இந்தியாவில் தனது சாதனங்களை விற்பனை செய்யத் துவங்கி 25 ஆண்டுகள் நிறைவுற்றதை கொண்டாடும் வகையில், ஆப்பிள் நிறுவனம் தனது முதல் சில்லறை விற்பனை மையத்தை மும்பையில் திறந்துள்ளது.
மும்பையில் உள்ள பந்த்ரா குர்லா காம்ப்லெக்ஸ்-இல் (பிகேசி) கட்டமைக்கப்பட்ட ஆப்பிள் விற்பனை மையத்தினை, அந்நிறுவனத்த்ன் தலைமை செயல் அதிகாரி டிம் குக் திறந்து வைத்து, அதன் வாயிலில் நின்று வாடிக்கையாளர்களை வரவேற்றார்.

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் திறப்பு விழாவில், உலகம் முழுவதிலும் பணியாற்றி வரும் ஆப்பிள் நிர்வாக அதிகாரிகள் மற்றும் 100 ஊழியர்கள் கலந்து கொண்டனர். மும்பையைத் தொடர்ந்து டெல்லியில் மற்றொரு சில்லறை விற்பனை மையம் திறக்கப்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆப்பிள் நிறுவனம் தங்கள் ஐபோன் உற்பத்தியை இந்தியாவில் 7% அதிகரித்துள்ளது. மேலும், ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்பட்டதன் மூலம் இந்தியாவில் 1 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். 19 முதல் 24 வயதுக்குட்பட்ட பெண்களில் 72 சதவிகிதம் பேர் இந்நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளதாகக் கூறபட்டுள்ளது. மேலும், இந்தியாவில் ஆப்பிளின் மூன்று விற்பனையாளர்கள் அதன் ஐபோன்களை அசெம்பிள் செய்கிறார்கள் - ஃபாக்ஸ்கான், பெகாட்ரான் மற்றும் விஸ்ட்ரான். இந்த மூன்றில், ஃபாக்ஸ்கான் சுமார் 30,000 பெண் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது.

ஆப்பிளின் சுற்றுச்சூழலுக்கான கூறு சப்ளையர்களான Tata, Jabil, Avery மற்றும் Salcomp போன்றவையும் பல பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது. ஜபில் 7,000 தொழிலாளர்களில் சுமார் 4,200 பெண் பணியாளர்களைக் கொண்டுள்ளது. பெரும்பாலான பெண்களின் சராசரி வயது 21. அவர்கள் பெரும்பாலும் முதல் தலைமுறை பணியாளர்கள். ஐபோன் 11, ஐபோன் 12, ஐபோன் 13, ஐபோன் 14 மற்றும் ஏர்போட்ஸ் உள்ளிட்ட பல சாதனங்களை ஆப்பிள் இந்தியாவில் உற்பத்தி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது