மஹிந்திரா XUV 5OO-ல் பெட்ரோல் இன்ஜின் வந்துவிட்டது என்றால், ஹோண்டா CR-Vயில் டீசல் இன்ஜின் வந்துவிட்டது. ‘CR-V எஸ்யூவியில் டீசல் ஆப்ஷனைக் கொண்டு வந்தால்தான் என்ன’ என்று மக்கள் புலம்பியது ஹோண்டாவின் காதில் கேட்டுவிட்டதோ என்னவோ! அது மட்டுமில்லை; ஹோண்டாவுக்கு எக்ஸ்ட்ரா குடோஸ் கொடுக்கலாம். காரணம், டீசல் மாடலில்தான் 7 சீட்டர் CR-V கிடைக்கும். தவிர CR-Vக்கு இது ஐந்தாவது பிறப்பு. 5-வது ஜெனரேஷன் CR-Vயில் ஒரு ஷார்ட் டிரைவ்.

வெளியே

பார்த்தவுடனேயே சொல்லிவிடலாம். பழசைவிட புதுசு கொஞ்சம் நீளம். (4,571 மிமீ). டைமண்ட் கட் அலாய் வீல்கள் செம ஸ்டைலிஷ். பின்பக்கம் அதே மொழுக் டிசைன். பாதி கூபேபோல இருக்கிறது. தடிமனான சிங்கிள் பீஸ் க்ரோம் கிரில், LED ஹெட்லைட்ஸ், ‘L’ வடிவ டெய்ல் லைட்ஸ், சிறிய ஸ்பாய்லர், ரெயின் சென்ஸிங் வைப்பர்ஸ் என்று லுக் பக்காவாக இருக்கிறது. சொல்லப் போனால், மொத்தமாக மாறி விட்டது புதிய CR-V. ஆனால், ஃபார்ச்சூனர், எண்டேவர்போல ‘வாவ்’ என்று வியக்க வைக்கும்படி இதன் டிசைன் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

உள்ளே

ஏற்கெனவே CR-Vயின் இன்டீரியர் ப்ரீமியம்தான். தரம், டேஷ்போர்டின் டிசைன், ஃபிட் அண்ட் ஃபினிஷ் எல்லாமே இப்போது இன்னும் ப்ரீமியம் லெவலுக்கு மாறியிருக்கிறது. ஆல் பிளாக் தீம் இன்டீரியரில் ஃபாக்ஸ் லெதர், பியானோ பிளாக் மற்றும் மர வேலைப்பாடுகள் கொண்ட டேஷ்போர்டு, ஆகியவை மெருகூட்டுகின்றன.

இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் எல்லாமே டிஜிட்டல் மயம். செமி ஃப்ளோட்டிங் டச் ஸ்க்ரீனை வைத்து, கேபினை இன்னும் ரிச்சாகக் காட்ட முயற்சித்திருக்கிறார்கள். ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ இரண்டும் ஸ்டாண்டர்டு. ரிவர்ஸ் எடுக்கும்போது பின் சக்கரங்களுக்கு அருகே சிறு சிறு தடைகள் இருந்தால், பொதுவாக அது கேமரா கண்ணில் இருந்து தப்பிவிடும். ஆனால், மல்டிவியூ ரிவர்ஸ் கேமரா இருப்பதால், சகலமும் இதில் சிக்கிவிடுகிறது.

சில கார்களில் கியர்பாக்ஸே பாதி இடத்தை அடைக்கும். இங்கே பட்டன் கியர் செலெக்டர் இருப்பதால், முன்வரிசையில் இடவசதி மேலும் தாராளமாக இருக்கிறது. இரண்டு கப் ஹோல்டர்கள், ஸ்டோரேஜ் பாக்ஸ், கப்பிஹோல்கள் என கேபின் பிராக்டிக்கலாகவும் இருக்கிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட USB ஸ்லாட்கள். வாவ்!

சீட் கம்ஃபர்ட்டில் கெத்து காட்டுகிறது CR-V. குஷனிங் சூப்பர். முன் சீட்டைவிட இரண்டாவது வரிசை இருக்கைகள் சற்றே தூக்கலாக இருக்கின்றன. அதாவது ‘தியேட்டர் சீட்டிங்’ ஸ்டைலில் இருக்கிறது. அதனால் முன்பக்கம் சாலை நன்றாகத் தெரிகிறது. இரண்டாவது இருக்கையில் உட்காருகிறவர்கள் 6 அடி உயரம் கொண்டவர்களாக இருந்தால், கால்களை நீட்டி வைத்து உட்கார முடியாது. தலையும் கூரையில் இடிக்கும். ஆனால், சீட்டின் புஷ்பேக்கைப் பயன்படுத்தினால், லெக்ரூம் தாராளம். சீட் ரெக்லைனிங்கும், தொடை சப்போர்ட்டும் அருமை.

மூன்றாவது சீட் வரிசைதான் புதிது. மூன்றாவது வரிசை இருக்கைகளில் இடவசதி வழக்கம்போல் ஓகே ரகம்தான். உள்ளே போய் வெளியே வருவது, பெரிய சாதனையாகத்தான் இருக்கிறது. சீட் ஸ்ட்ராப்பை இழுத்து, சீட்டை மடித்து, அப்புறம் மூன்றாவது வரிசைக்குப் போக யோகா பழகியிருக்க வேண்டும். பெரியவர்களுக்கு இங்கே லெக்ரூம் சுமார்தான். பத்து இருபது நிமிடப் பயணம் என்றால் மட்டும் இதில் கடைசி வரிசை சீட்களில் பயணிக்கலாம். ‘இருக்கிறது ஆனால் இல்லை’ என்பதைப்போல இதன் டிக்கி வெறும் 150 லிட்டர்தான். மூன்றாவது வரிசை சீட்டுகளை மடக்கிவிட்டால்... டிக்கியின் அளவு 472 லிட்டராக அதிகரிக்கிறது. இரண்டாவது வரிசையையும் மடக்கிவிட்டால், 936 லிட்டர் கிடைக்கும்.

