வழக்கம்போல இந்த ஆண்டும் EICMA 2019 எனப்படும் மிலன் மோட்டார் சைக்கிள் ஷோ, பைக் ஆர்வலர்களை ஏமாற்றவில்லை. இந்தியா உட்பட உலகளவில் புதிதாகக் களமிறங்கப்போகும் டூ-வீலர்களை வரிசையாக ஒரே இடத்தில் பார்ப்பது என்பது எத்தனை அலாதியான அனுபவம்?

இம்முறை பைக் தயாரிப்பாளர்கள் பல மாடல்களைக் காட்சிப்படுத்தியிருந்தார்கள். இதில் பலரது கவனத்தை ஈர்த்த சில தயாரிப்புகள் இங்கே!

‘அடுத்த தலைமுறை எக்ஸ்ட்ரீம் பைக் எப்படி இருக்கும்’ என்பதை அதிரடியாகக் காண்பித்திருக்கிறது ஹீரோ.

எனவே தற்போது விற்பனை செய்யப்படும் மாடலுடன் ஒப்பிட்டால், இது செம ஷார்ப்பாகக் காட்சியளிக்கிறது. LED ஹெட்லைட், கட்டுமஸ்தான பெட்ரோல் டேங்க், உயரமான பின்பகுதி, USD ஃபோர்க், பெட்டல் டிஸ்க் பிரேக்ஸ், ரேடியல் பிரேக் கேலிப்பர், Slick Pattern டயர்கள் ஆகியவை அதற்கான உதாரணம்.

அதுவும் பின்பக்க LED டெயில் லைட்டுக்கு மேலே, Go Pro கேமரா இருப்பது செம! ஆனால் எக்ஸ்ட்ரீம் 200R பைக்கிலிருக்கும் அதே வீல்கள், ஃப்ரேம், இன்ஜின் ஆகியவைதான் Concept மாடலில் இருக்கின்றன என்றாலும், Production வெர்ஷனில் கணிசமான வித்தியாசம் இருக்கலாம்.

அதற்கேற்ப இன்ஜினில் ஆயில் கூலரைப் பார்க்க முடிந்தது. டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஹீரோ பங்கேற்காததால், அநேகமாக அடுத்த ஆண்டின் இறுதிக்குள் இந்த பைக் விற்பனைக்கு வரலாம். எது எப்படியோ, பல்ஸர் 200NS மற்றும் அப்பாச்சி RTR 200 4V உடன் போட்டி போடுவதற்கு, எக்ஸ்ட்ரீம் முழு மூச்சுடன் தயாராகிவிட்டது!

பைக்கில் ஆஃப் ரோடிங் செய்பவர்கள் மட்டுமல்ல, டூர் செல்பவர்களும் ஆர்வத்துடன் காத்திருந்த பைக் இதுவாகத்தான் இருக்கும். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளிவந்த இந்த கேடிஎம் ADV, அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய திறனைக் கொண்டிருக்கும் என நம்பலாம். டியூக் 390 பைக்கின் ஆஃப் ரோடு வெர்ஷனாக வந்திருக்கும் 390 அட்வென்ச்சரில் இருப்பது, அதே 373.2சிசி இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணிதான்; 44bhp பவர் மற்றும் 3.7kgm டார்க் என இதில் எந்த மாறுதலும் இல்லை என்பது ப்ளஸ்.

BS-6 டியூனிங்கில் இது இருக்கலாம். ஆனால் பைக்கின் பொசிஷனிங்கைக் கருத்தில் கொண்டு, டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் அதிக டிராவலுடன் கூடிய அட்ஜஸ்டபிள் சஸ்பென்ஷன் ஆகியவற்றை வழங்கியுள்ளது கேடிஎம். மேலும் டியூக் 390 உடன் ஒப்பிடும்போது, இதில் மெலிதான ஆனால் பெரிய டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன (முன்: 100/90-19; பின்: 130/70-17). 200மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் மற்றும் 855மிமீ சீட் உயரம் ஆகியவை, இது அட்வென்ச்சர் பைக் என்பதை உணர்த்திவிடுகின்றன. டியூக் 390 பைக்கைவிட 83மிமீ அதிக வீல்பேஸ் இருப்பதுடன் (1,430மிமீ), பெட்ரோல் டேங்க்கின் அளவும் 1 லிட்டர் அதிகரித்துள்ளது (14.5 லிட்டர்). முன்னே சொன்ன மாற்றங்களால், 390 அட்வென்ச்சரின் Dry Weight 158 கிலோவாக இருக்கிறது (இது டியூக் 390 விட 9 கிலோ அதிகம்). இந்த மாதம் இந்தியாவில் நடைபெறவிருக்கும் IBW 2019 நிகழ்வில், இது அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

