
குட்பை 2018 - அறிவியல்

பிப்ரவரி 15, PSLV C-37 என்ற ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியது இஸ்ரோ. இவற்றில் 103 செயற்கைக்கோள்கள், வெளிநாட்டைச் சேர்ந்தவை.

அறிவியல் ஆராய்ச்சிகளுக்காக வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான நோபல் பரிசு, அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது. 2018-ம் ஆண்டில், இயற்பியல் மற்றும் வேதியியல் பிரிவில் மூன்று பேருக்கும், மருத்துவத்துறையில் ஒருவருக்கும் அளிக்கப்பட்டது.

உலகின் முதல் 5G நெட்வொர்க், தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில், வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. ஒரு நொடிக்கு 10 GB வரையிலும் டேட்டாவைப் பரிமாறலாம் என்பது 5G-யின் ஸ்பெஷல்.

குழந்தைகளுக்கான விளையாட்டு பொருள்களை வீடியோவில் விமர்சித்து, யூடியூப் மூலம் அதிகம் சம்பாதிக்கும் நபராக 7 வயது ரியான் புகழ்பெற்றார். 1.75 கோடி சந்தாதாரர்களை இவரது யூ-டியூப் சானல் பெற்றுள்ளது.

பிரீமியம் மொபைல்களில் குறிப்பிடத்தக்க பிக்ஸல் மொபைல்கள், அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டன. பிக்ஸல் வகை மொபைல்களில் முதல் வயர்லஸ் சார்ஜிங் மொபைல் இவைதாம்.

ஓட்டுநர் இல்லாத தானியங்கி கார்களை Waymo என்ற பெயரில் தயாரித்து சோதனை செய்த கூகுள், 2018-ம் ஆண்டு, முதன்முறையாக அவற்றை டாக்ஸி சேவைகளுக்காகப் பயன்படுத்த ஆரம்பித்தது. டிசம்பர் மாதம் இந்தச் சேவை தொடங்கப்பட்டது.

இந்த ஆண்டில் நடைபெற்ற FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், எலெக்ட்ரானிக் பர்பாமன்ஸ் அண்டு டிராக்கிங் சிஸ்டம் (EPTS), வீடியோ அசிஸ்டன்ட் ரெஃப்ரீ (VAR), கோல் லைன் தொழில்நுட்பம் (GLT), 4K வீடியோ போன்ற நவீனத் தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அமேசான் அலெக்சா ஸ்மார்ட் ஸ்பீக்கர், நம்மோடு உரையாடவும், அலாரம் செட் செய்யவும், பாடல்களை ஒலிக்கவும் செய்யும். இந்த ஸ்பீக்கர், நமது வீட்டின் டிஜிட்டல் அசிஸ்டன்ட் என எடுத்துக்கொள்ளலாம்.
ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 படத்தில், 4D சவுண்டு சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட முதல் திரைப்படம் இதுதான்.

BBC Earth: Life in VR app 2018-ம் ஆண்டு, கூகுள் பிளே விருதுகளில் வெற்றிபெற்ற ஆப் இது. சிறந்த VR அனுபவம் தரக்கூடிய பிபிசியின் ஆப்பான இது, கடலுக்கு அடியில் இருக்கும் உலகைத் தெரிந்துகொள்ள உதவுகிறது. குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் காட்சிகள் இருப்பது சிறப்பு.

வாட்ஸ்அப்பில் பரவும் போலிச் செய்திகளைத் தடுக்கும் நோக்கில், ஃபார்வர்டு செய்யும் மெசேஜ்களை கண்டுகொள்ளும் புதிய வசதியை அறிமுகம் செய்தது, வாட்ஸ்அப். குழுக்களில் வரும் செய்திகள் ஃபார்வர்டு செய்யப்பட்டதா என்பதைக் கண்டறிய இந்த ஃபார்வர்டு லேபிள் உதவியது.
ரஞ்ஜித் வெ.ரா