Published:Updated:

கேம்ஸ்டர்ஸ் - 4

கேம்ஸ்டர்ஸ் - 4
பிரீமியம் ஸ்டோரி
News
கேம்ஸ்டர்ஸ் - 4

நாம் கவனச்சிதறல்களால் நிறைந்த உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். புதிய செய்திகளை நோட்டிஃ பிகேஷன் களாக நம் மொபைல் கொட்டிக்கொண்டே இருக்கிறது.

வடக்குப்பட்டி ராமசாமிகளிடம் கவுண்ட மணிகள் கடன் கொடுக்க ஆரம்பித்த கதையாகத்தான் நமக்கும் வாழ்க்கை அமைகிறது. தொடர் எழுத ஆரம்பித்த நான்காவது வாரமே, சீனாவில் ஆன்லைன் கேமிங்குக்கு நேரத்தடையை அறிவித்திருக்கிறார்கள் என்னும் செய்தி ஈட்டியை நெஞ்சுக்குள் செலுத்துகிறது. சீனாவில் இருக்கும் மைனர்களில் 62.5% பேர் ஆன்லைனில் கேம் விளையாடுகிறார்கள். 13.2% சீனப் பொடியர்கள் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரத்துக்கு மேலாக ஆன்லைன் கேமிங்கில் ஈடுபடுகிறார்கள். எனவே, இந்தப் புதிய தடை. 2019-ம் ஆண்டு, சீனச் சிறுவர்கள் வார நாள்களில் ஒன்றரை மணி நேரமும், வாரக் கடைசிகளில் மூன்று மணி நேரமும் விளையாடலாம். இரவில் விளையாட முழுத்தடை விதித்திருந்தது சீன அரசு. தற்போது, அதை மேலும் அதிகரித்து திங்கள் டு வியாழன் முழுத் தடா; வார இறுதி ஒரு மணி நேரம், அதுவும் 8 மணி முதல் 9 மணி வரை மட்டுமே என அறிவித்திருக்கிறார்கள்.

சீனாவைப் போல் எல்லாம் நம் மக்களில் பெரும்பாலானோர் கேமுக்கு அடிமைகளாக இருப்பதில்லை என்றெல்லாம் முட்டுக்கொடுக்க முடியாது. Free fire, Call of Duty, PUBG வகையறாக்கள் எல்லாம் நம் இளைஞர்களிடமும் அதிகமான நேரத்தை உறிஞ்சிக்கொண்டுதான் இருக்கின்றன. ‘இளைஞர்கள்தான் இப்படி, நாங்க எல்லாம் அந்தக் காலத்துல’ எனப் பெரியவர்கள் நமக்குப் பாடமும் எடுக்க முடியாது. Clash of clans, candy crush, fruit bubble எனப் பெரியவர்களின் நேரத்தைப் பறிக்கும் விளையாட்டுகளும் இங்கு அதிகம். ‘ஒரு நாளைக்கு இவ்வளவு நேரம்தான் விளையாட வேண்டும்’ என நேரக்கட்டுப்பாடு கொண்டு வருவது அவசியம்தான். “மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா” என்கிற பாரதியின் வரிகளையும் இக்காலத்துக்கு ஏற்ப சற்று மாற்ற வேண்டியதிருக்கிறது (இந்தப் புத்தகம் பாரதி ஸ்பெஷலாம்!). அத்துடன், இங்கு நாம் நேரக்கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும் என்றால், வாட்ஸ்-அப்பைப் பொய்ச் செய்திகளுக்காக, வன்மங்களுக்காக மட்டுமே பயன்படுத்தும் நபர்களிடமிருந்தும் மொபைலைப் பிடுங்கி வைக்க வேண்டும். ஆனால், அதற்கெல்லாம் சாத்தியமில்லை. இந்த உலகில் பெரியவர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்படுவதேயில்லை. ஏனெனில், இவ்வுலகம் பெரியவர் களுக்கானது. ஐயய்ய்யோ அறிவுரை யெல்லாம் சொல்றோமே, மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் பக்க எண் 24-ல் இருக்கிறது. மன்னிச்சூ. இப்படித்தான் கவனச் சிதறலாக சொல்ல வேண்டிய விஷயத்தை விடுத்து வேறு விஷயங்களுக்குச் சென்றுவிடுகிறோம். ஆனால், இந்த மல்ட்டி டாஸ்கிங் உலகில் கவனச்சிதறல் இல்லாமல், கடைசியாக நீங்கள் செய்த செயல் என்ன என நினைவிருக்கிறதா?

