Published:Updated:

கேம்ஸ்டர்ஸ் - 7

கேம்ஸ்டர்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
கேம்ஸ்டர்ஸ்

ஜோம்பிகளைச் சுட்டு வீழ்த்துவது போல, ஒரு ஜாலியான விஷயம் எதுவுமே இல்லை. ஜோம்பிகளை மீறி நாம் ஒரு இடத்தில் தாக்குப்பிடித்தால் அது சர்வைவர் கேம்

Glitch என்கிற விஷயம் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கணினிகளில் அதிகம் நடக்கும் என்றாலும், கேம்களில் இந்தச் சொல் மிகவும் பிரபலம். சரியாக இயங்க வேண்டிய ஒரு குறிப்பிட்ட code, செயலிழந்துவிடுவதை க்ளிட்ச் என்பார்கள். உங்கள் ஆபீஸை ஒரு கேமாக நினைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் உள்ளே நுழையும்போது, ஒரு பாதுகாவலர் கதவைத் திறப்பார் இல்லையா, அவர் கதவை இழுத்தாலும், கதவு அங்கேயே நின்று கொண்டிருப்பதுகூட ஒருவகை க்ளிட்ச் தான். கேமிலிருக்கும் இத்தகைய க்ளிட்ச்களை வைத்து ஏற்கெனவே சில படங்கள் வந்திருந்தாலும், இந்த செப்டம்பரில் வெளியாகியிருக்கும் Free Guy அதில் மிகவும் முக்கியமானது. ஒரு வீடியோ கேமிலிருக்கும் எல்லாக் கதாபாத்தி ரங்களையும் நம்மால் விளையாட முடியாது. ஆரம்பத்தில் நம் சிந்தனைக்கு ஏற்ப ஒரு உடலை வடிவமைக்கச் சொல்வார்கள். அதன்படி நாம் அந்தக் கதாபாத்திரமாக அந்த கேமுக்குள் நுழைவோம். ரேஸிங் கேம்களில் நாம் இடித்துத் தள்ளும் கார்களின் டிரைவர்கள்; GTA vice City-யில் நம்மை அடிக்க வரும் காவல்துறை அதிகாரிகள்; கிரிக்கெட் விளையாட்டு களில் அம்பயராக நின்றுகொண்டிருக்கும் கதாபாத்திரம் எனப் பல கதாபாத்தி ரங்களை நம்மால் விளையாட முடியாது. இவற்றையெல்லாம் NPC - Non Playable Character என அழைக்கிறார்கள். சரி இப்படியான ஒரு NPC-க்குக் கொடுக்கப் பட்டிருக்கும் கட்டளை ஒரு வேலையை மீண்டும் மீண்டும் செய்துகொண்டிருப்பது. இரும்பிலே இருதயம் முளைப்பதுபோல, இந்த NPC-க்களுக்கு மூளை வேலை செய்யத்தொடங்கி கேமின் போக்கை மாற்றிவிட்டால் என்ன ஆகும் என்பதாக நீள்கிறது Free Guy. அடுத்தமுறை நீங்கள் கிரிக்கெட் விளையாட்டுக்கு லாகின் செய்யும்போது, தோனி கதாபாத்திரத்தைத் தள்ளிவிட்டுவிட்டு அம்பயர் பேட் பிடித்துக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும்?

கேம்ஸ்டர்ஸ் - 7

Far Cry ஆறாவது சீசன் அக்டோபர் மாதம் வெளியாகவிருக்கிறது. கரீபியத்தீவான யாராவின் (புனைவு தேசம்) அதிபர் அண்டன் கஸ்டில்லோ. தன்னைப் போலவே தன் மகன் டியாகோவை கொடுங்கோல் அதிபராக உருவாக்க வழிவகை செய்கிறார். டேனி ரோஜாஸ் என்னும் கதாபாத்திரம் தான் நமக்கு, இந்தக் கதாபாத்திரத்துக்குள் ஊடுருவி இவர்களின் சதித்திட்டத்தை முறியடித்து க்யூபாவைக் காப்பாற்ற வேண்டும். அச்சச்சோ யாராவுக்குப் பதிலாக க்யூபா என எழுதிவிட்டேனே. இருந்தாலும், அதுதான் உண்மை. க்யூபாவில் நடக்கும் அரசியல் சம்பவங்களை மையப்படுத்தித்தான் இந்த விளையாட்டை அறிமுகம் செய்திருக்கிறார்கள். நெருக்கடியான சூழல்களில் நம்மை ஆசுவாசுப்படுத்திக்கொள்ள ஆரம்பிக்கப்பட்ட கேம்கள், தற்போது அது விரும்பும் அரசியலையும் நம்முள் எளிதாகப் புகுத்தவிருக்கிறது. பிரேக்கிங் பேட் தொடரின் மூலம் பிரபலமான கியான்கர்லோ எஸ்போஸிட்டோதான் அண்டன் கஸ்டில்லோ கதாபாத்திரத்துக்காகக் குரல், உருவ ஒற்றுமை என நகலாகியிருக்கிறார். `இதில் அரசியல் இருக்கு. ஆனா, அதைக் குறிப்பாக க்யூபா எனச் சொல்லிவிட முடியாது’’ என்கிறார் far cry 6 விளையாட்டின் இயக்குந ரான நவிட் கவாரி. Far Cry 6 மூலம் அடுத்த தலைமுறைக்கு ஒரு புதிய க்யூபாவை உருவாக்கவி ருக்கிறார்கள்.ஷூட்டர் கேம்களில் பலரின் ஆர்வத்தைத் தூண்டியது first person shooter கேம்கள்தான். நம் தலையில் ஒரு கேமராவை டிக்கிலோனா பட மாறன் ஸ்டைலில் மாட்டிக்கொண்டு (நாட்டாமை கவுண்டமணி பாணியில் என்றும் சொல்லலாம்) எல்லா இடத்திலும் சுற்றிக்கொண்டு இருந்தால் எப்படியிருக்கும். அப்படி உருவாக்கப்பட்டதுதான் FPS கேம்கள்.நாயகனின் கண்களின் வழியாகத்தான் இந்த கேம்களை விளையாட வேண்டும். ஏன்னா, இங்க நாமதானே நாயகன்.

