சுட்டி ஸ்டார் நியூஸ்!
புதிர் பக்கங்கள்
Published:Updated:

டெக் பிட்ஸ்

டெக் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
டெக் பிட்ஸ்

மு.பிரசன்ன வெங்கடேஷ்

இரும்பில் செய்த எறும்பும் பறக்கும் குளவியும்!

பிரமாண்டமாக எதாவது செய்தால்தான் சூப்பர்ஹீரோ என்ற கான்செப்டைக் காலி செய்ய 2015-ல் மார்வெல் உருவாக்கி வெளியிட்ட கதாபாத்திரம்தான் ஆன்ட் மேன். மற்ற சூப்பர் ஹீரோ படங்களைப் போலவே பாக்ஸ் ஆபீஸில் ஹிட்டான படம். அதன் பிறகு சிவில் வாரில் பிரமாண்டமாகத் தோன்றி ரசிகர்களை குஷிப்படுத்தினார் ஆன்ட்-மேன். தற்போது அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றிருக்கும் நிலையில், மார்வெல்லின் ஆன்ட்- மேன் வரிசையில் ஜூலை மாதம் வெளியாக இருக்கிறது, ‘ஆன்ட்மேன் அண்ட் தி வாஸ்ப்.’ இந்த இரண்டாம் பாகத்தில் ஆன்ட்மேனுடன், வாஸ்பும்(குளவி) இணைய உள்ளதால் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது. டபுள் கொண்டாட்டம்தான்!

டெக் பிட்ஸ்

வாங்க இசைக்கலாம்!

சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே இசையின்மீது ஆர்வமிருக்கும். குழந்தைகளுக்கு எனத் தனியாகப் பெரிய பெரிய இசைக்கருவிகள் வாங்க முடியாதுதானே?அதற்காகவே இருக்கிறது இந்த ‘மியூசிக் மேட்’. ட்ரம்ஸ் முதல் பியானோ வரை பல வகையான இசைக்கருவிகள் சென்ஸிபிள் டச் முறையில் ஒரே மேட்டில்(Mat) கொடுத்திருக்கிறார்கள். நீங்கள் கேட்டு வாசிக்கப் பல ட்யூன்களை இன்பில்ட் ஆகக் கொடுத்து  இருக்கிறார்கள். அதே போல் நீங்களே உருவாக்கும் ட்யூன்களை ரெக்கார்டு செய்யும் வசதிகளையும் கொண்டுள்ளது. இசையை விரும்பும் குழந்தைகளுக்கான சிறந்த கேட்ஜெட் மியூசிக் மேட்.

டெக் பிட்ஸ்

அமேசான் லிங்க்: https://goo.gl/PAA1P5

ரேஸ் விட்டுக்கலாமா?

ப்ளே ஸ்டேஷனோ, ஆண்ட்ராய்டோ ரேஸிங் கேம்ஸஸோ எப்போதுமே அதற்கு மவுசு அதிகம். ப்ளே ஸ்டேஷன்களுக்கு இணையாக கிராபிக்ஸிலிருந்து சவுண்டு சிஸ்டம் வரை போட்டி போடுகிறது இந்த ‘ட்ராபிக் ரைடர்’. ரியல் பைக் சவுண்டுகள் ரெக்கார்டு செய்யப்பட்டு அதை கேமில் உபயோகித்திருக்கிறார்கள். இது உண்மையில் நாம் ஒரு வாகனத்தை இயக்குவதைப் போன்ற ஓர் உணர்வைத் தருகிறது. 26 பைக்குகள், 70க்கும் மேற்பட்ட மிஷின்கள் எனக் கலக்கலாக இருக்கின்றன. ப்ளே ஸ்டோரில் ரேஸ் கேம் வகையில் இது டாப் 5-ல் இடம் பிடித்திருக்கிறது.

டெக் பிட்ஸ்

கூகுள் ப்ளேஸ்டோர் லிங்க்: https://goo.gl/RB1NRT

ஆர்வம் இருந்தால் அறிவை வளர்க்கலாம்!

வானவியல், அறிவியல், உணவு, கலாசாரம், புதுமையான இடங்கள், மனம் மற்றும் ஆன்மா என மேற்கண்ட தலைப்புகளில் மட்டுமல்லாது பல வித புதுமையான தலைப்புகளிலும் தினம் தினம் சுவாரஸ்யமான கட்டுரைகளைப் படிக்கச் சிறந்த ஆப் இது. நமக்குப் பிடித்தமான தலைப்புகளைத் தேர்ந்தெடுத்துவிட்டால் போதும்; தினமும் அதில் சாதாரணமாக நாம் அறிந்த செய்திகளைத் தாண்டி மிகவும் சுவாரஸ்யமான ‘அட’ சொல்லும் படியான தகவல்களை அள்ளிக் கொடுக்கும். படிப்பதற்குச் சிரமமாக இருந்தால் ‘பாட் கேஸ்ட்’ எனும் செவி வழியாகக் கட்டுரைகள் கேட்கும் வசதியும் இதில் உள்ளது. கூகுள் ப்ளேஸ்டோர் லிங்க்: https://goo.gl/xopo1T

டெக் பிட்ஸ்

தெரியுமா?

‘முதல் இந்திய விண்வெளி வீரர், ராகேஷ் ஷர்மா.’