Published:Updated:

கேம்ஸ்டர்ஸ் - 8

கேம்ஸ்டர்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
கேம்ஸ்டர்ஸ்

பெரிய RAM கொண்ட மொபைல்களில் Call Of Duty, PUBG என விளையாடினாலும், இக்கால பள்ளி மாணவர்களிடம் நீங்கா இடம்பிடித்தது Garena-வின் Free Fire-தான்

1993-ம் ஆண்டு வெளியான மேரியோ படம் விமர்சனரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பலத்த அடி வாங்க, இனி தங்களின் படைப்புகளை சினிமாக்களாக மாற்றும் உரிமையைத் தர மாட்டோம் எனப் பிடிவாதம் பிடித்துவந்தது Nintendo. தற்போதுதான் அதற்கான காலம் கனிந்திருக்கிறது. கேமர்கள் பெரிதாக எதிர்பார்த்துக் காத்திருந்த Nintendo Direct வைபவத்தில் பல இன்ப அதிர்ச்சிகளை வெளியிட்டிருக்கிறது Nintendo நிறுவனம். அந்த அறிவிப்புகளில் முக்கியமானது, மேரியோவை மீண்டும் திரைப்படமாக எடுக்கவிருக்கிறார்கள் என்பதுதான். 2022 டிசம்பரில் வெளியாகவிருக்கும் இந்தப் பெயரிடப்படாத படத்தில் நாயகன் மேரியோவுக்குக் குரலுதவி செய்யவிருக்கிறார் ‘கார்டியன்ஸ் ஆஃப் கேலக்ஸி' புகழ் கிறிஸ் பிராட். மேரியோ, லுயூகி, பௌசர், டாங்கி காங், டாட், கிராங்கி காங் என வீடியோ கேம் உருவங்களைப் பெரிய திரைக்கு அழைத்துவரும் வேலையை Nintendoவுடன் Illumination குழுவும் இணைந்து செய்கிறது. ‘இந்தக் கதாபாத்திரங்களுக்குத்தான் வசனமே பெரிதாக இருக்காதே, அதற்கு எதற்கு இத்தனை நபர்கள்’ என யோசிக்கிறீர்களா? ஆங்கிரி பேர்டு விளையாட்டில் கூடத்தான் வசனம் இருக்காது, அதற்காக அப்படியேவா விட்டுவிட்டார்கள். ‘மானே தேனே பொன்மானே’ எனப் படத்தை சுவாரஸ்யமாக்கிவிடுவார்கள் என நம்பலாம்.

கேம்ஸ்டர்ஸ் - 8
கேம்ஸ்டர்ஸ் - 8

பெரிய RAM கொண்ட மொபைல்களில் Call Of Duty, PUBG என விளையாடினாலும், இக்கால பள்ளி மாணவர்களிடம் நீங்கா இடம்பிடித்தது Garena-வின் Free Fire-தான். தங்கள் தந்தையர்தம் மிட்ரேஞ்ச் பட்ஜெட் மொபைல்களில் எளிதாக விளையாடக்கூடிய BATTLE ROYALE-ஐ உருவாக்கி அசத்தியது Free Fire. 50 போட்டியாளர்கள், 1 சர்வைவர் எனக் கலக்கி 1 பில்லியன் டவுன்லோடுகளுக்கு மேல் அள்ளிய Free Fire, தற்போது அடுத்த வெர்ஷனான Free Fire MAX-ஐ வெளியிட்டிருக்கிறது. ‘எல்லாவற்றிலும் கொஞ்சம் எக்ஸ்டிரா கேட்பவர்களுக்கு இந்த வெர்ஷன்’ என்கிறது garena. ஏற்கெனவே முன்பதிவு செய்தவர் களுக்கு பிரத் யேகமாக செப்டம்பர் இறுதியில் இந்த வெர்ஷன் வெளியாக, தல தளபதி டிரெய்லரைப் பார்ப்பதுபோல ஹிட்ஸை அள்ளிக் குவித்து வருகிறார்கள் Free Fire கேமர்ஸ். வெளியான பத்து மணி நேரத்தில் 10 மில்லியன் மக்கள் இந்த கேமை டவுன்லோடு செய்திருக்கிறார்கள். இன்னும் அந்த விளையாட்டு சூடுபிடிக்க வில்லை என்பதால், அறிமுகத்தோடு Free Fire MAx-க்கு குட்பை சொல்லுவோம். டியர் பேரன்ட்ஸ், உங்கள் மொபைலிலும் இந்த கேம் டவுன்லோடு செய்யப்பட்டிருக்கலாம்.

Third-person shooter

கடந்த வாரம் FPS (First Person Shooter) பார்த்தோம் இல்லையா? இந்த வாரம் TPS அதாவது Third person Shooter. Call of Duty போன்ற சில விளையாட்டுகளில் இந்த இரண்டு ஷூட்டர் மோடிலும் நம்மால் விளையாட முடியும். TPS பற்றி உங்கள் கண்முன் எளிதாகக் கொண்டுவர வேண்டும் என்றால், அதற்கு Contra உதவும். 90ஸ் கிட்ஸில் பலருக்கு அறிமுகமானதொரு விளையாட்டு Contra. இரண்டு வீரர்கள் விளையாடக்கூடிய இதில் மணிக்கணக்கில் சுட்டுக்கொண்டே இருப்போம். ஆம், விளையாடும் நாமே, நம் முழு உருவத்தையும் துப்பாக்கி ஏந்தியபடி பார்க்க முடியும் விளையாட்டுகளை TPS விளையாட்டுகள் என அழைக்கிறார்கள். துப்பாக்கி, தோட்டா, கத்தி, கிரனேட், அவசர ஆயுள் என FPS விளையாட்டுகளில் இருக்கும் அனைத்தும் இதிலும் உண்டு. SEGA நிறுவனத்தின் Space harrier, Atari-இன் Xybots என இந்தவகை விளையாட்டுகளுக்குப் பல முன்மாதிரிகள் உண்டு. 90-கள் வரை 2டியில் இருந்த விளையாட்டு, அதற்குப் பின்னர் 3டி வடிவத்தில் வர ஆரம்பித்தது. இவற்றுள் சினிமா, கேம் என இரண்டிலும் மெகா ஹிட் அடித்த இரு விளையாட்டுகள் Max Payne, Resident Evil தான்.

கேம்ஸ்டர்ஸ் - 8
கேம்ஸ்டர்ஸ் - 8

இப்படி விளையாட்டு களிலிருந்து சினிமாவான படங்களில், இரண்டி லும் ஹிட் அடித் தவை எவை தெரியுமா? வழக்கம்போல, வேறொரு வாரத்தில் சொல்கிறேன்...

கடந்த வாரம் பார்த்த Into The dead 2, அதற்கு முன்பு எழுதிய Last day on earth போன்ற சில ஜோம்பி விளையாட்டுகளின் மொத்த உருவமாக வெளியாகியிருக்கிறது Left to Survive. உலகை ஜோம்பிக்கள் எடுத்துக்கொள்ள, ‘ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது’ என்கிற நிலைக்குச் செல்கிறார்கள் மனிதர்கள். ஆனால், இந்த ஜோம்பிக்களை உருவாக்கியது ஒரு குழு என விரிகிறது கதை. அவர்கள் யார், எங்கெல்லாம் இந்த ஜோம்பி வேட்டை நம்மை இட்டுச் செல்கிறது என முடிந்தவரை சுவாரஸ்யம் சேர்த்திருக்கிறார்கள். பெரிதாக நகரும் வேலைகள் இல்லை. அதை சிஸ்டமே பார்த்துக்கொள்ளும். தலையைக் குறி பார்த்துச் சுட்டால் கூடுதல் போனஸ், அவ்வளவே!

ஜோம்பிக்களைச் சுட்டு போராடிக்கிறதா, மனிதர்களுடன் இந்த மோடில் ஜாலியாக சண்டை செய்யலாம். குறிப்பிட்ட நேரத்துக்குள் எத்தனை முறை நீங்கள் மரணிக்கிறீர்களோ அதற்கேற்ப புள்ளிகள் குறையும். இறுதி வரையில் விழா நாயகனாக இருப்பவர்கள்தான் அந்த நாளின் விழா நாயகன்.

கேம்ஸ்டர்ஸ் - 8

Campaign

இதுவொரு கதைசொல்லி மோடு. ஒவ்வொரு லெவலுக்கும் ஒரு தக்காளியை நீங்கள் செலவு செய்ய வேண்டும். எனர்ஜியைத் தக்காளிகளாக வடிவமைத்திருக்கிறார் குசும்புக்கார டெவலப்பர். ஒவ்வொரு பிரதேசமாக நாம் செல்ல வேண்டும். வித்தியாசமான துப்பாக்கிகள், வினோதமான ஜோம்பிகள் என படிக்கட்டுகள் ஏற ஏற கடினமான மோடுக்குள் நாம் செல்ல ஆயுத்தமாக வேண்டும். மூளை வீங்கி ஜோம்பி; வயிறு வீங்கி ஜோம்பி, விரைந்து வரும் ஜோம்பி என ‘புதுசு கண்ணா புதுசு’ ஸ்டைலில் பல ஜோம்பிக்களை இதில் புகுத்தியிருக்கிறார்கள்.

கேம்ஸ்டர்ஸ் - 8

Clan

இதில் நீங்களாகவே ராம்நாடு டைகர்ஸ், சென்னை எருமைஸ் போன்ற குழுக்களில் உங்களை இணைத்துக்கொண்டு அடுத்த கட்டம் நோக்கி நகரலாம்.

Camp

ஜோம்பிக்களிடம் இருந்து உங்களைத் தற்காத்துக்கொள்ள இந்த கேம்பில் கட்டடங்களை எழுப்ப வேண்டும். Town centre, Farm, Armory, Warehouse எனப் பல பெயர்களில் கட்டடங்களை அப்கிரேடு செய்ய வேண்டும். ஆரம்பத்தில் சில நிமிடங்கள் மட்டுமே நாம் காத்திருக்க வேண்டும். அடுத்து வழக்கம்போல, சில கட்டடங்களை எழுப்பச் சில மணி நேரம்கூட ஆகலாம். ஆனால், அதற்காகவெல்லாம் அவசரப்பட்டுப் பணம் செலவு செய்யக்கூடாது என்பதை நினைவில் கொள்ளவும்.

- Downloading...

கேம்ஸ்டர்ஸ் - 8
கேம்ஸ்டர்ஸ் - 8

( + ) சின்னச் சின்ன கேம்கள்.

( + ) பல மோடுகள் இருப்பதால், நமக்குப் பிடித்தமானதில் சில நிமிடங்கள் ஆடினால் போதுமானது.

( - ) கிராஃபிக்ஸில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.