கேம்ஸ்டர்ஸ் - 7

இந்த ஜானருக்கான அறிமுகம் 1992-ம் ஆண்டு Wolfenstein 3D கேம் மூலம் ரசிகர்களுக்குக் கிட்டியது. துப்பாக்கி மட்டும் கண்ணுக்குத் தெரிய, நகர்ந்து சென்றுகொண்டே இருக்க, நாஜிப் படையைச் சேர்ந்த வீரர்கள் ஆங்காங்கே எட்டிப் பார்க்க, அவர்களைச் சுட வேண்டும். ஹிட்லர்தான் மெயின் வில்லன். கேமின் உட்தலைப்புகள்கூட ஹிட்லர் சம்பந்தப்பட்டதுதான். ஆம், அரசியல்தான். ஆனால், அடுத்தடுத்து நிறைய FPS கேம்கள் உருவாகக் காரணமாக இருந்தது 93-ம் ஆண்டு வெளியான Doom. Doomguy என்னும் கதாபாத்திரத்தின் மூலம் ராட்சத சக்திகளை நாம் வெல்ல வேண்டும். ஒன்பது லெவல்களைக்கொண்ட முதல் எபிசோடை இலவசமாகக் கொடுத்து ஆசை காட்டி, அடுத்தடுத்த பாகங்களில் காசு பார்த்தது Doom. 3டி கிராஃபிக்ஸில் அதீத வன்முறையால் Doom சர்ச்சையானாலும், அதுவும் விளம்பரமாகவே பார்க்கப்பட்டது. இன்னும் கடினமான லெவல்களுடன் The Ultimate Doom-ஐ வெளியிட்டு மேலும் ஹிட் ஆனது Doom.

கேம்ஸ்டர்ஸ் - 7
கேம்ஸ்டர்ஸ் - 7

அதற்கடுத்து நிறைய இப்படி வெளிவந்தன, அவற்றை வேறொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன். தற்போது இந்த வார கேம்.

ஜோம்பிகளைச் சுட்டு வீழ்த்துவது போல, ஒரு ஜாலியான விஷயம் எதுவுமே இல்லை. ஜோம்பிகளை மீறி நாம் ஒரு இடத்தில் தாக்குப்பிடித்தால் அது சர்வைவர் கேம். அதில் FPS பாணியில் சுடுவதை இணைத்துப் புதுவித லாஜிக்கில் ஹிட் அடித்தது Into the dead. அதன் இரண்டாம் பாகமும் அதே அளவுக்கு ஹிட். ‘நிக்காம ஓடு ஓடு’ என ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். செல்லும் வழி எங்கெங்கும் ஜோம்பி வரலாம் என எதிர்ப்படும் ஜோம்பிக்களைச் சுட வேண்டும். அவ்ளோதான் கேம். அதில் அப்படியே எமோஷனலான ஒரு கதை, ஒரு தெலுங்கு சினிமா பாணியில் எல்லா பேக்கேஜையும் சரிவரக் கையாண்டிருக்கிறார்கள்.

கேம்ஸ்டர்ஸ் - 7
கேம்ஸ்டர்ஸ் - 7
கேம்ஸ்டர்ஸ் - 7

ஜேம்ஸ் காட்டில் ஜோம்பிகளுக்குள் சிக்கிக்கொள்ள, ஹெலன் குடும்பத்துடன் காத்துக்கிடக்க, காட்டை விட்டு வெளியேறுவது எப்படி என கேம் ஜோம்பிகளுடன் நீள்கிறது. ஒருபுறம் நீங்கள் எவ்வளவு தூரம் கடந்திருக்கிறீர்கள் என்பது சொல்லப்பட்டுக்கொண்டே இருக்கும். அதேபோல், எவ்வளவு தோட்டாக்கள் இருக்கின்றன; அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் போன்ற கேம் பிளான்களும் இதில் அடக்கம். ஏழு சாப்டர், 60 ஸ்டேஜ், நூற்றுக்கணக்கான சேலஞ்ச் எனப் பெரிய சினிமா பாணியில் கதை விரிவடைந்துகொண்டே செல்கிறது.

ஒவ்வொரு லெவலும் முடிப்பதற்கு ஏற்ப நமக்குத் தோட்டாக்கள் கொட்டிக்கொண்டே இருக்கும். அதேபோல் ஓடுகிற இடங்களில் சமயங்களில் சில தோட்டாக்கள் கிடைக்கும். ஆனால், ஜோம்பிக்களைச் சுடாமல் நேருக்கு நேராகச் சிக்கிக்கொண்டால் ஸ்வாஹாதான்.

கேம்ஸ்டர்ஸ் - 7
கேம்ஸ்டர்ஸ் - 7
கேம்ஸ்டர்ஸ் - 7

(+) சின்ன சின்ன லெவல். குறைவான நேரத்தில் விளையாடிவிடலாம்.

(+) ஆஃப்லைன் ஆப்சனும் உண்டு.

(+) Daily Challenge இருப்பதால், எப்படியும் ஒருமுறையேனும் விளையாட வைத்துவிடுகிறது.

( - )சுவரில் முட்டினாலே ஜோம்பிக்களிடம் சிக்கிவிடுவோம்.

- Downloading