Published:Updated:

கொரோனா அச்சம்: பணப் பரிவர்த்தனையைத் தவிர்த்து டிஜிட்டல் பேமன்ட் பக்கம் ஒதுங்கும் மக்கள்!

டிஜிட்டல் பேமன்ட்
News
டிஜிட்டல் பேமன்ட்

ஏற்கெனவே மார்ச் 16-ம் தேதி ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் வங்கிகளை டிஜிட்டல் பேமன்ட் பயன்படுத்த வாடிக்கையாளர்களை ஊக்குவிக்குமாறு தெரிவித்திருந்தார் .

Published:Updated:

கொரோனா அச்சம்: பணப் பரிவர்த்தனையைத் தவிர்த்து டிஜிட்டல் பேமன்ட் பக்கம் ஒதுங்கும் மக்கள்!

ஏற்கெனவே மார்ச் 16-ம் தேதி ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் வங்கிகளை டிஜிட்டல் பேமன்ட் பயன்படுத்த வாடிக்கையாளர்களை ஊக்குவிக்குமாறு தெரிவித்திருந்தார் .

டிஜிட்டல் பேமன்ட்
News
டிஜிட்டல் பேமன்ட்

உலகமெங்கும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்க, மக்கள் மிகவும் கவனத்துடன் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுவருகிறது. பலரும் வீட்டிலிருந்து பணி செய்யத் தொடங்கிவிட்டனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் உலக சுகாதார அமைப்பானது (WHO) பணப் பரிமாற்றம் மூலம்தான் கொரோனா வைரஸ் எளிதாகப் பரவுவதாகவும், பண நோட்டுகளில் அதிக நாள்கள் கொரோனா நீடிக்கும் என்றும் தெரிவித்திருந்தது. பணம் ஒன்றுதான் எல்லாருடைய கைகளிலும் மாறி மாறிச் செல்லக் கூடியது.

இந்த அச்சத்தால் பெரும்பாலான மக்கள் கொரோனா வைரஸ் காரணமாக டிஜிட்டல் பேமன்ட் முறைகளுக்கு மாறியுள்ளனர். இதுகுறித்து பேடிஎம் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ``கடந்த மாதத்தில் மட்டும் பேடிஎம் பயன்படுத்தி பணம் செலுத்துவோரின் எண்ணிக்கை 20 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. பேடிஎம் செயலியைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும், ஒரே வாடிக்கையாளர்கள் பேடிஎம்மை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது என அனைத்து எண்ணிக்கைகளும் அதிகரித்துள்ளது. வாடிக்கையாளர்கள் பேடிஎம்மை பெட்ரோல் பங்குகளிலும் பொருள்கள் வாங்கும் கடைகளிலும்,தான் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். பணத்தைப் பயன்படுத்தாமல் ஆஃப்லைன் மூலம் பேடிஎம்மில் பணம் செலுத்துவோரின் எண்ணிக்கையும் 12 சதவிகிதமாக உயர்ந்துள்ளது" எனக் கூறினார்.

மேலும், உணவு மற்றும் அத்தியாவசிய பொருள்களை வாங்கும் போதும் மக்கள் பேடிஎம்மை அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். 1.6 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட பேடிஎம்மில் ஆன்லைன் பேமென்ட்டும் அதிகரித்துள்ளது. சமீபத்தில் பேடிஎம் `ஆல் இன் ஒன்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த `ஆல் இன் ஒன்' QR கோடை எந்த UPI செயலியைக் கொண்டும் ஸ்கேன் செய்து பணம் செலுத்த முடியும். இப்படியான வசதியால் கடை வைத்திருக்கும் உரிமையாளர்கள் பேடிஎம்மைப் பயன்படுத்துவது 15 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது குறித்து பேடிஎம் தரப்பு, ``கொரோனா அச்சம் காரணமாக வீட்டுக்குப் பொருள்களை டெலிவரி செய்யும் கடை உரிமையாளர்கள் பேடிஎம் பயன்பாட்டையே பெரிதும் விரும்புகின்றனர்" என்றார். ஏற்கெனவே மார்ச் 16-ம் தேதி ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் வங்கிகளை டிஜிட்டல் பேமன்ட் பயன்படுத்த வாடிக்கையாளர்களை ஊக்குவிக்குமாறு தெரிவித்திருந்தார்.

பேடிஎம்
பேடிஎம்

தற்போது வரை இந்தியாவில் நூற்றுக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் வல்லுநர்கள் முடிந்தளவு டிஜிட்டல் பேமென்டை பயன்படுத்தி பணம் செலுத்துமாறு வலியுறுத்திவருகின்றனர். இந்த இக்கட்டான சூழலில் வைரஸ் பரவுவதைத் தடுக்க பணப் பரிவர்த்தனையைத் தவிர்ப்பது நல்லது.

கொரோனா வைரஸினால் நாடு முழுவதும் பல கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால்கூட பணப் பரிவர்த்தனை குறைந்திருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

உலக அளவிலும் பணமில்லாத பரிவர்த்தனை முறைகள்தான் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறதாம்.