Published:Updated:

கேம்ஸ்டர்ஸ் - 11

கேம்ஸ்டர்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
கேம்ஸ்டர்ஸ்

‘கொரியன் விளை யாட்டுகளை நாம் விளையா டக்கூடாதா’ என்பது உங்கள் கேள்வியாக இருப்பின், நிச்சயம் விளையாடலாம்.

ஒருவழியாக Uncharted கேம், திரைப்படமாக 2022 பிப்ரவரியில் வெளியாகவிருக்கிறது. டாம் ஹோலாண்டு, மார்க் வால்பெர்க், ஆண்டோனியோ பண்டாரெஸ் எனப் பெரிய நடிகர் பட்டாளத்துடன் களமிறங்குகிறது uncharted. பிளே ஸ்டேஷன்களில் சக்கைப்போடு போட்ட இந்த விளையாட்டைப் பல ஆண்டுகளாகத் திரைப்படமாக மாற்ற பலர் முயற்சி செய்தார்கள். இப்போதுதான் காலம் கனிந்திருக்கிறது. வீடியோ கேம்களில் வரும் நேத்தன் டிரேக் கதாபாத்திரத்தின் முன்கதையைச் சொல்லியிருக்கிறது இத்திரைப்படம்.

ஆனால், ஹாலிவுட்காரர்கள் இத்தனை ஆண்டுகள் மெனக்கெட்டதை, நம் நவரச தளபதி (சொல்லிக்குவோம்) கௌதம் கார்த்திக்கை வைத்து அன்றே எடுத்துவிட்டார் ‘சக்கரக்கட்டி’ இயக்குநர் என்பதுதான் காலத்தின் விபரீத விளையாட்டு.

கேம்ஸ்டர்ஸ் - 11
கேம்ஸ்டர்ஸ் - 11

வெளிநாடுகளில் இருக்கும் உறவுக்காரர்களிடம் சல்லிசான விலையில் ‘EXPORT QUALITY' பொருள்கள் வாங்கியிருக்கிறீர்களா? ஆசைஆசையாய் கஸ்டம்ஸ் கண்ணெல்லாம் மண்ணைத் தூவி பார்சலைப் பிரித்தால் ஜிலேபியைப் பிய்த்துப் போட்டு வைத்திருப்பார்கள். சீனத் தயாரிப்பு என்பதற்காக, பாக்ஸும் சீன மொழியிலேயே இருக்கும். Settings பட்டனைக் கண்டுபிடிப்பதற்குள் மதியம் சாப்பிட்ட பிரியாணி மொத்தமாய்ச் செரித்துவிடும். அப்படியானதொரு அனுபவத்தைக் கொடுத்தது 9S Play Developer சார்பில் வெளியான T1: Lost Gold Realm. முன்னோட்டங்களில் கிராபிக்ஸ் எல்லாம் அட்டகாசமாக இருக்க, துண்டைப் போட்டு வைத்தேன். ஒரு சுபயோக சுபதினத்தில் ‘வாங்க, வந்து டவுன்லோடு பண்ணிக் கோங்க’ என்ற அழைப்பு வர, இன்ஸ்டால் செய்துவிட்டுப் பார்த்தால், எல்லாமே கொரியனாக இருக்கிறது. செட்டிங்ஸ் பட்டனைக் கண்டுபிடித்தால் செட்டிலாகிவிடலாம் என யோசித்து, அதற்குள் 4 ஜிபி வரை டவுன்லோடு செலவாகிவிட்டது. விளையாடிக்கொண்டிருக்கும் போது புதிதாக சில பாப் அப்கள் வரும். குத்துமதிப்பாகக் குத்தினால், கேம் வெளியே வந்துவிடும். கொரிய மொழியில் இனியாவது எது EXIT, ENTER என்பதைக் கற்று வைக்க வேண்டும். சரி, நாம் மட்டும்தான் இப்படி கஷ்டப்படுகிறோமா என கேமின் ரிவ்யூ செக்‌ஷனை க்ளிக் செய்தால், உலகமே புலம்பி வைத்திருக்கிறது. கேமிங் டெவலப்பர்களோ, ‘எதிர்காலத்தில் ஆங்கில வெர்ஷனை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம். நீங்கள் ஏன் எங்கள் பிற விளையாட்டுகளை சோதனை செய்து பார்க்கக்கூடாது’ என ‘டுபாக்கூர் ஹோட்டல்’ ஸ்டைலில் வருக வருக சொல்லிக்கொண்டு இருக்கி றார்கள். #KoreanTheriyaadhuPoda

