Published:Updated:

பல்ஸர், FZ, தண்டர்பேர்டு, ஆக்டிவா... 10 வருஷத்துக்கு முன்னாடி எப்படி... இப்போது எப்படி? #10YearChallenge

யூனிகார்ன்னு இப்போ சொன்னாகூட நமக்கு பழைய யூனிகார்ன்தான் ஞாபகம் வரும். யூனிகார்ன் 160 இல்லை. பஜாஜ், யமஹா, டிவிஎஸ் சந்தையைப் பிடிக்கப் போட்டிபோட்டுட்டு இருக்கிறப்போ, ஹோண்டா மட்டும் தனியா ஹோண்டா Vs ஹோண்டானுதான் சண்டைபோட்டுக்கும். அப்போ யூனிகார்னுக்கு இருந்த பெரிய வில்லன், ஹீரோ ஹோண்டா CBZ.

பல்ஸர், FZ, தண்டர்பேர்டு, ஆக்டிவா... 10 வருஷத்துக்கு முன்னாடி எப்படி... இப்போது எப்படி? #10YearChallenge
பல்ஸர், FZ, தண்டர்பேர்டு, ஆக்டிவா... 10 வருஷத்துக்கு முன்னாடி எப்படி... இப்போது எப்படி? #10YearChallenge

10 வருடங்கள், ஒரு பெரிய இடைவெளி! அதிலும் 18 வயசுலயிருந்து 30 வயசுக்குள்ள இருக்கிறவங்க பத்து வருஷத்துல ரொம்பப் பெரிய மாற்றங்களைச் சந்திச்சிருப்பாங்க. 10 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்தோம்னு பார்த்தா, இப்ப இருக்கிறதைவிட 5 கிலோ எடை குறைஞ்சு, ஒல்லியா, கொஞ்சம் கலரா, தொளதொள பேன்ட்டும் கட்டம்போட்ட சட்டையுமா இருந்திருப்போம். இப்போ `ஐ யம் எ க்ளாசி பெர்சன்'னு ஃபீல் பண்ணிட்டுத் திரியுறோம். சரி, அதெல்லாம்விடுங்க, நாம மேட்டருக்கு வருவோம். இன்னிக்கு மார்க்கெட்ல அதிகமா விற்பனையாகிற பைக், 10 வருஷத்துக்கு முன்னாடி எப்படி இருந்தது தெரியுமா? #10YearChallenge

பஜாஜ் பல்ஸர்

200 கோடி ரூபாய் முதலீடு செய்து பஜாஜ் உருவாக்கிய பல்ஸர் பைக், `பொல்லாதவன்' படத்தாலதான் விற்பனையாகுதுனு நம்பிட்டு இருந்த காலம் அது. அப்போ, பல்ஸர்னா 150, 180, 220 மட்டும்தான். 220 பல்ஸர்தான், அப்போதைக்கு FI, ரியர் டிஸ்க் பிரேக், க்ளிப் ஆன் ஹேண்டில்பார் வெச்சு வந்த முதல் பைக் பல்ஸர். 180-ல் வந்த இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர்ல ஏர் ஃபில்டர் கண்டிஷன், இன்ஜின் டெம்ப்ரேச்சர், பேட்டரி வோல்டேஜ், ஆயில் லெவல் என என்னென்னவோ பார்க்க முடியும். திரும்பிய உடனே ஆட்டோமெட்டிக்கா ஆஃப் ஆகுற இண்டிகேட்டர், முதல்முதலா அந்த 2008 பல்சர் 150-யில்தான் வந்துச்சு. இப்போ பல்ஸர்னா 135, 150, 180, 220, 160 NS, 200NS இருக்கு. இதுல பார்க்க, பல்ஸர் 180 மாதிரி இருக்கும் பல்ஸர் 150. அப்போதிருக்கும் அதே டிசைன்ல 150, புதுசா கிரே-பச்சை, கறுப்பு-சிவப்பு கலந்த 150-னு மூணு வேரியன்ட் வருது.  இடையில  AS-னு சொல்லி ஒரு வேரியன்ட் வேற வந்து, வந்த வேகத்துலேயே காணாமப்போச்சு. பல்ஸர், `மக்களின் சாம்பியன்'னு சொல்லலாம். ஆனா, ஒண்ணு மட்டும் மாறவேயில்லை. அப்போ, இப்போ, எப்போனாலும் பல்ஸர்ல கறுப்பு கலர்தான் டாப்! 

