Published:Updated:

இது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்!

இது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்!
இது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்!

பட்ஜெட் செக்மன்ட் கார்களுக்கு எப்போதுமே இந்திய சந்தையில் வரவேற்பு அதிகம். கடுமையான போட்டிகள் நிறைந்த இந்தக் குறைந்த விலை கார் செக்மண்ட்டில் அதகளம் காட்ட வந்துள்ளது டாடா மோட்டர்ஸ் நிறுவனத்தின் வெளியீடான டாடா 'Tiago - டியாகோ'. குறுகலான சாலைகளிலும் புகுந்து விளையாடும், காம்பேக்ட்டான ஹேட்ச்பேக் வகை கார்களுக்கு இந்தியர்கள் இடையே நல்ல வரவேற்பு இருப்பதைக் கண்டு டியாகோவை சந்தையில் இறக்கியுள்ளது டாடா. டியாகோவின் சிறப்புகள் என்னென்ன? அலசுவோம்...

இது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்!

பில்டு குவாலிட்டியில் கம்பீரம் காட்டியிருக்கிறது டாடா, முன் பக்கம் காரின் ஹெட்லைட் கீழே பனி விளக்குகள் இருக்கின்றன. பின் பக்கம் வாஷ் வைப்பர், டிஃபாகருடன் இருப்பது ப்ரீமியம் லெவல். அங்கங்கே ஷார்ப் லைன்கள் மற்றும் அலாய் வீல்கள், டியாகோவுக்கு இன்னும் ப்ரீமியம் லுக்கையே கொடுக்கின்றன (டாப் வேரியன்ட்டான XZA-வில் காணப்படுகிறது).

வசதிகள், பாதுகாப்பு...
 
வெல் பேக்கேஜ்டாக டியாகோவை வடிவமைத்திருக்கிறது டாடா. டியாகோவில் உள்ள ஸ்க்ரீன், ரிவர்ஸ் கேமரா மாதிரி செயல்படுகிறது. ஹர்மான் 8 ஸ்பீக்கர் சிஸ்டம், டாடாவுக்கு கைக்கொடுக்கிறது. ரியர் வாஷ்/வைப்பர், ரிவர்ஸ் சென்ஸார், ஸ்பீடு சென்ஸிங் டோர் லாக்ஸ், ஹைட் அட்ஜஸ்டபிள் டிரைவர் சீட், ஸ்டீயிரிங் டில்ட் அட்ஜஸ்ட்மென்ட், 14 இன்ச் அலாய் வீல், 175 மிமீ அகலமான டயர்கள், இரண்டு காற்றுப் பைகள், சிட்டி-எக்கோ என இரண்டு டிரைவிங் மோடுகள்... சூப்பர் டாடா! க்ரோம் மற்றும் டெக்ஷர் வேலைப்பாடுகள் மூலம் டியாகோவுக்கு ப்ரீமியம் லுக்கை வரவழைத்திருக்கிறது டாடா. குஷனிங் சாஃப்ட் ஆக இருக்கிறது. பூட் வசதி பிரமாதம், 242 லிட்டர் இடத்துக்குள் பிரச்னையின்றி பல பொருள்களை அடுக்கலாம்...

ரைடு அண்ட் ஹேண்ட்லிங்

3 சிலிண்டர் இன்ஜின், ஓவர்டேக்கிங்கில் சிறப்பாகவே இயங்குகிறது, 120-க்கு மேல் ஜிவ்வென்று போகிறது. இதன் 0-100 கி.மீ வேகமும் அதிகம்தான். 16.70 விநாடிகளில் பறக்கிறது டியாகோ. ரிலாக்ஸாக ஓட்டினால், இதன் 5 ஸ்பீடு AMT செல்லப் பிள்ளையாக இருக்கும். மேனுவல் மோடில் டியாகோ இன்னும் ஃபன்னாக இருக்கிறது, கியர்பாக்ஸும் திணறவில்லை.

இது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்!

டியாகோவின் எடை அனைத்து இடத்திலும் காரை ஸ்டேபிளாகவே வைத்திருக்கிறது. அதேநேரத்தில் லோ ஸ்பீடுகளிலும் மேடு பள்ளங்களைப் பந்தாடுகிறது. இதனால், பயணிகள் பெரிய காரில் பயணிப்பதைப்போல உணர்வைக் கொடுக்கிறது. கேபின் இன்சுலேஷனும் அருமை. இதன் ஸ்டீயரிங்கும் லைட் வெயிட். கார்னரிங்கில் திருப்பி ஓட்டும்போது செம என்டர்டெயின்மென்ட் கிடைக்கிறது. வலிமையான பிரேக்குகள் கட்சிதம்.

இது 'வைரல்' லெவல் பட்ஜெட் கார்!

டியாகோவின் ஸ்கோர் என்ன?

சிக்கலின்றி பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தும் இன்ஜின், பெரிய கார் போன்ற ஸ்டெபிலிட்டி மற்றும் பட்ஜெட் விலை என்று டாடா வெறித்தனம் காட்டுகிறது. மேலும், அலாய் வீல், பின்பக்க வைப்பர், ரிவர்ஸ் சென்ஸார், ஸ்டீயரிங் அட்ஜஸ்ட்மென்ட், 8 ஸ்பீக்கர் சிஸ்டம், 2 காற்றுப்பைகள், டிரைவிங் மோடுகள் என்று ஏகப்பட்ட வசதிகளைக் கொண்டுள்ளதால், பட்ஜெட் கார் விரும்பிகள் எதிர்ப்பார்க்கும் அனைத்தையும் நிறைவேற்றி சிக்ஸர் அடிக்கிறது டியாகோ! பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரு வேரியன்ட்களிலும் கிடைக்கும். 

டியாகோ காரை வாங்க விருப்பமா? இப்போதே நீங்கள் இருக்கும் ஏரியாவில் டியாகோவை டெஸ்ட் டிரைவ் செய்யலாம்! கீழுள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும்...

விவரங்களைப் பெற