
பேக்-மேன் கேம் விளையாடி யிருக்கிறீர்களா? அதுதாங்க ‘கேம் ஓவர்’ திரைப்படத்தில் டாப்ஸி விளையாடிக்கொண்டே இருப்பாரே, அதுதான்.
வீடியோ கேம்கள் என்பவை இனி தவிர்க்கவே முடியாத ஒன்றாக மாறிவிட்டன. நீங்கள் அவற்றைக் கட்டுப்படுத்தலாமே தவிர முற்றிலுமாய்த் தடை செய்துவிட முடியாது.
சரியாகச் சொல்வதாயின் தொடரின் ஐந்தாவது அத்தியாயத்தில் நெட்பிளிக்ஸிலும் இனி வீடியோ கேம்கள் வரவிருக் கின்றன என்று சொல்லியிருந்தேன். நெட்பிளிக்ஸ் ஒருவழியாய் அதைக் கொண்டுவந்து விட்டது. நெட் பிளிக்ஸ் செயலி யிலேயே இனி வீடியோ கேம்கள் ஆட முடியும். Valeria, Stranger Things போன்ற நெட் பிளிக்ஸின் படைப்பு களையும் கேம்களாக மாற்றியிருக்கிறார்கள். இது கிட்டத்தட்ட கேமர்களை வீடியோ பக்கம் இழுக்கும் உத்திதான். நெட்பிளிக்ஸ் சந்தாதாரர்களால்தான் இதில் விளையாட முடியும். சில விளையாட்டுகளை இணைய வசதி இல்லாமலும் ஆட முடியும். ‘கிட்ஸ் மோடில் நெட்பிளிக்ஸைப் பயன்படுத்துபவர்களுக்கு கேம்ஸ் காட்டாது’ என அறிவித்திருக்கிறது நெட்பிளிக்ஸ். ‘பெரியவர்களுக்கான புரொபைல்களில் பின் நம்பர் செலுத்தித்தான் கேம்களைப் பார்க்க முடியும்’ என்றெல்லாம் சுத்தி சுத்தி எழுதியிருக்கிறது நெட்பிளிக்ஸ். ‘நாங்கள் காட்ட மாட்டோம், ஆனால் நீங்க விளையாடிக்கலாம்’ என்பதுதான் அந்தத் துருப்புச் சீட்டுக்கான குறியீடு.




ஒரு சினிமா ஹிட்டானால், அதன் அடுத்த கட்டம் என்பது சீக்குவல்களும், வீடியோ கேம்களும்தான். வினோத ஜந்துகள் சூழ் புதிய உலகுடன் களமிறங்கி ஹிட் அடித்த திரைப்படம் ‘A Quiet Place.’ சத்தம் மட்டும்தான் அந்த ஜந்துக்களுக்குப் பிரச்னை. குண்டூசி சத்தம் கேட்டாலும், அதை வைத்து மனிதர்களை இரையாக்கிவிடும். முதல் பாகமும், இரண்டாம் பாகமும் ஹிட் அடிக்க, அடுத்த ஆண்டு வீடியோ கேமாக வெளியாக விருக்கிறது A quiet Place.
World War Z, Evil Dead: The Game என ஏற்கெனவே திரைப்படங்களை வீடியோ கேம்களாக மாற்றிய அனுபவமிக்க எம்பிரேசர் குரூப் இதைக் கையிலெடுத்திருக்கிறது. 2022-ம் ஆண்டு கேம் வரும் என ஒரு நிறுவனம் அறிவித்தால், 2023-ம் ஆண்டு மீண்டும் A quiet Place அடுத்த பாகம் வரும் என இன்னொரு நிறுவனம் அறிவித்திருக்கிறது.
