Published:Updated:

அரசின் ஆட்குறைப்பு நடவடிக்கை! - தற்கொலைக்கு முயன்ற சுகாதார ஆய்வாளர்

கே.குணசீலன்

சுகாதார ஆய்வாளர் பணிக்கான ஆட்களைக் குறைக்கும் அரசின் உத்தரவால், பேராவூரணி அரசு மருத்துவமனை சுகாதார ஆய்வாளர் ஒருவர் தூக்கமாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Karuppasamy
Karuppasamy

தமிழகத்தில் சுகாதார ஆய்வாளர் பணிக்கான அரசாணை 337-ஐத் திரும்ப பெறக்கோரி தமிழகம் முழுவதும் சுகாதார ஆய்வாளர்கள், கடந்த 4-ம் தேதி முதல் கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், மதுரை மாவட்டம் கீழப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி கிரேட் 2-ல் 2014-ம் ஆண்டு சுகாதார ஆய்வாளர் பணியில் சேர்ந்துள்ளார். தற்போது, இவர் பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதி வட்டாரம் குறிஞ்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த 15 நாள்களாக விடுப்பில் சென்றுவிட்டு கடந்த 4-ம் தேதி மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார். பின்னர், அரசாணை குறித்து சக ஊழியர்களிடம் புலம்பியுள்ளார்.

Karuppasamy
Karuppasamy
கிரிக்கெட் வீரர் சந்திரசேகர் தற்கொலை! - சூதாட்ட கும்பல் நெருக்கடியா?

இதைத் தொடர்ந்து நேற்று துாக்கமாத்திரை தின்ற நிலையில், மயங்கி விழுந்துள்ளார். அவரை சக ஊழியர்கள் மீட்டு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று, சிகிச்சைக்காகச் சேர்த்தனர். இவருக்கு 7 மற்றும் 5 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் தஞ்சாவூர் மாவட்ட துணைத் தலைவர் அமுதவாணன் கூறுகையில், ``தமிழகத்தில், 5,000 மக்கள் தொகைக்கு, ஒரு சுகாதார ஆய்வாளர் வீதம் 8,000-க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டனர். 2006-ல், அப்பணியிடங்கள் 5,700 ஆக குறைக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம், 28-ம் தேதி, மீண்டும் சுகாதார ஆய்வாளர்களின் எண்ணிக்கையை, 3,400 ஆகக் குறைத்து, அரசாணை 377 வெளியிடப்பட்டது. மக்கள் தொகை பெருகிவரும் நிலையில், டெங்கு, சிக்குன்குனியா போன்ற பல்வேறு வகை காய்ச்சல் பரவி வருகிறது. நோய் தாக்குதலில் இருந்து மக்களைக் காக்கும் பொறுப்பு, சுகாதார ஆய்வாளர்களுக்கு உள்ளதால், பணிச்சுமை அதிகரித்துவருகிறது. இந்த ஆள் குறைப்பால், எதிர்காலத்தில், நோயைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்படும்.

Karuppasamy
Karuppasamy
நேரத்தோடு வந்தார்; வகுப்பறையில் தூக்கில் தொங்கினார்! - சக மாணவிகளை பதறவைத்த தோழியின் தற்கொலை

இதுகுறித்து, அரசிடம் கேட்டால், நோயை முழுமையாகக் கட்டுப்படுத்திவிட்டதாகத் தெரிவிக்கின்றனர். ஆனால், டெங்கு உள்ளிட்ட நோய்கள், திடீரென பரவுகின்றன. அதைக் கட்டுப்படுத்த, அதிக பணியாளர்கள் தேவை. சுகாதார நிலையங்களில் கிரேடு ஒன்று, களப்பணியில் கிரேடு இரண்டு என ஆய்வாளர்கள் பணிபுரிந்தனர். தற்போது, இரு பணியிடங்களையும் ஒன்றாக்கிவிட்டனர். இதனால், பலர் பதவியிறக்கம் செய்யப்பட்டனர். இனி, பதவி உயர்வும் கிடைக்காது.

`தமிழைக் கொலை செஞ்சு உடலை எரிச்சுட்டோம்!" - போதையில் உளறி சிக்கிக்கொண்ட நண்பர்கள்

இதைக் கண்டித்து, தற்போது கறுப்பு பேஜ் அணிந்து போராட்டம் நடத்தி வருகிறோம். இம்மாதம் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் சென்னை இயக்குநர் அலுவலகத்தில் 48 மணி நேரம் தொடர் உண்ணாவிரதம் இருக்கத் திட்டமிட்டுள்ளோம். சுனாமி, கொள்ளை நோய், தானே புயல், கஜா புயல் இவை அனைத்திலும் எங்கள் பங்களிப்பு என்பது வார்த்தைகளால் சொல்லக்கூடியதல்ல. அரசாணையை ரத்து செய்து மீண்டும் எங்கள் உரிமையை எங்களுக்கே அளிப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்'' என்றார்.