மூன்றாவது வரிசை சீட்டை தரையோடு தரையாகப் படுக்க வைக்கவும் வழி வைத்திருப்பது நல்ல ஐடியா.

டிரைவிங்

1.6 லிட்டர், 4 சிலிண்டர் கொண்ட CR-V, 120bhp பவரையும், 30 kgm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. சிங்கிள் டர்போ இன்ஜின் கொண்ட இதில் 2 வீல் டிரைவ், 4 வீல் டிரைவ் என்று இரண்டு வேரியன்ட்கள் இருந்தாலும் - நாம் ஓட்டியது 2 வீல் டிரைவ்தான்.மேலோட்டமாகப் பார்த்தால் ஒரு எஸ்யூவிக்கு இது போதாதே என்று சந்தேகம் எழலாம். ஆனால், 9 கியர்கள் கொண்ட இதன் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் சிஸ்டம் அற்புதமாக வேலை செய்வதால், சிட்டிக்குள் ஓட்டும்போது போதுமான சக்தி கிடைக்கிறது. நெடுஞ்சாலையில் க்ரூஸ் செய்யவும் வசதியாக இருக்கிறது. காரணம் ஆரம்ப கியர்கள் அனைத்துமே ஷார்ட் கியராக இருப்பதால், ஆக்ஸிலேரேஷன் கொடுத்தால், கொடுக்கும் அதே வேகத்தில் சக்தி கிடைக்கிறது. டாப் கியர்கள் லாங் கியர்களாக இருப்பதால், க்ரூஸிங்குக்கும் ஏற்றதாக இருக்கிறது. பேடில் ஷிஃப்ட் மூலமாக கியர் மாற்றுவதும் வசதியாக இருக்கிறது. அனைத்துக்கும் மேலாக, இது சத்தம் இல்லாமல் இயங்கிறது என்பது இதன் பெரிய ப்ளஸ். மிட் ரேஞ்சில் செல்லும்போது மட்டும் ஓவர்டேக் செய்ய சக்தி போதவில்லை என்பதுதான் ஒரே குறை.

2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்ட CR-V யும் உண்டு. ஆனால் இதில் இருப்பது 2 வீல் / ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டம் மட்டுமே. இது கொடுக்கும் 154bhp சக்தியும் 18.9kgm டார்க்கும் நெடுஞ்சாலைகளில் ஓட்டும் போது சீராக வெளிப்படுகின்றன. ஆனால், நகர்ப்புறங்களில் ஓட்ட மிகவும் வசதியாக இருக்கிறது. எனினும், இது பர்ஃபாமன்ஸ் விரும்பிகளைத் திருப்திப்படுத்துமா என்பது சந்தேகமே!

ஹேண்ட்லிங்

சிட்டிக்குள் இவ்வளவு பெரிய காரை ஓட்ட கஷ்டமாகவே இல்லை. காரணம், இதன் லைட் வெயிட் ஸ்டீயரிங் ‘சட் சட்’ என ரியாக்ட் ஆவதுதான். பிரேக்ஸும் நச்! ரைடு குவாலிட்டியையும் பழைய CR-Vயைவிட அதிகரித்திருக்கிறது ஹோண்டா. இதனால் மோசமான பள்ளங்களை ஈஸியாகச் சமாளிக்கிறது சஸ்பென்ஷன். இதன் கிரவுண்ட் கிளியரன்ஸும் சூப்பர்.

உயரமான கார் என்றதும், ஹை ஸ்பீடு ஸ்டெபிலிட்டியை நினைத்துப் பயந்தேன். ஆனால், பயந்த அளவுக்கு இல்லை. நீளமான வீல்பேஸ், அகலமான கேபின், பெரிய வீல்கள் நம்மை ரிலாக்ஸாகவே வைத்துக் கொள்கின்றன. டைட் கார்னரிங்கில் மட்டும் லேசான பாடி ரோல் தெரிந்தது.

சன்ரூஃப், 7 இன்ச் டச் ஸ்கீரின், ரியர் வியூ கேமரா, ஆப்பிள் கார் ப்ளே, ஆண்ட்ராய்ட் ஆட்டோ, USB போர்ட்ஸ், காற்றுப்பைகள் என்று குறையே இல்லாமல் பல வசதிகளைக் கொடுத்திருக்கிறது ஹோண்டா.

தொகுப்பு: வேல்ஸ், தமிழ் - படங்கள்: கே.ராஜசேகரன்

வாங்கலாமா?

CR-Vயில் எல்லாமே மாறிவிட்டது. 7 சீட்டர், புதிய டீசல் இன்ஜின், பல்க்கியான தோற்றம், ப்ரீமியம் கேபின் என்று எஸ்யூவி பிரியர்களுக்கு இது ஓகேதான். சிட்டி டிரைவிங் அற்புதம். ஆனால், இதன் டாப் எண்ட் பர்ஃபாமென்ஸில் இருக்கும் பவர் குறைபாடு, வேகப்பிரியர்களை எந்தளவு ஈர்க்கும் என்று தெரியவில்லை. ். மேலும், 30 லட்ச ரூபாய் விலைக்கு வருவதால், ஃபார்ச்சூனர், எண்டேவருடன் போட்டிபோட வேண்டும் என்பதை நினைவில் கொண்டு, ஹோண்டா இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்!