ஊசிப்புட்டான்

ஊசிப்புட்டான் | ``அந்தப் பொம்பளையப் பாத்தாலே ஒருமாதிரி திக்குன்னு ஆவுது மாப்ள”|இறுதி அத்தியாயம் (39)

“அவெனுக்கு மாத்து வெக்கியது எல்லாம் ரெண்டாம்த்தது. மொதல்ல அந்த ரெவிப் பயல எவென் கொன்னான்னு இப்ப தெரிஞ்சாவணும்.”

ஊசிப்புட்டான்

ஊசிப்புட்டான் | ``நாம சாவுக வரெக்கும் யாருமே நமக்குத் தொணைக்கி வர மாட்டாங்க” | அத்தியாயம் - 38

எந்த நேரத்திலும், யார் வேண்டுமென்றாலும் தன்னை வந்து தாக்கலாம் என்கிற பயம் ரவியை பீடித்தது. தன் உயிருக்குப் பாதுகாப்பு இனி இல்லை என்று அவன் கருதியதால், தினமும் ஒரே நேரத்தில், ஒரே வழியில் வீட்டுக்குச் செல்வதைத் தவிர்த்தான்.

ஊசிப்புட்டான்

ஊசிப்புட்டான் | ``முதல்ல அவெங்கிட்டருந்து ஒன்னய நீ காப்பாத்திக்கப் பாரு...” | அத்தியாயம் - 37

``கொல்ல வந்தவென் இப்படி தத்தி முண்டமாவா இருப்பான்... அவென மட்டும் கொன்னுருந்தான்னா நான் நிம்மதியா இருந்திருப்பேன்.” தாமரைச்செல்வியின் வார்த்தைகள் வருத்தத்தோடு அவளிடமிருந்து வெளியேறின.

ஊசிப்புட்டான்

ஊசிப்புட்டான் | ``இவனுக்குன்னு ஒரு புல்லட்டை எடுத்து மாத்திவெச்சிருக்கேன்” | அத்தியாயம் - 36

தண்டபாணி கட்டை அவிழ்த்துவிடச் செல்ல, “தாஸு, நீ போய் அந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்துட்டு வந்து நம்ம ட்ரக்ஸோட ஹெட்லைட்டைச் சுடு. அப்புறமா அவனுங்ககிட்ட கொண்டுபோய் அந்தத் துப்பாக்கியைப் போட்டுடு.”

ஊசிப்புட்டான்

ஊசிப்புட்டான் | ``உங்கம்மைக்கும் அவனுக்குமான ஒறவு அப்படி"| அத்தியாயம் - 35

“பீதியதிக்கியா மக்கா” என்று தன் கையிலிருந்த பீடியை ரவியை நோக்கி நீட்டியவன், அடுத்த நொடியே, “நீயெல்லாம் பெதியாளாகித்த, எங்கித்தெருந்தெல்லாம் பீதிய வாங்குவியா” என்றபடியே நீட்டிய கையைப் பின்னிழுத்துக்கொண்டான்.

ஊசிப்புட்டான்

ஊசிப்புட்டான் |``தலையில்லாத முண்டத்தின் கால்கள், இருமுறை இழுத்து இழுத்து வெட்டின"| அத்தியாயம் - 34

பத்துக்குப் பத்துகூட அளவில்லாத அந்த அறைக்குள் ஒரு பெரிய கூட்டமே குழுமி நின்றிருந்தது. அவன் கையிலிருந்த கத்தி சட்டெனப் பறிக்கப்பட்டு, அமர்ந்திருந்தவன் கழுத்தை ஒருவன் அறுக்க ஆரம்பித்தான்.

ஊசிப்புட்டான்

ஊசிப்புட்டான் | ``அந்த ஊசிப்பய இருக்காம்ல, கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் இருக்கணும்" | அத்தியாயம் - 33

``லே மக்ளே, நாளைக்கு எப்படியும் அந்தக் குட்டியாப் பய நம்ம டீமுக்கு எதிராத்தாம்ல வேலை பார்ப்பான். அப்படி ஏதும் பண்ணுனான்னுவெச்சுக்க... நம்ம சைடுல இருந்து ஒடக்கி மேச்ச ஸ்க்ராட்ச் பண்ணதுக்கு ஒரு ஆளு வேணும்ல."

ஊசிப்புட்டான்

ஊசிப்புட்டான் | ``சஸ்பென்ஷன் என்ன சஸ்பென்ஷன்... டி.சி-யைக் கொடு" | அத்தியாயம் - 32

``லேய் மக்களே... எல்லாவனுவளும் ஹோட்டலுக்குள்ள போங்கலே... எவன் வந்து உங்கமேல கைவெக்குவான்னு நான் பாக்குறேன்” என்று அதிகாரமாகச் சொன்ன ரவியை அனைவரும் பீதியோடு பார்த்தபடியே நிற்க...