பல்ஸர், FZ, தண்டர்பேர்டு, ஆக்டிவா... 10 வருஷத்துக்கு முன்னாடி எப்படி... இப்போது எப்படி? #10YearChallenge

யமஹா  FZ

FZ வெச்சிருந்தா ரோட்ல தனியாத் தெரிவோம். வயசுப் பசங்களுக்கு மட்டுமல்ல, வயசானவங்களுக்கும்  FZ ஃபேவரிட்தான். பெர்ஃபாமென்ஸ் பட்டாசுகளான அப்பாச்சி, பல்ஸர் ரெண்டு பைக்கையும் கதிகலங்கவெச்சது FZ16. ஃபேரிங் இல்லாமல், பெரிய டேங்க்குடன் ஹேண்டில்பார், சீட் எல்லாம் பெரிய பைக்கை ஓட்டுறது மாதிரியான ஃபீல் தரும். அலாய்வீல், இன்ஜின், சைலன்ஸர் அத்தனையும் கறுப்பு நிறம். பார்க்க வித்தியாசமான சைலன்ஸர். செம பவர்ஃபுல் ஹெட்லைட். ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல்கூட இருந்துச்சு. அப்போ பல்சர் விலை 67,500 ரூபாய்.  FZ விலை 73,500 ரூபாய். இப்போ பல்ஸர் விலை 90,000 ரூபாய்.  FZ விலை 1,01,201 ரூபாய். FZ விலை எக்குத்தப்பா கூடியிருக்கேனு பார்த்தா, புது FZ பைக் கொஞ்சம், ஸ்டைல், ஸ்டிக்கர் மாறியிருக்கு. Fi தொழில்நுட்பம் புதுசு. ரெண்டு டிஸ்க் பிரேக் இருக்கு. அப்போ 14 bhp பவர்... இப்போ 13 bhp பவர். ஃபேரிங் ஸ்டைல், கிராஃபிக்ஸ்னு தோற்றத்துல சில மாற்றங்கள் இருக்கு. 

பல்ஸர், FZ, தண்டர்பேர்டு, ஆக்டிவா... 10 வருஷத்துக்கு முன்னாடி எப்படி... இப்போது எப்படி? #10YearChallenge

ஹோண்டா யூனிகார்ன்

2007-தான் யூனிகார்னுக்கு மறுஜென்மம். இப்ப இருக்கிற டிசைன் 2007-ல வந்த டிசைன். டிசைன்ல 10 வருஷம் கழிச்சும் பெரிய மாற்றமெல்லாம் இல்லை. அதே டிசைன்தான். ஆனா, இன்ஜின் ஒவ்வொரு முறை மாறும்போதும் முன்னாடி இருந்ததைவிட பெட்டராத்தான் மாறியிருக்கு. செம ஸ்மூத்தான இன்ஜின். இப்போவரைக்கும் இன்ஜின் ஸ்மூத்னெஸ், ஃபெர்ஃபாமென்ஸ் ரெண்டும் ஒண்ணா இருக்கும் பைக் யூனிகார்ன் மட்டும்தான். எடை, வெறும் 139 கிலோதான். யூனிகார்ன், பெர்ஃபாமென்ஸ், ஸ்டைல், மைலேஜ் எதிலுமே பெஸ்ட் கிடையாது. ஆனா, வாங்கினவங்க யாரும் ஏமாற்றம்னு வந்த நின்னது கிடையாது.