உத்தேசமாக 3 லட்ச ரூபாய் விலையில் (எக்ஸ்-ஷோரூம்) இந்த ADV வரலாம். பிஎம்டபிள்யூ G310GS, ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் ஆகியவற்றுடன் போட்டி போடும். இந்த பைக்கின் அதே சேஸி - பாடி பேனல்கள் - பெட்ரோல் டேங்க் - ரேடியேட்டர் - Belly Pan - பின்பகுதி - ஸ்டீல் ட்ரெல்லிஸ் ஃப்ரேம் - டயர்கள் - TFT டிஸ்பிளே ஆகியவைதான் 250 அட்வென்ச்சர் பைக்கிலும் பயன்படுத்தப் பட்டுள்ளன. மற்றபடி LED ஹெட்லைட்டுக்குப் பதில் ஹாலோஜன் ஹெட்லைட், பெயின்ட் ஃபினிஷ், Continental டயர்களுக்குப் பதிலாக MRF Meteor FM2 டயர்கள், அட்ஜஸ்ட் செய்யமுடியாத WP Apex சஸ்பென்ஷன், ஆஃப் ரோடு ஏபிஎஸ் எனக் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் உள்ளன. இதில் டியூக் 250 பைக்கில் இருக்கும் அதே 248.8சிசி இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணிதான் பொருத்தப்படும் (30bhp பவர்/2.4kgm டார்க்).

ஹோண்டாவின் Flagship பைக்காக அறியப்படும் CBR1000RR-R Fireblade, புதிய பரிணாமத்தில் வெளிவந்திருக்கிறது. பெயரில் நிறைய R-கள் இருப்பதை வைத்தே, இது எந்தளவுக்கு ரேஸியான பைக் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

Honda Racing Corporation (HRC) உடன் சேர்ந்து இந்த பைக்கை ஹோண்டா தயாரித்துள்ளது. ஏரோ டைனமிக்கான டிசைன், LED ஹெட்லைட்டுக்கு இடையே Ram Air Duct, ஃபுல் ஃபேரிங்கின் இருபுறமும் இருக்கும் Winglets, குறைவான உயரத்தில் இருக்கும் பெட்ரோல் டேங்க் & பின்பக்க சீட் ஆகியவை அதற்கான உதாரணம்.

முந்தைய மாடலைவிட 5 கிலோ எடை அதிகரித்திருந்தாலும் (201 கிலோ), புத்தம் புதிய இன்ஜினால் அதைச் சரிக்கட்டிவிட்டது ஹோண்டா. இந்த நிறுவனத்தின் மோட்டோ ஜிபி பைக்கில் இருக்கும் இன்ஜினின் அதே (81மிமீ Bore X 48.55மிமீ Stroke) அளவுகளையே இதுவும் கொண்டிருக்கிறது.

மேலும் கேம்ஷாஃப்ட்டில் டைட்டானியம் Rod, DLC எனப் ப்ரீமியம் அம்சங்கள் உண்டு. இந்த இன்லைன் 4 சிலிண்டர், 999.9 இன்ஜின் - 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கூட்டணி, 214bhp@14,500rpm பவர் மற்றும் 11.3kgm@12,500rpm டார்க்கையும் வெளிப் படுத்துகிறது. எக்ஸாஸ்ட் பைப் பார்க்க பெரிதாக இருந்தாலும், அது Akrapovic தயாரிப்பு என்பதால், அதிரடியான சத்தம் கேரன்ட்டி. அலுமினிய சேஸி - ஸ்விங் ஆர்ம், 200 செக்ஷன் பின்பக்க டயர் ஆகியவை 1,455மிமீ வீல்பேஸுடன் சேர்ந்து, சிறப்பான கையாளுமைக்குத் துணை நிற்கும் எனலாம்.

CBR1000RR-R Fireblade பைக்கில் Nissin டிஸ்க் பிரேக்ஸ் & Showa நிறுவனத்தின் சஸ்பென்ஷன் இருந்தால், Fireblade SP மாடலில் Brembo Stylema டிஸ்க் பிரேக்ஸ் & Ohlins நிறுவனத்தின் சஸ்பென்ஷன் உள்ளது.

இன்ஜினுக்குப் பின்னால் மோனோஷாக் வைக்கப்பட்டிருப்பதால், அதனைப் பொருத்தத் தேவைப்படும் Link Type Bracket-கள் இங்கே கிடையாது. தவிர Key Barrel இல்லாததால் (கீலெஸ் இக்னீஷன் உண்டு), இன்டேக் போர்ட்டுக்குக் காற்றைத் தரும் Central Ram Air Duct இடம்பெற்றுள்ளது.

Bosch நிறுவனத்தின் Six-Axis IMU, 9 Level டிராக்ஷன் கன்ட்ரோல், ஏபிஎஸ், Launch கன்ட்ரோல், 5 இன்ச் கலர் TFT டிஸ்ப்ளே என ஹை-டெக் அம்சங்கள், இந்த Fireblade-ல் உண்டு.

க்ரோம் க்ரூஸர்களுக்குப் பெயர்பெற்ற ஹார்லி டேவிட்சன், அந்த அடையாளத்திலிருந்து மெல்ல வெளியே வந்து கொண்டிருப்பது தெரிகிறது.

எலெக்ட்ரிக் பைக்கான Livewire அதற்கான ஆரம்பப்புள்ளியாக இருந்தால், EICMA 2019-ல் இந்த நிறுவனம் காட்சிப்படுத்திய Pan America (அட்வென்ச்சர் டூரர்) மற்றும் Bronx (நேக்கட் ஸ்ட்ரீட் ஃபைட்டர்) அதன் நீட்சி எனச் சொல்லலாம்.

இதில் ஹார்லியின் லேட்டஸ்ட்டான Revolution Max சீரிஸ் லிக்விட் கூல்டு V-ட்வின் இன்ஜின்கள் இடம்பெற்றிருப்பது கூடுதல் சிறப்பம்சம். தனது பைக்குகளின் பவரை இந்நாள்வரை அந்த நிறுவனம் கூறியதில்லை என்றாலும், இந்த முறை அந்தக் கொள்கை சற்று தளர்த்தப்பட்டுள்ளது. அதன்படி Pan America பைக்கில் இருக்கும் 1,250சிசி இன்ஜின், 145bhp பவர் மற்றும் 12.2kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது;

Bronx பைக்கில் இருக்கும் 975சிசி இன்ஜின், 115bhp பவர் மற்றும் 9.5kgm டார்க்கைத் தருகிறது. Brembo டிஸ்க் பிரேக்ஸ் & Michelin டயர்கள், இந்த பைக்குகளில் இடம்பெற்றுள்ளன. 2020-ம் ஆண்டின் இறுதியில், ஹார்லி டேவிட்சனின் இந்தப் புதிய பைக்குகள் சர்வதேச சந்தைகளில் வெளிவரும்.

கடந்தாண்டு EICMA-வில் கான் செப்ட்டாக இருந்த RS 660, இந்த ஆண்டில் Production ரூபத்தில் வந்துவிட்டது. ஸ்போர்ட்டியான டிசைன் மற்றும் ஷார்ப்பான பாடி பேனல்கள் என ஏறக்குறைய அதே ஃபுல் ஃபேரிங் உடனான டிசைன் அம்சங்கள் இருப்பது வாவ். இதில் பொருத்தப் பட்டிருக்கும் புதிய 660சிசி - பேரலல் ட்வின் இன்ஜின், 100bhp பவரை வெளிப்படுத்துகிறது. நேக்கட் ஸ்ட்ரீட் பைக்கான Tuono 660 பைக்கில் இது 95bhp பவரைத் தருகிறது.