கேம்ஸ்டர்ஸ் - 11
கேம்ஸ்டர்ஸ் - 11
கேம்ஸ்டர்ஸ் - 11
கேம்ஸ்டர்ஸ் - 11

Fighting Games

‘கொரியன் விளை யாட்டுகளை நாம் விளையா டக்கூடாதா’ என்பது உங்கள் கேள்வியாக இருப்பின், நிச்சயம் விளையாடலாம். Girl cafe gun என்றொரு புரியா விளையாட்டை ஒரு வாரமாக விளையாடிக் கொண்டி ருக்கிறேன். பேசுவதுதான் கொரியன். சப்டைட்டில் இருக்கிறது. மொத்தமாய்ப் புரிந்த பின்னர், விரிவாய்த் திருவாய் மலர்வோம். ஜோம்பி கேம் ஏதேனும் தேவை என நினைப்பவர்கள் Last fortress: underground முயற்சி செய்யலாம். ஜோம்பிக்களிடம் இருந்து தப்பிக்க நால்வர் கூட்டணிக்கு ஒரு Fortress கிடைக்கிறது. எப்படி இந்த இடத்தில் பதுங்கி தேவையானதைச் செய்கிறார்கள் என நீள்கிறது. கிராபிக்ஸ் கொஞ்சம் அப்படி இப்படி என இருந்தாலும், கதையாக சிறப்பாகவே இருக்கிறது. மறுபடியும் ஜோம்பியா, சின்ன கேம் எதுனா இருக்குதா என்போர் BB RACING 2 முயலலாம். சின்னச் சின்ன LAP, ஜாலியான வண்ண வண்ண அனிமேஷன், குட்டி ஜீப்புகள், பொம்மைகள் என ‘குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும்' வகை கேம் இது.

இதொடரின் இரண்டாவது எபிசோடில் லைட்டாக ஆரம்பித்து, அப்படியே விட்டுவிட்ட சண்டை விளையாட்டுகளைக் கொஞ்சம் ரீவிசிட் செய்யலாம். ‘ஒத்தைக்கு ஒத்த வாரியா’வின் ஆதிகால வெர்ஷன் இது. RESIDENT EVIL விளையாட்டுகளைத் திரைப்படமாக மாற்றி உலகப்புகழ் பெற்ற பால் ஆண்டர்சன், முதலில் கை வைத்த ஃபர்னிச்சர் MORTAL KOMBAT தான். 92-ல் வெளியான விளையாட்டை வைத்து, 95திலேயே திரைப்படம் எடுக்கக் கிளம்பிவிட்டார் அவர். தற்போது 2021-ல் மீண்டும் அந்தப் படத்தை ரீபூட் செய்து ஹிட் அடித்தது ஹாலிவுட். படமே மீண்டும் மீண்டும் எடுக்கிறார்கள் என்றால், கேமை மட்டும் அப்படியே விட்டுவிடுவார்களா என்ன?