யூனிகார்ன்னு இப்போ சொன்னாகூட நமக்கு பழைய யூனிகார்ன்தான் ஞாபகம் வரும். யூனிகார்ன் 160 இல்லை. பஜாஜ், யமஹா, டிவிஎஸ் சந்தையைப் பிடிக்கப் போட்டிபோட்டுட்டு இருக்கிறப்போ, ஹோண்டா மட்டும் தனியா ஹோண்டா Vs ஹோண்டானுதான் சண்டைபோட்டுக்கும். அப்போ யூனிகார்னுக்கு இருந்த பெரிய வில்லன், ஹீரோ ஹோண்டா CBZ. இப்போது வில்லன் ஹார்னெட்.

பல்ஸர், FZ, தண்டர்பேர்டு, ஆக்டிவா... 10 வருஷத்துக்கு முன்னாடி எப்படி... இப்போது எப்படி? #10YearChallenge

ராயல் என்ஃபீல்டு

பெருசா வித்தியாசம் எதுவும் இல்லை. இப்ப நாம பார்க்கிற க்ளாசிக், தண்டர்பேர்டு எல்லாம் 10 வருஷத்துக்கு முன்னாடி வந்த அதே பைக்தான். ராயல் என்ஃபீல்டுல இப்ப பயன்படுத்துற Unit construction Engine, 2008-ல வந்தது. தடதட வைபரேஷன், டுபுடுபுடுபுடுபு சவுண்டு இதெல்லாம்தானே ராயல் என்ஃபீல்டின் அடையாளம். மாசத்துக்கு 2,000 பைக் வித்துக்கிட்டிருந்த என்ஃபீல்டு, இப்போ மாசம் 40,000 பைக் விற்பனை செய்யுது. இப்போதிருக்கும் தண்டர்பேர்டு, க்ளாசிக் எல்லாம் மாடர்ன் டிசைனுக்கு மாறியிருக்கு. அதாவது, க்ரோம் இருக்கிற இடத்துல கறுப்பு நிறம் பூசிட்டு, அலாய்வீல் மாட்டிவிட்டு, ஹேண்டில்பார் மாத்திட்டாங்க!

பல்ஸர், FZ, தண்டர்பேர்டு, ஆக்டிவா... 10 வருஷத்துக்கு முன்னாடி எப்படி... இப்போது எப்படி? #10YearChallenge

ஹோண்டா ஆக்டிவா

ஆக்டிவானு சொன்னா, நமக்கு என்ன ஞாபகம் வரும்? எப்பவும் ஸ்மூத் இன்ஜின், காம்பி பிரேக், கீ ஷட்டர், பார்க்கிங் பிரேக்தான் ஞாபகம் வரும். காரணம், இதெல்லாம் முதன்முதலா பார்த்தது ஹோண்டா ஆக்டிவாலதான். இந்த வசதிகள் எல்லாமே 2009-ம் ஆண்டு ஆக்டிவால முதல்முறையா கொண்டுவந்தாங்க. இப்போ உலகத்துலேயே அதிகமா விற்பனையாகிற பெஸ்ட் ஸ்கூட்டரா ஹோண்டா ஆக்டிவா இருக்கக் காரணம், 10 வருஷத்துக்கு முன்னாடி வந்த அதே மாடல்தான். அப்போ எல்லாருக்கும் பிடிச்ச கலர் கறுப்பு. வயசு வித்தியாசம், பாலினப் பாகுபாடு இல்லாம எல்லாருக்கும் பிடிச்ச ஸ்கூட்டர் ஆக்டிவாதான். 10 வருஷப் பாரம்பர்யம், இன்னும் தொடருது. டிசைனில் சின்னச் சின்ன மாற்றம் இருக்கு. ஆனா, அப்போ ஆக்டிவாவைப் பிடிச்சவங்களுக்கு இப்போவரைக்கு ஆக்டிவாதான் பிடிக்குது.

பல்ஸர், FZ, தண்டர்பேர்டு, ஆக்டிவா... 10 வருஷத்துக்கு முன்னாடி எப்படி... இப்போது எப்படி? #10YearChallenge

10 வருஷத்துக்கு முன்னாடி கார்கள் எல்லாம் எப்படி இருந்திருக்கும்? அடுத்த பதிவில் பார்ப்போம்.