனே ஓகே சொல்லவில்லை. லோகேஷ் கனகராஜிடம் கடைபிடித்த அதே ஃபார்முலாவை சுதாவிடமும் சொல்லியிருக்கிறார். ஆமாம், லோகேஷ் கனகராஜ் படத்துக்கு ஓகே சொல்லும்முன், ரிலீஸாகாத 'கைதி'யைப் பார்த்துவிட்டு இறுதிசெய்கிறேன் என்று சொன்னார் விஜய். அப்படியே 'கைதி' படத்தைப் பார்த்துவிட்டுத்தான் எல்லாம் ஒகே ஆனது. அதேபோல 'சூரரைப் போற்று' படத்தைப் பார்க்க வேண்டும் என சொல்லியிருக்கிறார் விஜய்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விஜய்-க்கென ஸ்பெஷல் ஷோ தயாராகியிருக்கிறது. விஜய்-யுடன் படம் பார்க்காமல் வெளியிலேயே டென்ஷனாகக் காத்திருந்திருக்கிறார் சுதா. படத்தை முழுவதுமாகப் பார்த்து முடித்து, புன்னகை பூத்தபடி வெளியில் வந்த விஜய், 'சன் பிக்சர்ஸ் படத்துல நாம ரெண்டுபேரும் சேர்ந்து வொர்க் பண்றோம்' என்று சந்தோஷமாக சுதாவிடம் கைகுலுக்கியிருக்கிறார்.

'மாஸ்டர்' விஜய்
'மாஸ்டர்' விஜய்

தற்போது விஜய் நடித்துவரும் ' மாஸ்டர்' திரைப்படத்தில், அனிருத் இசையமைத்துவருகிறார். அனிருத்தின் வொர்க்கிங் ஸ்டைல் மிகவும் பிடித்திருப்பதால், தொடர்ந்து அனிருத்துடன் பல படங்கள் விஜய் பண்ணுவார் என எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால், விஜய் 65 படத்தின் இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ். இவர்தான் 'சூரரைப் போற்று' படத்துக்கும் இசையமைப்பாளர்.

விஜய், சுதா, ஜீ.வி.பிரகாஷ் மூவருக்கும் அட்வான்ஸ் கொடுத்து புராஜெக்ட்டை உறுதிசெய்திருக்கிறது, சன் பிக்சர்ஸ்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு