`ஜெமினி கணேசன் காலத்து லாம்ப்ரெட்டாவுக்கும், விஜய் தேவரகொண்டா காலத்து ஏப்ரிலியாவுக்கும் எதுக்கு கம்பேரிசன்?’ எனக் கேள்வி எழுந்திருக்கும். சில தாத்தா காலத்து பைக்குகள், பேரன்கள் காலம் வரைக்கும் டிசைன், ரைடு குவாலிட்டி, ஃபன் டூ டிரைவ், ஸ்டைல் என சில விஷயங்களில் கெத்து காட்டும். அழகுக்கும் ஆர்வத்துக்கும் பெயர்போன இத்தாலிய ஸ்கூட்டர்கள் அந்த வகையைச் சேர்ந்தவைதான். லாம்ப்ரெட்டா Li 150 ஸ்கூட்டர், ஏப்ரிலியா SR 150 ஸ்கூட்டரை விட 56 வயசு பெருசு. ஊரே கண்ணு பட, இரண்டிலும் ஒரு ஜாலி ரைடு அடித்தேன்.

1958-ம் ஆண்டில் வெளியானபோது Li150-யில் மட்கார்டு மீது ஹெட்லைட்டை வைத்திருப்பார்கள். நம்மிடம் இருப்பது 1962 மாடல். இதில் ஹெட்லைட்டை ஹேண்டில்பாரில் வைத்திருப்பார்கள். ரியோ பறவையின் மூக்குபோல பெரிய மட்கார்டு, முன்பக்கம் சின்ன கிரில் என லாம்ப்ரெட்டாதான் அப்போதைய டிரெண்டிங் ஸ்கூட்டர்.

ஏப்ரிலியாவோ, ஸ்போர்ட்டியான மட்கார்டு, ரேஸ் இன்ஸ்பையர்டு கிராஃபிக்ஸ் என தனி ஸ்டைலில் அசத்துகிறது.

கடைசி மூன்று மாதமாக கால்படாமல் இருந்தாலும், இரண்டாவது கிக்கிலேயே ஸ்டார்ட்டாகிவிட்டது Li150. இதன் கரபுர ஐடிலிங் சத்தம், ஏப்ரிலியாவின் எக்ஸாஸ்ட் சத்தத்தை மீறிக் கேட்க, பழைய ஆட்டோவை ஞாபகப்படுத்தியது லாம்ப்ரெட்டாவின் அந்த எக்ஸாஸ்ட் சத்தம். ஹைபிட்ச்சில் ஸ்கூட்டர் இயங்கினால், பக்கத்தில் யாருமே இருக்க மாட்டார்கள். அந்தக் காலத்தில் இதுதான் ரீஃபைண்டு இன்ஜின். 2 ஸ்ட்ரோக் இன்ஜினாக இருந்தாலும், இப்போது இருக்கும் ஏப்ரிலியா SR150-க்கு ஈடுகொடுக்கும் ஆக்ஸிலரேஷன் இல்லை. ஆனால், இன்ஜின் வேகமெடுக்கும்போது ஹார்ட் பீட், டாப் கியரில் துடிக்கும். வெள்ளரிக்காய் கடைகள், இடிந்த வீடுகள், மாட்டுக்கொட்டாய்கள் தாண்டி பள்ளம் மேட்டில் படாமல் பாந்தமாக லாம்ப்ரெட்டாவை விரட்டினேன். பள்ளத்தில் ஓங்கி இறக்கினால், சிம்பிளான Trailing Link சஸ்பென்ஷனும், ஸ்டிஃப்பான டெலிஸ்கோப்பிக் ஃபிரேமும் முதுகு பழுத்துவிடும். தெருவில் கடைசி வீட்டைத் தாண்டியதும் சாலை விரிந்து மனம் குளிர்ந்தது. விரிந்த சாலையில் Li150-யின் 4-வது டாப் கியர் பர்ஃபாமென்ஸை டெஸ்ட் செய்ய முடிந்தது. இதில் இருக்கும் ஒரு தனித்தன்மை, 4-வது கியரை கிளட்ச் இல்லாமல் மட்டுமே போட முடியும். 4-வது கியரைப் போட்டாச்சு!

இந்த மல்ட்டி ஸ்டோரிலைன் கதையில், இந்தியாவின் வேகமான ஸ்கூட்டர் SR150, லாம்ப்ரெட்டாவைத் திரும்பிப் பார்க்காமல் வேகமாகக் கடந்து சென்றது. வளைவுகளைப் பார்த்ததும் குஷியாகிவிட்டேன். காரணம், இரண்டுமே அவற்றின் காலத்தில் வளைவுகளை வேகமாகக் கடக்க பெரிய வீல் வைத்த ஸ்கூட்டர்கள். ஏப்ரிலியா SR150, 154.8 சிசி இன்ஜினுடனும் கிரிப்பான டயர்களுடனும் கார்னரில் பட்டாசாகப் பறக்கிறது. லாம்ப்ரெட்டாவுக்கு அந்த அளவு பவர் இல்லையென்றாலும், கார்னரில் நம்பிக்கையாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.

எடையைக் கையாள்வதில் இரண்டு ஸ்கூட்டர்களுக்குமே லைக் தரவேண்டும். ஒரு பக்கமாக இழுக்காமல், பெரும்பாலான நேரத்தில் எடையை சென்டரிலேயே வைத்திருந்தது லாம்ப்ரெட்டா. இப்போது இது சகஜம். ஆனால், அந்தக் காலத்தில் இதெல்லாம் ஆசம்! இரண்டு ஸ்கூட்டரிலும் கிரவுண்டு க்ளியரன்ஸ் தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது. பெரிய ஸ்பீடு பிரேக்கரில்கூடத் தரைதட்டவில்லை.

கடைசியாக டிராக் (Drag) ரேஸ். ஸ்கூட்டரை பீச் மணலில், நேர்கோட்டில் வைத்து ஃபுல் த்ராட்டில் கொடுத்துக் கிளப்பினேன். பவர் ஓவர்டோஸாகி, பீச் மணலில் SR150-யின் பின்வீல் புதைந்துவிட்டது. பொறுமையான ஆக்ஸிலரேஷனால் அலட்டிக்கொள்ளாமல் நகர்ந்தது Li150. 40 கி.மீ்.் வேகத்திலேயே லாம்ப்ரெட்டாவை ஓவர்டேக் செய்துவிட்டது SR150. பிறகு, திரும்பிப் பார்க்கவே இல்லை. டிராக் ரேஸை முடித்துவிட்டு, இந்த இத்தாலிய அழகிகளோடு பீச்சில் செல்ஃபி எடுத்தபோது, கூட்டம் கூடிவிட்டது.

Li150-யில் பெரிய தடிமனான சீட். அதை மாற்றி, எங்கள் Li150-யில் ஸ்டைலான மெல்லிசான சீட்டை வைத்திருந்தோம். SR150 மாடர்னான ஒன்-பீஸ் சீட்டோடு வருகிறது. அதிலும் ஸ்போர்ட்டியான பிளாக் மற்றும் ரெட் கலர் காம்போ ரசனையாக உள்ளது. பின்பக்க டிசைனைப் பார்த்தால்தான் காலம் மாறியது அப்பட்டமாகத் தெரிகிறது. லாம்ப்ரெட்டாவின் காலத்தில் ஸ்கூட்டர்களின் மெக்கானிக்கல் பாகங்களை மறைத்து வைப்பதில் முனைப்பாக இருந்தார்கள். பாதி இன்ஜின், பாதி வீல், ஏர்பாக்ஸ் என முடிந்த அளவு மறைத்து வைத்தார்கள். ஆனால், SR150 நேர் எதிராக இருக்கிறது. டெயில் பகுதி மேல்நோக்கிப் பயணிக்கிறது. சைடு பேனல்கள் இன்ஜின், சஸ்பென்ஷன் என எதுவுமே மறைத்து வைக்கப்படவில்லை. இந்த மாற்றங்கள் ஏப்ரிலியாவை ஸ்போர்ட்டியாக மாற்றியிருந்தாலும், ரைடர் மற்றும் பில்லியனின் லெக்ரூமை குறைத்துவிட்டது.

SR150-ன் கிராஃபிக்ஸில் நான்கு நிறங்கள் கலந்து ஸ்கூட்டரை கலர்ஃபுல்லாகக் காட்டுகின்றன. லாம்ப்ரெட்டாவில் இருக்கும் டூயல் டோன் கலர் 1960-களின் வைரல். அந்தக் காலத்தில் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் இல்லாமலே மகிழ்ச்சியாகத்தான் ஸ்கூட்டர் ஓட்டியிருக்கிறார்கள்.

ஏப்ரிலியாவில் எல்லாமே மாடர்ன் எலெக்ட்ரானிக்ஸ். அதுவும் மேக் இன் இந்தியா புராடெக்ட்! லாம்ப்ரெட்டாவின் சைடு பேனல்களைத் திறந்துபார்த்தால் எலெக்ட்ரானிக் பாகங்களை டுகாட்டியும், கார்புரேட்டரை டெல்லோர்ட்டோவும், ரியர் மோனோஷாக்கை சாக்ஸ் நிறுவனமும் தயாரித்திருக்கிறார்கள். இந்த நிறுவனங்கள் அப்போது ரேஸுக்கான பாகங்களைத் தயாரித்தவர்கள்.

ரேஸ் என்று வந்தால், இரண்டு ஸ்கூட்டர்களுமே அதன் சமகாலத்தில் இருந்த பைக்குகளை வெட்கித் தலைகுனிய வைத்தவை. ஆகையால், இவை இப்போது மட்டுமல்ல எப்போதுமே எவர்கிரீன்தான்!

தொகுப்பு: ரஞ்சித்ரூஸோ