இதனுடன் பைக்கின் குறைவான Dry Weight சேரும்போது (169 கிலோ), அட்டகாசமான Power To Weight Ratio கிடைப்பது உறுதி! இதற்கு எடை குறைவான அலுமினிய ஃபிரேம்

- ஸ்விங் ஆர்ம் துணைநிற்கின்றன. இதே செட்-அப் தான் Tuono 660 பைக்கிலும் இடம் பெற்றுள்ளது. இந்த பைக்கின் Production வெர்ஷன், அடுத்த ஆண்டு நடைபெறப்போகும் EICMA 2020-வில் காட்சிக்கு வரலாம்.

ரேஸ் டிராக்குகளை மனதில் வைத்துத் தயாரிக்கப்பட்டுள்ளதால், RSV4 பைக்கில் இருக்கும் 5 மோடு டிராக்ஷன் கன்ட்ரோல், 6 Axis IMU, Quick Shifter, Wheelie கன்ட்ரோல், இன்ஜின் பிரேக்கிங் கன்ட்ரோல், க்ரூஸ் கன்ட்ரோல், 5 ரைடிங் மோடுகள் (Commute, Individual, Dynamic, Challenge, Time Attack) என RS 660 பைக்கில் இடம்பெற்றுள்ள தொழில் நுட்பங்களின் பட்டியல் நீள்கிறது. இதில் எவையெல்லாம் Tuono 660 பைக்கில் இருக்கும் என்பதில் தெளிவில்லை.

இந்தியாவில் வரிசையாகப் புதிய பைக்குகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும் பெனெல்லி, EICMA-விலும் தனது இருப்பை லியோன்சினோ 800 வழியே நச்செனக் காட்டியது. இந்த பைக்கின் 500சிசி மாடல் போலவே இது முதலில் தெரிந்தாலும், கட்டுமஸ்தாகக் காட்சியளிப்பது என்னவோ உண்மைதான்.

ரெட்ரோ டிசைனை ஸ்க்ராம்ப்ளர் பாணியில் வழங்கி அசத்தியுள்ளது பெனெல்லி. லியோன்சினோ 800 பைக்கில் இருக்கும் 754சிசி, 2 சிலிண்டர் இன்ஜின் - ஸ்லிப்பர் க்ளட்ச் உடனான 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் அமைப்பு, 81.6bhp@9,000rpm பவர் மற்றும் 6.7kgm@6,500rpm டார்க்கையும் வெளிப் படுத்துகிறது.

முன்பக்கத்தில் 50மிமீ Marzocchi USD - இரட்டை 320மிமீ Brembo டிஸ்க் பிரேக் - 120/70-17 டியூப்லெஸ் டயர் இருந்தால், பின்பக்கத்தில் மோனோஷாக் - 260மிமீ டிஸ்க் பிரேக் - 180/55-17 டயர் உள்ளது. 15 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொண்ட இந்த பைக், LED ஹெட்லைட் - TFT இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் என வசதிகளிலும் ஸ்கோர் செய்கிறது. இந்தியாவில் ஒருவேளை லியோன்சினோ 800 அறிமுகமானால், டுகாட்டியின் ஸ்க்ராம்ப்ளர் சீரீஸ் பைக்குகளுடன் அது போட்டி போடும்.

எதிர்பார்த்தபடியே, சுஸூகியின் ஸ்டாலில் பலரது கவனத்தைக் கவர்ந்த பைக் இந்த ADVதான்! ஏற்கெனவே விற்பனை செய்யப்பட்ட V-Strom 1000 பைக்குக்கு மாற்றாக வந்திருக்கும் இவை, இந்த நிறுவனத்தின் கடந்த காலங்களில் தயாரிக்கப்பட்ட மோட்டோக்ராஸ் பைக்குகளை (Desert Express: DR-Z, DR Big) நினைவுபடுத்தும்படியான தோற்றம் மற்றும் கலர்களைக் கொண்டிருக்கின்றன.

