Published:Updated:

``Online Fraud" லேட்டஸ்ட் டிரெண்டுகள்... உஷார் மக்களே!

ஆன்லைன் ஜாக்கிரதை!
News
ஆன்லைன் ஜாக்கிரதை!

கொரோனாவைவிட வேகமாக இன்றைய ஆன்லைன் பிராடுகள் உருமாறி வருகின்றன. அப்படிப்பட்ட ஆன்லைன் பிராடுகளின் லேட்டஸ்ட் டிரெண்டுகள் இதோ..!

``Online Fraud" லேட்டஸ்ட் டிரெண்டுகள்... உஷார் மக்களே!

கொரோனாவைவிட வேகமாக இன்றைய ஆன்லைன் பிராடுகள் உருமாறி வருகின்றன. அப்படிப்பட்ட ஆன்லைன் பிராடுகளின் லேட்டஸ்ட் டிரெண்டுகள் இதோ..!

Published:Updated:
ஆன்லைன் ஜாக்கிரதை!
News
ஆன்லைன் ஜாக்கிரதை!

ஆன்லைன் ஷாப்பிங் காலத்துக்குமுன் விதவிதமான நகைகள், விதவிதமான சேலைகள் என்றுதான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், தற்போதைய டிரெண்ட் விதவிதமான ஆன்லைன் ஃபிராடு (fraud). இது என்ன புதுசா? இதெல்லாம் ஏற்கெனவே தெரியும், போவியா... என்பதுதானே உங்கள் மைண்ட் வாய்ஸ்?

அலர்ட் ரொம்ப முக்கியம் பாஸ்!
அலர்ட் ரொம்ப முக்கியம் பாஸ்!

ஆன்லைன் ஃபிராடு பற்றி தெரியும். அதில் இன்றைய ஸ்பெஷல் என்ன என்று தெரியுமா? இது என்ன ஹோட்டல் மெனு போல இருக்கிறது என்றுதானே நினைக்கிறீர்கள். ஆம்! ஹோட்டல் மெனுதான். இன்றைய சூழலில் தினமும் ஒவ்வொரு ஆன்லைன் ஃபிராடும் புதிது புதிதாக முளைத்து வருகிறது. அதில் இன்றைய ஸ்பெஷல் பற்றிதான் இந்தக் கட்டுரை.

டிரிங்... டிரிங்... வீட்டு காலிங் பெல் சத்தம்.

ராம் கதவை திறந்தபோது ஒரு டெலிவரி பாய் ஏதோவொரு பொருள் பேக் செய்யப்பட்ட காக்கி அட்டைப் பெட்டியுடன் நின்று கொண்டிருந்தார். அடுத்ததாக, நீங்கள் ஆர்டர் செய்த பொருளை டெலிவரி செய்ய வந்துள்ளேன் என்றும் கூறுகிறார்.

என்ன? நான் ஆர்டர் செய்தேனா? - ராமுக்கு ஒரே குழப்பம். நான் எந்தப் பொருளையும் ஆர்டர் செய்யவில்லையே என்று டெலிவரி பாயிடம் ராம் கூறுகிறார்.

ஓஓ... நீங்கள் ஆர்டர் செய்யவில்லையா? சரி... அப்போது உங்கள் செல்போனுக்கு வரும் OTP-யை மட்டும் கூறுங்கள் என்று சொல்லிவிட்டு அந்த டெலிவரி பாய் ஏதோவொன்றைத் தனது செல்போனில் நோண்டுகிறார்.

OTP-யை யாரிடமும் ஷேர் செய்யாதீர்கள்!
OTP-யை யாரிடமும் ஷேர் செய்யாதீர்கள்!
vikatan_qt_api

உடனே ராமின் செல்போன் சிணுங்குகிறது. தனது செல்போனில் வந்த OTP-யை கூறிவிட்டு ராம் தனது வீட்டின் கதவை மூட, டெலிவரி பாயும் சென்றுவிடுகிறார்.

அடுத்த 5 நிமிடங்களில், மீண்டும் செல்போன் சிணுங்குகிறது.

ராம் செல்போனை எடுத்து பார்த்தால், ரூ.50,000 பேங்க் அக்கவுன்ட்டில் இருந்து டெபிட் ஆனதாகக் காட்டுகிறது. இதைப் பார்த்த ராமுக்கு அதிர்ச்சி மற்றும் குழப்பம்!

என்ன மக்களே, கதை பிடித்திருக்கிறதா? ஆனால், உண்மையில் இது கதை இல்லை. இது ஒரு நிஜ சம்பவம். நாளை இந்த ராமாக நீங்கள்கூட மாறலாம். அதனால் நீங்கள் ஜாக்கிரதையாக இருப்பது மிக மிக அவசியம்.

இந்த டிஜிட்டல் யுகத்தில் நமது வங்கிக் கணக்குத் தகவல்களை தொழில்நுட்ப திருடரகள் எளிதாகத் தெரிந்துகொள்ளலாம். இந்த சம்பவத்தில் டெலிவரி பாய் போல வந்தவர் ஏற்கெனவே தனது செல்போனில் ராமின் வங்கிக் கணக்கு தகவல்களைப் பதிவு செய்து, தனக்குத் தேவையான பணத்தைக்கூட பதிவிட்டு வந்திருக்கிறார். ராமின் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க அவருக்கு தேவையான ஒன்று OTP மட்டுமே. அதனால் டெலிவெரி பாய் போல வந்து, OTP-யையும் அழகாக கறந்து பணத்தை ஆட்டையை போட்டுச் சென்றுவிட்டார்.

OTP ஷேரிங் வேண்டவே வேண்டாம்!
OTP ஷேரிங் வேண்டவே வேண்டாம்!

இன்றைய ஸ்பெஷலில் அடுத்த ஐட்டம்... ஒருவரது செல்போனுக்கு ஒரு வங்கியில் கணக்கு தொடங்கியதாகவும், அந்த வங்கி கணக்கில் ரூ.7,000 வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் குறுஞ்செய்தி வந்துள்ளது. அதை சரிபார்க்க கீழே உள்ள லிங்கைத் தொடுமாறும் அந்தக் குறுஞ்செய்தியில் இருந்துள்ளது. அவர் அந்த லிங்கை தொட்டவுடன், அவரது செல்போனில் இருக்கும் காண்டாக்டுகள் (contact), போட்டோக்கள் என செல்போனில் இருந்த அனைத்து தகவல்களும் மோசடி நபர் கைகளுக்கு சென்றுவிட்டன.

அந்த நபர் ரூ.7,000-த்தை ரூ.15,000 ஆக தரவில்லை என்றால் அவரது செல்போனில் இருக்கும் போட்டோக்களை மார்ப் செய்து வெளியிடப்போவதாகவும், பாதிக்கப்பட்ட நபரின் செல்போன் எண்ணிலிருந்து பெண்களிடம் ஆபாசமாகப் பேசப்போவதாகவும் பாதிக்கப்பட்ட நபரை மோசடி நபர் மிரட்டி வருகிறார். இந்த சம்பவத்தில் மோசடி நபரை டிராக் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏமாறாதீர்கள்!
ஏமாறாதீர்கள்!
Representational Image

இன்னும் சில சம்பவங்களில், தனது செல்போனுக்கு வரும் லிங்க்குகளைத் தொடும்போது, screen share ஆகி பணம் கபளீகரமாகி ஆன்லைன் ஃபிராடு மிக மிக எளிதாக நடந்து விடுகிறது.

நான் எல்லாம் ஏமாற மாட்டேன். நான் மெத்த படித்திருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா? மேலே குறிப்பிட்ட சம்பவத்தில் இரண்டு பேருமே மெத்த படித்தவர்தான். அவர்கள் மட்டுமல்ல, படித்தவர்கள் பலர் இந்த ஆன்லைன் பிராடில் ஏமாந்து இருக்கிறார்கள். இன்னும் ஒருபடி மேலே போய், ஐ.டி ஊழியர்கள்கூட அதிகம் ஏமாந்து இருக்கிறார்கள்.

மொபைல் போன் - கவனம் தேவை!
மொபைல் போன் - கவனம் தேவை!
iStock

இந்த டிஜிட்டல் யுகத்தில், நமது போனை பத்திரமாக வைத்திருக்க மட்டும் நாம் கற்றுக்கொண்டால் போதாது. செல்போனையும், அதில் வரும் குறுஞ்செய்திகள், லிங்குகள் என அனைத்தையும் கையாள கற்றுக்கொள்ள வேண்டும். மக்களே தொழில்நுட்பம் வளர வளர, நமது கவனமும் இரண்டு மடங்காக வளர வேண்டும். உங்களுக்கு சந்தேகத்துக்குரிய நம்பரில் இருந்து குறுஞ்செய்தியோ, அழைப்புகளோ வந்தால் சிறிது யோசனைகூட இன்றி உடனடியாக பிளாக் செய்துவிடுங்கள். கடைசியாக இந்த கட்டுரை சொல்ல வருவது இதுதான்...

ஏமாற்றாதீர்கள்... ஏமாறாதீர்கள்!