ஊசிப்புட்டான்

ஊசிப்புட்டான் | ``நீரு போலிஸு இல்லவேய்... முழு கிரிமினலு" | அத்தியாயம் - 31

``நேத்து பெரிய ரௌடி கணக்கா நடுரோட்டுல ஒருத்தன தொரத்தி தொரத்தி அடிச்சிருக்கான். இன்னிக்கு காச்சலா...? காச்சலுனாக்க எதுக்கு இவெனெல்லாம் கிளாசுக்கு வரணும்.”

ஊசிப்புட்டான்

ஊசிப்புட்டான் | ``பயந்தா ஈரோவா எல்லாம் ஆவ முடியாது... காமெடியனாத்தான் ஆவ முடியும்" | அத்தியாயம் - 30

``செய்யதுக்க தலையிலயே பீரு பாட்டில ஒடச்சவன் நீ. இந்தச் சின்ன விசியத்துக்கு போய்ப் பயமாருக்குன்னு சொல்லிட்டு இருக்கியேடே. பயந்தா ஈரோவா எல்லாம் ஆவ முடியாது. காமெடியனாத்தான் ஆவ முடியும். நீ ஈரோ ஆவனுன்னா பயத்துலருந்து வெளிய வரணும்.”

ஊசிப்புட்டான்

ஊசிப்புட்டான் | ``ளேய், நீ மண்டய பொளந்திருக்கது யாரைன்னு தெரியுமால" | அத்தியாயம் - 29

“ளேய் மக்கா. என்னல இது மொத தடவயே இப்படி ப்ராண்டு மாத்தி அடிக்கிய அளவுக்குப் போயிட்ட. பெரியாளு தாம்ல நீ”

ஊசிப்புட்டான்

ஊசிப்புட்டான் | ``நேரம் வரும், அப்ப இவனுக்கு இருட்டடிய போட்டுக்கலாம்" | அத்தியாயம் - 28

பயம் தான் இங்கே ஒவ்வொருவரின் சுயகுணமாக இருக்கிறது. தன்னைச் சுற்றி நடப்பவைகள் அனைத்தும் தன் கனவுகளை ஆசைகளை நசுக்கி நாசம் செய்யாதிருக்க வேண்டி, அது அந்த அனைத்தையும் நசுக்கி நாசம் செய்யத் தயாராகி விடுகிறது.

ஊசிப்புட்டான்

ஊசிப்புட்டான் | ``இந்தப் பக்கம்வெச்சு நீ யாரை வேணாலும் என்ன வேணாலும் பண்ணு” | அத்தியாயம் - 27

“என்ன சார் அந்தத் தாலியறுப்புக்கு கூட வந்த பையன் உங்களுக்குத் தெரிஞ்ச பையனா” என ஸ்டேஷனுள் வந்த முத்தையாவிடம் செல்வராஜ் கேட்டார். ``இல்லை சார். இனிதான் இந்த முத்தையாவைப் பத்தி தெரிஞ்சுக்கப் போற பையன்.’’

ஊசிப்புட்டான்

ஊசிப்புட்டான் | ``ஓ... சாராய யாவாரி தங்கசாமி மவனா நீ” | அத்தியாயம் - 26

``டே நாராஜா, உள்ள வந்து ஒரு என்ட்ரியை மட்டும் போட்டுட்டு போ. நாளைக்கோ இல்ல நாளக்கழிச்சோ கோர்ட்டுக்கு வந்துடு. கேஸ முடிச்சு அனுப்பிடலாம்”

ஊசிப்புட்டான்

ஊசிப்புட்டான் | `துவக்கம்னு ஒன்னு இருந்தா முடிவுன்னு ஒன்னு வராமலா போயிடும்’| அத்தியாயம் - 25

இனி இந்த லா அண்ட் ஆர்டர் பிரச்னை இங்கே வரக் கூடாது. அந்தக் கிரிமினல்கள் ரெண்டு பேரையும் ஏதாச்சும் ஒரு கேஸைப் போட்டு உள்ள வைங்க. உள்ள வச்ச அப்புறமா அவங்க வெளியே வரமுடியாத அளவுக்கு அடுத்தடுத்த கேஸைப் போட்டு உள்ளேயே வச்சிருக்கலாம்.

ஊசிப்புட்டான்

ஊசிப்புட்டான் | அவனெ மாதிரியே நீயும் துரோகியா மாறிடாதல | அத்தியாயம் - 24

தேவராஜின் பார்வை மீண்டும் அந்த மருத்துவமனை வளாகத்தை ஒருமுறை சுற்றிவந்தது. உள்ளே போகும்போது சந்தேகப்படும்படியாகத் தெரிந்த ஒருவனைக் காணவில்லை.

ஊசிப்புட்டான்

ஊசிப்புட்டான் | `இனி அவென் உன் வழிக்கு வரமாட்டான் ரெவி’ | அத்தியாயம் - 23

அன்றைய தினம் சகாயத்தின் கதைச் சொல்லும் திறனால், வகுப்பு மாணவர்கள் மத்தியில் ரவி மிகப்பெரிய ரௌடியாக ஒரே நாளில் மாறியிருந்தான்.

ஊசிப்புட்டான்

ஊசிப்புட்டான் | ``மாப்ள பய கொஞ்சம் உஷாராயிட்டான்போலத் தெரியுது” | அத்தியாயம் - 22

ஒன்றரை அங்குலத்துக்கும் சற்றுக் குறைவான அளவுடைய கல்லாக அது இருந்தது. தூக்கி எறியவோ, அங்கேயே விட்டுச்செல்லவோ அவனுக்கு மனது வரவில்லை. அந்தக் கல்லையும் கையில் எடுத்துக்கொண்டு படியிறங்கினான்.

ஊசிப்புட்டான்

ஊசிப்புட்டான் | `அப்பாவ கொன்னவனுவள கொல்லணும்; அதுக்க முன்னாடி தயாராவணும்’| அத்தியாயம் - 21

``இதப்பாரு மக்கா, நீ வேணா ஆன வேட்டக்கி பிறந்தவனா இருக்கலாம். அதுக்காக எடுத்த எடுப்புல ஆன வேட்டக்கி கிளம்பினன்னு வச்சிக்க, ஆனய இல்ல உங்கால சுத்துற பூனய அதுவுமில்ல உங்காலுக்கு கீழ நெளியிற புழுவ கூட உன்னால வேட்டயாட முடியாது.”

ஊசிப்புட்டான்

ஊசிப்புட்டான் | `தகப்பன் இல்லாத புள்ளை தப்பான வழிக்குப் போயிடக் கூடாதுல்ல, அதான்'| அத்தியாயம் - 20

அவன் மண்டையினுள், இவன் கால்மேல் போட்டு அமர்ந்திருக்க, சதாசிவம் முதுகு வளைந்து இவனிடம் வந்து, ``ரெம்யாவ எனக்கு விட்டுக் கொடுத்துடுங்க ரவி, வேற எந்தப் புள்ளை வேணும்னாலும் சொல்லுங்க... நானே உங்களுக்கு செட் பண்ணித் தாரேன்” என்று கெஞ்சினான்.

ஊசிப்புட்டான்

ஊசிப்புட்டான் | `அப்பாவ கொன்னவனுவளையும் இதே மாறி நானும் கொல்லணும்ணே...’| அத்தியாயம் -19

வெட்டி இழுத்துக் கொண்டிருந்தவனின் காலில் விழுந்த முதல் வெட்டிலிருந்து இரத்தம் வெகுவாய் வெளியேறிக் கொண்டிருக்க, அவன் உடலின் மீதமிருந்த வெட்டுக்களிலிருந்து வெளியேறிய குருதியின் ஓட்டம் கொஞ்சம் கொஞ்சமாய் மட்டுப் படத் துவங்கியிருந்தது.

ஊசிப்புட்டான்

ஊசிப்புட்டான் | `நம்மகிட்ட இல்லாத ஒரு விஷயத்த தொட்டுப் பாக்க ஆசப்படுறதுல என்ன தப்பு?’| அத்தியாயம் 18

இடதுபுறமாகத் திரும்ப, ரவி யதேச்சையாக வெளியே பார்க்க, அங்கே காலையில் பள்ளியிலும், மாலை பேருந்து நிலையத்துக்கு வரும் பாதையிலும் பார்த்த பெண்.

ஊசிப்புட்டான்

ஊசிப்புட்டான் | `மண்டி போட்டவனை வெட்டுறதைவிட அவனை ஓடவிட்டு...’ | அத்தியாயம் - 17

``எப்பவுமே நாம எதுக்கு எதிரா நம்ம பலத்தைப் பயன்படுத்துறோமோ, அப்போ நம்ம எதிர்ல இருக்கிற அதுக்கும் பலம் அதிகமாகிட்டே வரும்.”