அதீத வன்முறை

அமெரிக்க கேம் டெவலப்பரான மிட்வே கேம்ஸ் வெளியிட்ட இந்த கேம், தன் முப்பதாவது ஆண்டை நோக்கி வெற்றி நடைபோட்டுக் கொண்டி ருக்கிறது. குறிப்பிட்ட நேரத்துக்குள் யாருடைய ஆரோக்கியக் குறியீடு மொத்தமாய் முடிகிறதோ அவர்கள் அவுட். ஷாங் ஸுங் தீவில் வெவ்வேறு இடங்களில் போட்டி நடைபெறும். கொடுக்கப்பட்ட ஏழு வீரர்களில், ஒருவரை நாம் தேர்ந்தெடுத்து க்கொள்ளலாம். சிங்கிள் பிளேயர் மோடில் ஆறு வீரர்களை அவுட் செய்தவுடன், ஏழாவது போட்டிக்கும் நாம் எடுத்த வீரரே எதிர்ப்பக்கமும் வருவார். அவரையும் வென்றதும் endurance போட்டிகள் தொடங்கும். நம்மிடம் இருக்கும் ஆரோக்கியப் புள்ளிகளை வைத்து மூன்று வீரர்களைத் துவம்சம் செய்ய வேண்டும். ஒவ்வொரு போட்டி முடிந்ததும், அடுத்த ஹீரோ உள்ளே வருவார். நேரம் முதலிலிருந்து குறையத் தொடங்கும். ஆனால், முந்தைய போட்டியில் அதிகம் அடி வாங்கியிருந்தாலும், ஆரோக்கிய ரேகையில் எந்த மாற்றமும் செய்யப்படாது. அப்படியே தொடர வேண்டும் என்பதுதான் ஆட்டத்தின் விதி. இறுதியாக ஷாங் ஸுங்குடன் போட்டி போட வேண்டும். முதல் மார்ட்டல் காம்பேட்டின் கதை இதுதான். 93-ல் வெளியான அடுத்த வெர்ஷனில் ஷாங் ஸுங்கின் மாஸ்டர் ஷாவோ கானை வெல்ல வேண்டும். இப்படியாக கிளைக்கதைகள், தொடர் கதைகள் என எட்டு வழிச்சாலையாக நீண்டுகொண்டே செல்கிறது MORTAL KOMBAT .

கேம்ஸ்டர்ஸ் - 11
கேம்ஸ்டர்ஸ் - 11
கேம்ஸ்டர்ஸ் - 11
கேம்ஸ்டர்ஸ் - 11
கேம்ஸ்டர்ஸ் - 11

மிட்வே கேம்ஸ் நிறுவனம் ஒருகட்டத்தில் குட்பை சொல்ல, வார்னர் பிரதர்ஸ் இதை மொத்தமாய்க் குத்தகைக்கு எடுத்தது. ஒரு பக்கம் MORTAL KOMBAT ஹீரோக்கள் இன்னொரு பக்கம் பேட்மேன், சூப்பர்மேன், ஜோக்கர், வொண்டர் வுமன் என வேற லெவல் வெரைட்டி காட்டிய வரலாறு எல்லாம் இருக்கிறது.

ஆண்டிராய்டில் நாம் விளையாடும் வெர்ஷன் 2015-ம் ஆண்டு வெளியானது என்றாலும், தொடர்ச்சியான அப்டேட்டுகள் மூலம், இன்னும் அதிரடியாக இருக்கிறது MK. சினிமாவில் பார்த்த வில்லன்கள், ஏலியன்கள் போன்றவர்களையும் நம்மால் நம் அணிக்குள் இணைத்துக் கொள்ள முடியும்.

3x3 போட்டிகள்: நம் அணியில் மூன்று பேரைத் தயார் செய்ய வேண்டும். எதிரணியில் இருக்கும் மூன்று பேரை அவுட் ஆக்க வேண்டும்.

SURVIVOR: மேலே ENDURANCE எனக் குறிப்பிட்ட விதி, சர்வைவர் போட்டிகளுக்குப் பொருந்தும்.

QUEST MODE: மூலக் கதை பிடிக்கவில்லையெனில், QUEST MODE-ல் வேறு சில கிளைக்கதைகளிலும் ஆடிப்பார்க்கலாம்.

இந்த மோடுகள் அல்லாமல், அவ்வப்போது சவால்கள், புதிய டவர்கள் என நம்மை பிஸியாகவே வைத்திருக்க வல்லது இந்த மார்ட்டல் காம்பேட்.

- Downloading...