கேம்ஸ்டர்ஸ் - 4

நாம் கவனச்சிதறல்களால் நிறைந்த உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். புதிய செய்திகளை நோட்டிஃ பிகேஷன் களாக நம் மொபைல் கொட்டிக்கொண்டே இருக்கிறது. ஹிட்லர் காலத்தில் ராணுவங்களில்கூட இல்லாத அளவுக்கான செயல்திறன் கொண்ட கணினிகளை நாம் வைத்திருக்கிறோம். நமது செயல்களை வைத்து அதற்கேற்ற டேட்டாவை நம் மொபைல் சர்வருக்கு அனுப்புகிறது. சர்வர், ஹோட்டலில் இருக்கும் சர்வர்போல் ‘நாங்க இருக்கோம்’ என அதற்கேற்ற விஷயங்களை நமக்குக் காட்டி, நம் கண்களைக் குளிர்விக்கிறது. ஆப்பிள் ‘ஸ்கிரீன் டைம்’ என்கிறது, கூகுளோ ‘டிஜிட்டல் வெல் பீயிங்’ என்கிறது. அதாவது தங்கள் நிறுவனம் சார்ந்த ஒரு பொருளின் பயன்பாட்டு அளவைக் குறைக்க அந்த நிறுவனங்களே புதிய புதிய செயலிகளை உருவாக்கு கின்றனவாம். விக்ரமன் பட நாயகிகளைக் கரையேற்றும் ஹீரோக் களுக்கு அடுத்த படியாக நல்லவர்கள் என்றால் கூகுளும் ஆப்பிளும் தான். ஒரு சினிமாவைக்கூட இப்போதெல்லாம் நம்மால் கவனச்சிதறல்கள் இல்லாமல் பார்க்க முடிவ தில்லை. பத்து முறையாவது மொபைலைப் பார்த்து விடுகிறோம். இப்படியான கவனச்சிதறல்களைக்கூட ஜஸ்ட் லைக் தட் டீல் செய்யும் ஒரே விஷயம் கேமிங்தான். பொங்கலைச் சாப்பிட்டதுபோல் சோம்பித் திணறும் மூளையை கேமிங்கைவிடச் சுறுசுறுப்பாக்குவது எதுவுமில்லை. ‘கேமிங் என்ன கேமிங், ஒரு டீ குடிச்சா மூளை சுறுசுறுப்பாகப்போகுது’ என்பவரா நீங்கள். நிச்சயம் நீங்கள் 70ஸ் கிட்தான்..!

மூன்று வாரங்களாக அடிதடி கேம்கள் நோக்கி எழுதியதால், இந்த முறை கணிதம் நோக்கி நகர்வோம். கடந்த வார ‘விட்ட கதை தொட்ட கதை’யாக சுடோகு பற்றிச் சில கட்டங்களைப் பார்ப்போம். கறி விருந்துப் பந்தியில் நமக்கு மட்டும் சாம்பார் சாதத்தைப் போட்டு ஏமாற்றுவது போல், நம்மைப் பல காலமாக 9*9 கட்டங்களில் ஒரே ஒரு சுடோகுவை மட்டும் காட்டி ஏமாற்றி விட்டார்கள். 81 கட்டங்களில் ஒரு குறிப்பிட்ட விடை நோக்கி நகர, நமக்கு குறைந்தபட்சம் 17 க்ளூக்களாவது (எழுதப்பட்ட எண்கள்) வேண்டும். நாம் பெரும்பாலும் கணிக்கும் சுடோகுகள் ஒன்பது கட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும். ஜிக்சா சுடோகுவில் இந்த 9 கட்டங்கள் வெவ்வேறு டிசைன்களில் வெட்டப்பட்டு இருக்கும். இதில் சற்று வித்தியாசமானது கில்லர் சுடோகு. ஜப்பானிய ககுரோ பாதி சுடோகு மீதி எனக் கலந்த கலவை அது. 81 கட்டங்களில் வெவ்வேறு வண்ணங்கள் அடிக்கப்பட்டிருக்கும். அந்த வண்ணங்கள் கொண்ட கட்டங்களின் கூட்டுத்தொகையை மட்டும் பதிவு செய்திருப்பார்கள். அந்தக் கூட்டுத் தொகையையும் பிரிக்க வேண்டும், அதே சமயம், சுடோகுவின் விதிப்படி 1-9 எண்களும், சரியான முறையில் கட்டங்களினுள் பொருந்தி வர வேண்டும். இந்த வாரம் உங்களுக்கு எளிமையான கில்லர் சுடோகு இதோ. பக்கத்துப் பக்கத்தில் சரியான பதிலை நிரப்பிவிட்டு, av@vikatan.com என்கிற மெயில் ஐடிக்கு கேம்ஸ்டர் என்கிற தலைப்புடன் அனுப்புங்கள். புதிய புதிர்கள் உங்களை நோக்கி வரும்.

ஆன்லைனில் படிப்பவர்கள் என்ன செய்ய என யோசிக்க வேண்டாம். மூளையைக் கசக்க உங்களுக்கான கேம்கள் இதோ.

கேம்ஸ்டர்ஸ் - 4

Squiggly Sudoku

Josh Tan

4.5 ரேட்டிங்


ஒன்பது கட்டங்கள் தான், ஆனால், இந்தக் கட்டங்கள் தாறுமாறாக இருக்கும். கன்னாபின்னா எனச் சிதறியிருக்கும் இந்தக் கட்டங்களில் சரியான எண்களை இட்டு நிரப்ப வேண்டும்.

Killer Sudoku

Beetles Games Studio

4.6 ரேட்டிங்


ஈஸி, மீடியம், ஹார்டு, கில்லர் என உங்களின் அறிவுத்திறனுக்கேற்ப நீங்கள் கேம் மோடை செட் செய்யலாம். எவ்வளவு நேரத்தில் நீங்கள் வெல்கிறீர்கள். உலக அளவில், எத்தனை நபர்களை வென்றிருக்கிறீர்கள் போன்ற தகவல்களும் இடம்பெறும்.

Conceptis Sudoku

Conceptis Ltd

4.5 ரேட்டிங்


மல்ட்டி சுடோகு என சொல்லப்படும் இவ்விளையாட்டில் 2 க்ரிட் முதல் 5 க்ரிட் வரை இருக்கும். சற்றே கடினமான, அதே சமயம் சுவாரஸ்யமான ஒரு சுடோகு இது.

Logic Wiz Sudoku

logic Wiz

4.8 ரேட்டிங்


மேலே குறிப்பிட்ட சுடோகு எல்லாம் எனக்கு ஜுஜூபி என்கிறீர்களா. நீங்கள் வரவேண்டிய இடம் லாஜிக் விஸ்தான். கிளாஸிக், கில்லர் வகைகளுடன் எக்ஸ்காலிபர், லாஜிக், குயின்ஸ் கேம்பிட், சாண்ட்விச் எனப் பல சுடோகுகள் இதில் உண்டு. எக்ஸ்காலிபரில் இருக்கும் சுடோகுவில் ஆங்காங்கே அம்புகளை இணைத்திருப்பார்கள். அந்த அம்புகளின் வட்டங்களில் கூட்டுத்தொகை சரியாக வர வேண்டும். குயின்ஸ் கேம்பிட் என்றால் வேறென்ன, சதுரங்கம்தான். சுடோகு விதிகளுடன் சதுரங்கள் விதிகளும் இணைந்துவிடும்.

மொபைலில் கேம் விளையாடுவதா, நெவர் எனக் கொக்கரிக்கும் நபரா நீங்கள் https://sudoku.com என்கிற தளத்தில் கிளாஸிக், கில்லர் என இரு மோடுகளிலும் கேம்களை ஆட முடியும்.

- Downloading