ஊசிப்புட்டான்

ஊசிப்புட்டான் | `முத்துலிங்கத்தைத் தெரியுமான்னு கேட்டா, தெரியாதுன்னு சொல்லிடு" | அத்தியாயம் 16

``நீ சின்னப் பையன் ரவி. உன்னையவெச்சு காய்நவர்த்த இங்க ஒரு கூட்டம் சுத்திட்டு இருக்கானுவ. அதனால உங்கிட்ட வந்து எவனாச்சும் அண்ணாச்சியத் தெரியுமா... முத்துலிங்கத்தைத் தெரியுமான்னெல்லாம் கேட்டானுவன்னா தெரியாதுன்னே சொல்லிடு செரியா?”

ஊசிப்புட்டான்

ஊசிப்புட்டான்: `அவரு காலடியில ஒரு பொணம் கெடக்கு’ | அத்தியாயம் - 15

முத்துலிங்கம் பெயரைக் கேட்டதும் சட்டென ரவி நிமிர்ந்து உட்கார்ந்தான். குமார் சொல்லி முடிக்கவும், `அட இந்தப் பய வாயெத் தெறந்தாலே பொய் பொய்யா புழுவித் தள்ளுறான்...’

ஊசிப்புட்டான்

ஊசிப்புட்டான்: `எங்கப்பனைக் கொன்னவனோட ரத்தம்’ | அத்தியாயம் - 14

ரவியின் உடலில் ஒரு பதற்றம் தோன்றினாலும், அப்பாவைக் கொன்றவன் இறந்துகிடக்கும் கோலத்தைப் பார்க்கப்போகிறோம் என்கிற நினைப்பு அவனுக்கு ஆனந்தத்தைக் கொடுத்தது.

ஊசிப்புட்டான்

ஊசிப்புட்டான்: ``சின்னப் பயலுவதான் பார்த்ததை அப்படியே வந்து சொல்லுவானுவ!” | அத்தியாயம் - 13

``அதெல்லாம் ஒண்ணுமில்லடே. அவன் வேவு பார்த்தான்னாக்க சூப்பரு. ஒருவேள அவன் மாட்டேன்னு சொல்லிபுட்டான்னா… அதான் என்ன பண்றதுன்னு கேட்டேன்.”

ஊசிப்புட்டான்

ஊசிப்புட்டான்: `நீரு ஒண்ணும் அவ்ளோ நல்லவென் இல்லியேவேய்’ | அத்தியாயம் - 12

சின்னத்தம்பியின் கடையில்வைத்துத் தனக்கு அறிமுகமான மனிதர்கள் மிகச் சாதாரண மனிதர்கள் அல்ல. அசாதாரண மனிதர்களோடு பழகும் நாமும் சாதாரண மனிதன் அல்ல.

ஊசிப்புட்டான்

ஊசிப்புட்டான்: `அவசரப்பட்டு ஒளறிக் கொட்டிட்டியே ரவி’ | அத்தியாயம் - 11

``அவெம் சாவத்தான் கெடக்கான். அவெம் பொழச்சான்னா இவெம் வெளிய வருவான். இல்லேன்னா உள்ளயே கெடந்து களியெத் திம்பான். உனக்கு ஏம்மாரி இவனுவ சவவாசமெல்லாம்...”

ஊசிப்புட்டான்

ஊசிப்புட்டான்: `எவம்ல அந்த வாத்தியான்... அவெம் பேரு என்னல..?’ | அத்தியாயம் - 10

மீண்டுமொரு முறை கத்திகள் இரண்டையும் விட்டுச் சென்றிருந்த சுவடை உற்று நோக்கினான். உள்ளே இறங்கியவிதத்தில் இரண்டுமே ஒன்றுபோலவே தங்கள் சுவடை விட்டுச் சென்றிருந்தன.

ஊசிப்புட்டான்

ஊசிப்புட்டான்: ``பாடங்கத்துக் கொடுக்குத வாத்தியாங்கிட்ட மரியாத வேணும் சார்'' | அத்தியாயம் - 9

விஜயாவின் அந்த ஆழப்பார்வை வைகுண்டமணியின் உள்ளே கொம்பு முளைத்து உலாவிக் கொண்டிருந்த உருவத்தை ஊடுறுவவும், திகிலடைந்த அம்மிருகம்.