ஆனால் ஹாலோஜன் ஹெட்லைட்டுக்குப் பதிலாக ஸ்ப்ளிட் LED ஹெட்லைட், ஆஃப் ரோடுக்கான XT மாடலில் க்ளியர் லென்ஸ் இண்டிகேட்டர்களுக்குப் பதிலாக LED இண்டிகேட்டர்கள் (ஸ்டாண்டர்டு மாடலில் வழக்கமான இண்டிகேட்டர்கள்தான்) என மாடர்ன் அம்சங்களும் இருக்கிறது. மேலும் ADV-களுக்கே உரித்தான Beak போன்ற மட்கார்டு, முன்பைவிட தட்டையாகவும் அகலமாகவும் ஷார்ப்பாகவும் இருக்கிறது. LED ஹெட்லைட்டுக்கு மேலே இருக்கும் விண்ட்ஷீல்ட்டின் உயரத்தை அட்ஜஸ்ட் செய்ய முடியும் என்பது ப்ளஸ்.

பெட்ரோல் டேங்க்கின் இருபுறமும் உள்ள நீளமான Extension-கள், ரேடியேட்டருக்குப் பாதுகாப்பு அளிக்கவும் செய்கின்றன (கூடுதலாக XT மாடலில் Tubular இன்ஜின் கார்டு உண்டு). ஸ்மார்ட்டான பாடி பேனல்கள், புதிய கிராப் ரெயில்கள், LED டெயில் லைட்ஸ், சிங்கிள் பீஸ் சீட்டுக்குப் பதில் ஸ்ப்ளிட் சீட் எனப் பைக்கின் பின்பக்கத்திலும் அதிக மாற்றம் தெரிகிறது. இதில் பொருள்களை எடுத்துச் செல்லக்கூடிய Panniers வைப்பதற்கும் வசதியிருக்கிறது;

ஸ்டாண்டர்டு மாடலில் அலாய் வீல்கள் இருந்தால், XT மாடலில் DID Aluminium Wire-Spoke வீல்களில் டியூப்லெஸ் டயர்கள் (முன் - 19 இன்ச்; பின் - 17 இன்ச்). Twin Spar அலுமினிய ஃபிரேமில் பொருத்தப்பட்டுள்ள 1,037சிசி லிக்விட் கூல்டு இன்ஜின், 107bhp பவர் மற்றும் 10kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இன்டேக் & எக்ஸாஸ்ட் Cam-களை ரீ-டியூன் செய்ததால், 7% அதிக பவர் கிடைத்திருக்கிறது. இதனுடன் ஸ்லிப்பர் க்ளட்ச் உடனான 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. முன்பைப் போலவே சீரான பவர் டெலிவரியுடன், முன்பைவிட 15% அதிக சிறப்பான கூலிங்கைத் தரும்படி ரேடியேட்டர் & ஆயில் கூலர் வடிவமைக்கப் பட்டுள்ளது.

IMU Assistance உடன் இயங்கும் Suzuki Intelligent Ride System (SIRS), புதிய V-Strom பைக்கில் இடம்பெற்றுள்ளது. இதில் 3 பவர் மோடுகள், 3 மோடுகளைக் கொண்ட டிராக்ஷன் கன்ட்ரோல் (தேவைப்பட்டால் ஆஃப் செய்யலாம்), Lean Sensitive ABS ஆகியவை உண்டு.

XT மாடலில் கூடுதலாக Hill Hold கன்ட்ரோல் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் உண்டு. Kayaba-வின் 43மிமீ USD மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷன் செட்-அப்பை, முழுவதுமாக அட்ஜஸ்ட் செய்யமுடிவது செம. முன்பக்கத்தில் உள்ள 310 மிமீ இரட்டை டிஸ்க் பிரேக்கில், Tokico Monobloc கேலிப்பர் இருக்கிறது. அடுத்த ஆண்டில் இந்தியாவில் V-Strom 1050/1050 XT வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.