பேக்-மேன் கேம் விளையாடி யிருக்கிறீர்களா? அதுதாங்க ‘கேம் ஓவர்’ திரைப்படத்தில் டாப்ஸி விளையாடிக்கொண்டே இருப்பாரே, அதுதான். மேஸ் போன்றதொரு செட்டப்பில் எல்லாப் புள்ளிகளையும் சாப்பிட வேண்டும். வில்லன்களை மோதிவிடக்கூடாது. ஆனால், அவர்கள் நம்மை நோக்கித்தான் வருவார்கள். மூன்று உயிர்கள் நமக்குத் தரப்பட்டி ருக்கும். ஒன் பிளஸ், தனது நார்டு 2 மொபைலை, பேக்-மேன் கேமுடன் இணைத்து வெளியிடத் திட்ட மிட்டிருக்கிறது. மொபைலை சார்ஜ் செய்யும்போது, பேக்-மேன் சாப்பிடுவதுபோல் டிசைன் செய்திருக் கிறார்கள். அதேபோல், பின்பக்கத்தில் இருளில் ஒளிரும் தன்மையுடைய ஓவியத்தை வரைந்தி ருக்கிறார்கள். மொபைலுக் குள்ளும் நிறைய இடங்களில் பேக்-மேனை உலவ விட்டிருக்கிறார்கள். மொபைலே சற்று மஞ்சள் நிறத்தில் தோன்றுகிறது. நெட்பிளிக்ஸ், சினிமாக்கள், மொபைல்கள் என எல்லாம் சொல்வது ஒன்றுதான்... இனி கேமின்றி உலகில்லை.

( - ) கேம் பிளானில் பெரிய மாற்றமில்லை.
( + ) அசத்தலான லுக்; புதிய இடங்கள்; புதிய ஆயுதங்கள்
PUBG: ஆண்டிராய்டு கேம்களில் குழுவாக விளையாடும் விளையாட்டுகளில் PUBG-யின் தாக்கம் மிக அதிகம். சிறுவர்கள் மட்டுமே விளையாடிக்கொண்டிருந்த மொபைல் கேம்களை பெரியவர்களையும் விளையாட வைத்தது PUBG. சர்வைவல் கேம்களில் PUBG-யின் விதி மிகவும் எளிதானது. நூறு நபர்களை ஒரு தீவுக்குள் இறக்கிவிடுவார்கள். ஒரு குழுவாகவோ நபராகவோ, அங்கிருந்து பாதுகாப்பாகத் தப்பிக்க வேண்டும். தப்பிக்க ஓரிடத்தில் ஒளிந்து கொள்ளலாமே என அதிகப்பிரசங்கித்தனமாக யோசிக்கக்கூடாது. நேரம் குறையக் குறைய, இடத்தின் சுற்றளவைக் குறைத்துக்கொண்டே வருவார்கள். ஆக, மீதமிருப்பவர்களைச் சுட்டே ஆக வேண்டும். இந்த அடிப்படை விதியுடன் களமிறங்கி ஹிட் அடித்தது PUBG. ஓர் ஆன்லைன் விளையாட்டை வைத்து போட்டி நடத்திப் பணம் சம்பாதிக்கலாம் என்பதை உருவாக்கியது PUBG தான். (PUBG மதன் வழியில் அல்ல). பெரிய பெரிய திரையரங்குகள், நிறுவனங்கள் கூட இத்தகைய போட்டிகளை நடத்திக் கல்லா கட்டின. நண்பர்களுடன் ஜாலியாய்ப் பேசிக்கொண்டே துப்பாக்கியைச் சுழற்றுவது இளைஞர்களுக்கும் ஜாலியாக இருந்தது.
அங்குதான் PUBG-க்கான முதல் ட்விஸ்ட்டை இறக்கியது மத்திய அரசு. இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சீன விளையாட்டு எனச் சொல்லி PUBG-க்குத் தடா போட்டது. வேலையில்லாமல் கேமே வேலையாக இருந்தவர்களையும் ஆட்டிப் பார்த்தது அரசு. VPN மோடு, மொபைல் லொகேஷனை மாற்றுவது என என்ன செய்தாலும், PUBG முன்பு தந்த அனுபவத்தைத் தர மறுத்தது.


