Published:Updated:

இந்த காரைப்போலவே இதன் சிறப்பம்சங்களும் மிக நீளம்!- இந்தியாவில் களமிறங்கியது Benz V-Class Elite

Luxury Multi-Purpose Vehicle (MPV) செக்மென்ட்டில் சோலோவாகக் களமிறங்கியிருக்கிறது V-Class Elite

Mercedes Benz V-Class Elite
Mercedes Benz V-Class Elite

V-Class Elite லக்ஸூரி எம்பிவி-யை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது மெர்சிடீஸ் பென்ஸ். 1.10 கோடி ரூபாய்க்கு (இந்திய எக்ஸ்-ஷோரூம் விலை) `Luxury Multi-Purpose Vehicle (MPV) செக்மென்ட்டில் சோலோவாகக் களமிறங்கியிருக்கிறது Mercedes Benz V-Class Elite.

ஜெர்மனியைவிட ஸ்பெயினில் கார் உற்பத்திச் செலவு குறைவு என்பதால், ஸ்பெயினில் உற்பத்தி செய்யப்பட்டு, இந்தியாவுக்கு CBU முறையில் (Completely Built Unit) இந்த கார் முழுதாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

6 சீட்கள் (3 வரிசை இருக்கைகள்), LWB (Long Wheelbase) வெர்ஷனாக வந்திருக்கும் இந்த காரில் இருப்பது, BS-6 மாசு விதிகளுக்கு உட்பட்ட மெர்சிடீஸ் பென்ஸின் புதிய OM 654 சீரிஸ் டர்போ டீசல் இன்ஜின். 163 bhp பவர் மற்றும் 38kgm டார்க்கை வெளிப்படுத்தும் இந்த 1950சிசி இன்ஜின். 9G-Tronic ஆட்டோமோடிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

Vikatan

மசாஜ் செய்யக்கூடிய Climatized Captain இருக்கைகள், 6 காற்றுப்பைகள், 360 டிகிரி கேமரா பார்க்கிங் அசிஸ்ட், சென்டர் கன்சோலில் பிரிட்ஜ் வசதி, Nappa லெதர் உள்ளலங்காரம், 640W - 15 ஸ்பீக்கர் Burmester Surround சவுண்ட் சிஸ்டம், பனோராமிக் ஸ்லைடிங் சன்ரூப், 17 இன்ச் அலாய் வீல்கள், அடாப்டிவ் டேம்பர்கள் & பிரேக் லைட்ஸ், ஆம்பியன்ட் லைட்டிங், எலெக்ட்ரிக் ஸ்லைடிங் கதவுகள், Attention Assist, EasyPack டெயில்கேட், Thermotronic ஏசி சிஸ்டம், LED Intelligent லைட்டிங் சிஸ்டம், ஹீட்டட் & ஆட்டோ டிம்மிங் மிரர்கள், எலெக்ட்ரிக்கலாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன்பக்க இருக்கைகள் என இதன் சிறப்பம்சங்களின் பட்டியல் காரைப் போலவே மிக நீளம்.

ஏற்கெனவே விற்பனையில் இருக்கும் Mercedes Benz V-Class லக்ஸூரி எம்பிவி 68.40 முதல் 81.90 லட்ச ரூபாயில் இரு வேரியன்ட்களில் வழக்கமான மாடல் கிடைத்த நிலையில், எதிர்பார்த்தபடியே அதிக விலையில் இந்த Elite வெர்ஷன் வெளிவந்திருக்கிறது. டொயோட்டா Velfire மற்றும் கியா கார்னிவல் ஆகியவை போட்டியாளர்களாக இருந்தாலும், இவை எதுவுமே இந்தியச் சாலைகளில் இன்னும் டயர் பதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.