Published:Updated:

கால் டாக்ஸி ரேட்டில் பறக்கும் கார் சேவை! - ஜெர்மன் நிறுவனம் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் #MyVikatan

கால் டாக்ஸி ரேட்டில் பறக்கும் கார் சேவை! - ஜெர்மன் நிறுவனம் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் #MyVikatan
கால் டாக்ஸி ரேட்டில் பறக்கும் கார் சேவை! - ஜெர்மன் நிறுவனம் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் #MyVikatan

காராவது, பறக்கிறதாவது! யார்கிட்ட கதை விடுறீங்கன்னு சொல்ற ஆளா நீங்க? அப்படினா, ஜெர்மனியின் முனிச் (Munich) நகருக்கு வந்தால் உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்வீர்கள்.. ஆம் கடந்த ஒரு வாரமாகவே ஜெர்மனி முழுக்க இதே பேச்சுதான்.

கால் டாக்ஸி ரேட்டில் பறக்கும் கார் சேவை! - ஜெர்மன் நிறுவனம் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் #MyVikatan

சோதனை முயற்சி வெற்றி பெற்ற நிலையில், அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது இதை உருவாக்கிய டீம். முட்டை வடிவ மையப்பகுதி, இரண்டு பக்கங்களிலும் இறக்கை போன்ற அமைப்பு - ஆனால், ஹெலிகாப்ட்டர் போன்ற வால் இல்லை. பேட்டரியில் இயங்கும் இந்த கார் ஜெர்மனியின் முனிச் நகரில் உள்ள லிலியம் (Lilium) கம்பெனியின் தயாரிப்பு.

கால் டாக்ஸி ரேட்டில் பறக்கும் கார் சேவை! - ஜெர்மன் நிறுவனம் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் #MyVikatan

நின்ற இடத்திலிருந்தே பறக்கும் வசதிகொண்ட இந்த கார், 2025 ல் மக்களின் பயன்பாட்டுக்கு வருகிறது. இது கால் டாக்ஸி போன்று செயல்படும். இதன் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 300 கிமீ ஆக இருக்கும். பறக்கும் கார் பற்றி ஒரு நேர்காணல் வேண்டும் என்று லிலியம் தலைமை அதிகாரி, ரெமோ கெர்பர் அவர்களைத் தொடர்புகொண்டோம். உடனடியாக, புகைப்படங்கள், வீடியோ மற்றும் b-roll ஆகியவற்றை உபயோகப்படுத்திக் கொள்ள, கம்பெனியின் தகவல் தொடர்பு அதிகாரி ஆலிவர் லிங்க் அனுப்பியிருந்தார்.

கால் டாக்ஸி ரேட்டில் பறக்கும் கார் சேவை! - ஜெர்மன் நிறுவனம் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் #MyVikatan

ரெமோ கெர்பர், இந்த காரைப் பற்றி குறிப்பிடும்போது, ``ஜெட் விமானத்தின் 'fixed wing' வடிவமைப்பில் இது உருவாகி உள்ளதால் இன்ஜினின் இயக்குத்திறன் சிறப்பாக செயல்பட மிகவும் ஏதுவாக இருக்கும்" என்றார். மேலும் அவர் கூறும்போது, ``இதில் 5 நபர்கள் மற்றும் அவர்களின் உடைமைகள், ஒரு பைலட் எனப் பயணம் செய்யும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய விமானப் போக்குவரத்துத் துறையிடமும் அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகத்திடமும் சான்றிதழ் பெற ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன" என்றார்.

கால் டாக்ஸி ரேட்டில் பறக்கும் கார் சேவை! - ஜெர்மன் நிறுவனம் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் #MyVikatan

``இந்த இன்டர்நெட் உலகத்தில் மக்கள் எளிதில் இந்த காரை உபயோகிக்க என்ன மாதிரியான ஏற்பாடுகள் செய்திருக்கிறீர்கள்?"  என்று நாம் கேட்டதற்கு ``ஸ்மார்ட் போன் ஆப் மூலமாக எங்கள் பறக்கும் காரை புக் செய்யலாம். உதாரணமாக, அமெரிக்காவை எடுத்துக்கொண்டால், உபர் கார் மூலமாக 20 மைல் தூரம் செல்ல 48 நிமிடங்கள் ஆகிறது. அதற்காக, பயணம் செய்யும் நபர் 30 டாலர் கொடுக்க வேண்டியிருக்கும். ஒரு நாளைக்கு இது மாதிரி உபர், 10 சவாரி வரை எடுக்கமுடியும். அப்படிப் பார்த்தால், ஒரு நாளைக்கு 300 டாலர், அதாவது வருடத்துக்கு 75,000 சம்பாதிக்க முடியும். எங்கள் பறக்கும் காரில் (Lilium Jet) 12 நிமிடத்தில் 20 மைல் தூரத்தை அடைய முடியும். அதற்காக நாங்கள் வாங்கப் போகும் தொகை 50 டாலர் மட்டுமே. ஒரு நாளைக்கு 40 ட்ரிப் வரை செல்ல முடியும். கணக்குப் பார்த்தால், ஒரு நாளைக்கு 2000 டாலர், வருடத்துக்கு 1.5 மில்லியன் டாலர் வரை வருமானம் கிடைக்கும்.

கால் டாக்ஸி ரேட்டில் பறக்கும் கார் சேவை! - ஜெர்மன் நிறுவனம் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் #MyVikatan

மொத்தமாக, 101.4 மில்லியன் டாலர்கள் இந்த ப்ராஜெக்ட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் பிரபல முதலீட்டாளர்  பிராங்க் தீலன் அவர்களிடம் பலர், நெகடிவ் ஆக இந்த ப்ராஜெக்ட்டுகளைப் பற்றி சொல்லி பயமுறுத்தியுள்ளனர். ஆனாலும், அவர் எங்கள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளார். மற்றும் ஸ்கைப் நிறுவனத் தலைவர் நிக்லாஸ் சென்ஸ்ட்ராம் அவர்களின் வெஞ்சர் கேப்பிடல் நிறுவனம், Tencent என்ற சீனாவின் பிரபல இன்டர்நெட் நிறுவனம் என்று எங்கள் முதலீட்டாளர்கள் எங்கள் மீது நம்பிக்கையுடனே உள்ளனர். Joby Aviation, Kitty Hawk போன்ற பிரபல கம்பனிகளும் பறக்கும் கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. போட்டியை எப்படி சமாளிக்கப் போகிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம்"Uber for helicopters", அமெரிக்காவில் உள்ள மன்ஹாட்டனிலிருந்து JFK ஏர்போர்ட் செல்ல 195 டாலர் வாங்கும் பட்சத்தில் நாங்கள் 70 டாலரை நிர்ணயிக்க இருக்கிறோம். எனவே, மக்கள் எங்கள் டாக்ஸியைதான் தேர்வு செய்வார்கள்’’ என்றார் நம்பிக்கையுடன். 

செய்தி : ஜேசு ஞானராஜ் 

Vikatan