‘உங்களுக்கு இப்ப என்ன பிரச்னை? சீன நிறுவனம்தானே?’ என டென்செண்ட் பெயர் இல்லாமல், இந்தியர்களுக்கு பிரத்யேகமாக Battlegrounds Mobile India என்கிற விளையாட்டை வெளியிட்டது Krafton நிறுவனம். மறுப்பேதும் சொல்லாமல், அரசும் அனுமதித்தது. அதன் புரொபைல் பிக்சரே, ‘தாயின் மணிக்கொடி சொல்லுது ஜெய்ஹிந்த்’ என்பது போல் இந்தியக் கொடியுடன்தான் இருக்கும். அதையும் 5 கோடி பேர் டவுன்லோடு செய்து விளையாடி வருகிறார்கள். இதற்கிடையே PCக்களில் ஹிட் அடித்த Call Of Duty(COD)யும் மொபைல்களுக்கென பிரத்யேகமாகக் களமிறங்கியது. நல்ல கிராஃபிக்ஸ், அதிக ரேம் கொண்ட மொபைல்களின் சொந்தக்காரர்கள் COD பக்கம் ஒதுங்கினார்கள். ‘தவமாய் தவமிருந்து’ ராஜ்கிரண் டைப் அப்பாக்களின் பர்ஸுகளைப் பதம் பார்க்காமல் இருக்க, சிறுவர்கள் Garena-வின் Freefire-ஐ இன்ஸ்டால் செய்து விளையாடத் தொடங்கினர். கிட்டத்தட்ட தி.நகரில் பர்சேஸ் செய்வதைப் போன்ற அனுபவத்தைத் தந்தது FreeFire. எல்லாமே இருக்கும், ஆனா கம்மி கிராஃபிக்ஸில். நாங்களும் பிரமாண்டமாய்க் களமிறங்குவோம் என Freefire கடந்த செப்டம்பர் மாதம் FreeFireMax-ஐ அறிவித்தது. அதையும் ஐந்து கோடி நபர்கள் டவுன்லோடு செய்து வைத்திருக்கிறார்கள்.
PUBG: NEWS STATE
எல்லோரும் அடுத்து அடுத்து என நகர்ந்தால், நாங்கள் மட்டும் என்ன தக்காளித் தொக்கா என்பதுபோல், PUBG-யும் அடுத்த வெர்ஷனை இந்த மாதம் வெளியிட்டிருக்கிறது. வெளியான இரண்டு நாள்களிலேயே ஒரு கோடிக்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்ய, சர்வர்கள் திக்கித் திணறிவருகின்றன. PUBG Mobile-க்கான சீக்குவலாக இந்த கேம் வெளியாகியிருக்கிறது. புதிய மேப், பலே கிராபிக்ஸ், புது உலகம் என கலக்கலாய் இதைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.


இந்த சீக்குவல் 2051-ல் நடக்கிறது. உலகம் அழிந்து மீதமிருக்கும் மனிதர்கள் தங்களுக்குத் தேவையான விஷயங்களைக் கைப்பற்றும் விதமாக இந்த இடம் அமைக்கப்பட்டிருக்கிறது. சாதா துப்பாக்கிகளோடு, எதிர்காலத்தில் அதிக பயன்பாட்டில் இருக்கக்கூடிய டிரோன்களையும் இதில் சேர்த்திருக்கிறார்கள்.
கேம் பிளான் கிட்டத்தட்ட PUBGயே தான். நூறு பேர் ஓர் இடத்தில் குதிக்க, எந்தக் குழுவோ, மனிதனோ இறுதிவரை தாக்குப் பிடிக்கிறார்களோ அவர்கள் தான் வின்னர் வின்னர் சிக்கன் டின்னர். அதே சமயம், எதிர்பார்த்ததைப் போலவே இதிலும் விளையாட்டு ஹேக்கர்கள் முதல் நாளே அவர்களின் அட்டூழியங்களை ஆரம்பித்து விட்டார்கள். அவர்களைச் சுட்டும் கொல்ல முடியாது.
அடுத்தடுத்த அப்டேட்களில் நிறைய கேம் மோடுகளைச் சேர்க்கவிருப்பதாக அறிவித்தி ருக்கிறார்கள்.
- Downloading