ஊசிப்புட்டான்

ஊசிப்புட்டான் : ``ஒனக்கு ஏம்டே இந்த எளவு வேலையெல்லாம்...'' | அத்தியாயம் - 8

``நீ வெச்சிருக்க கத்தியோட சமநிலை எடது கைக்கான சமநிலை. நீ ஒன்னோட வலது கையால இந்தக் கத்தியை எறக்குறப்ப கத்தி மொன, குத்து வாங்குனவன் எலும்புல மாட்டிக்கிச்சுன்னா கத்தியை அவ்ளோ சொலபமா வெளிய உருவ முடியாது கேட்டியா...”

ஊசிப்புட்டான்

ஊசிப்புட்டான்: ``இனி நாந்தா உன் மூத்தப்பா’’ | அத்தியாயம் - 7

``இவனுக்கு நீயென்ன அன்னாவியா..? ஏன் அத இவஞ்சொல்ல மாட்டானா..?” குரலை உயர்த்தி சின்னத்தம்பியிடம் கேட்டுவிட்டு, சாந்தமான குரலில், ``ஒம் பேரென்ன?’’ என ரவியிடம் கேட்கவும், நடுக்கத்துடன்கூடிய குரலில் ``ரவி” என்றான்.

ஊசிப்புட்டான்

ஊசிப்புட்டான்: ``நிலவின் பின்னணியில் ஓங்கு தாங்காய் ஒரு கரிய உருவம்” | அத்தியாயம் - 6

``இல்லை நான் என் விருப்பப்படிதான் வாழுவேன்னு நினைச்சேன்னா, ஏற்கெனவே பெத்த தகப்பனுக்குக் கொள்ளிவெச்சுட்ட மாதிரி இந்தத் தள்ளைக்கும் கொள்ளியவெச்சுட்டு உன் விருப்பம் போல எக்கேடும் கெட்டுப் போ...”

ஊசிப்புட்டான்

ஊசிப்புட்டான்: ``இப்ப யார் குடியைக் கெடுக்கப் போறே?” | அத்தியாயம் - 5

``அட என்ன மருமவனே நீ... எப்பப் பாத்தாலும் பேய் பிடிச்சவன் மாதிரியே பேந்தப் பேந்த முளிக்க?” முகம் நிறைய புன்னகையோடு கேட்ட பால்ராஜ், ``நாளைக்கு ஒடுக்கத்தி வெள்ளிக்கெழமயாச்சே... பதிக்கு போய் அன்னந்திங்கலாமான்னு கேட்டேன்” என்றார்.

ஊசிப்புட்டான்

ஊசிப்புட்டான் - `நம்பிக்கை வெச்சவனை ஏமாத்துறது எவ்ளோ பெரிய துரோகம்!' | அத்தியாயம் - 4

மாரி, அன்னிக்கு உன் அப்பா மட்டும் இல்லேன்னுவெச்சுக்கோ, இந்த சின்னத்தம்பியும் இல்லை, இந்தக் கடையும் இல்லை பார்த்துக்க” விரக்தியோடு பேசிய சின்னத்தம்பி, மீண்டும் தன் தலையைக் கடையிலிருந்து வெளிநீட்டி வெற்றிலைச் சாற்றைத் துப்பினான்.

ஊசிப்புட்டான்

ஊசிப்புட்டான் - `பட்டைக்கு எப்பயுமே பாளையங்கொட்டைதான்!'|அத்தியாயம் - 3

பகல் நேரங்களில் `அரிஷ்டம்’ என்று அரசாங்கத்தாலும், `மாம்பட்டை’ என்று பொதுமக்களாலும் அழைக்கப்பட்ட போதை வஸ்துவைக் குடிக்க அந்த ஊரிலிருக்கும், நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களும் வருவர்.

ஊசிப் புட்டான்

ஊசிப் புட்டான்: `பயப்படுறவன்தான் கத்துவான்' | அத்தியாயம் - 2

ஸ்கூல்ல என்னன்னா உங்கப்பன மாதிரி வரலாம்னு பார்க்குறியான்னு வாத்தியானுங்க அடிக்கிறானுங்க. கூடப் படிக்கிறவனுங்க என் உருவத்தைவெச்சு ஊசி ஊசின்னு கிண்டல் பண்றானுங்க.

ஊசிப் புட்டான்

ஊசிப் புட்டான் - சங்குத்துறைக் கடல் - அத்தியாயம் - 1

` `ஒங்கப்பன மாதிரி ஆகலாம்னு நினைப்பா?’ன்னு வேற கேட்கிறான். எங்கப்பன மாதிரி நான் இருந்திருந்தா ஒரு பய என்ன நெருங்கியிருப்பானா..? போட்டுருக்குற நிக்கர்லயே மூத்திரம் போயிருப்பானுக. பயந்தாங்கோலிக...’