Published:Updated:

``இந்தத் தவற்றை எல்லா நேரத்திலும் செய்யாதீர்கள்...” இளைஞர்களுக்கு ஊபர் சி.இ.ஓ சொல்லும் அறிவுரை!

ஊபர் சி.இ.ஓ தாரா கோஸ்ரோஷாஹி
News
ஊபர் சி.இ.ஓ தாரா கோஸ்ரோஷாஹி

நீங்கள் எந்தத் திசையில் செல்ல விரும்புகிறீர்கள் என்பதை அறிவது சரிதான். ஆனால், நீங்கள் செல்லும் திசையில், ஏதோ சரியாக நடக்கவில்லை என்று ஒரு சிக்னல் கிடைத்தால், அதை விட்டுவிடுங்கள்.

Published:Updated:

``இந்தத் தவற்றை எல்லா நேரத்திலும் செய்யாதீர்கள்...” இளைஞர்களுக்கு ஊபர் சி.இ.ஓ சொல்லும் அறிவுரை!

நீங்கள் எந்தத் திசையில் செல்ல விரும்புகிறீர்கள் என்பதை அறிவது சரிதான். ஆனால், நீங்கள் செல்லும் திசையில், ஏதோ சரியாக நடக்கவில்லை என்று ஒரு சிக்னல் கிடைத்தால், அதை விட்டுவிடுங்கள்.

ஊபர் சி.இ.ஓ தாரா கோஸ்ரோஷாஹி
News
ஊபர் சி.இ.ஓ தாரா கோஸ்ரோஷாஹி

வாழ்க்கையில் விரைவாக முன்னேற்றப் பாதைக்குச் சென்று விட வேண்டும் என்ற ஆசை பொதுவாக அனைவருக்கும் இருக்கும். ஆனால், அவை வேகமாக நடந்துவிட வேண்டும், இவ்வளவு சம்பாதிக்க வேண்டும், இதை வாங்க வேண்டும், அதை வாங்க வேண்டும் என பிறரைப் பார்த்து பலரும் சூடு போட்டுக் கொள்கிறார்கள்.

life
life
pexels

முன்னேற நினைக்கும் இளைஞர்கள் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்று ஊபர் சி.இ.ஓ தாரா கோஸ்ரோஷாஹி குட்டி அட்வைஸ் கொடுத் திருக்கிறார்.

அதில், ``2017-ல் ஊபரில் பொறுப்பேற்பதற்கு முன்பு, 53 வயதான நான் எக்ஸ்பீடியா என்ற பொறியியல் நிறுவனத்தில் 16 ஆண்டுகள் சி.இ.ஓ-வாகப் பணியாற்றினேன்.

எக்ஸ்பீடியாவுக்கு மாறுவதற்கு முன்பு, ஐடி நிறுவனமான ஐஏசி-யில் ஏழு வருடம் பணியாற்றினேன். ஆனால், இன்றைய இளைஞர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள், வாழ்க்கையில் சில நிலையை அடைந்திருக்க வேண்டும் என அவசரப்படுகிறார்கள்.

job
job
pexels

எதிர்காலம் குறித்து அதிகமாகத் திட்டமிடாதீர்கள். இளைஞர்கள் இந்த தவற்றை எல்லா நேரத்திலும் செய்வதை நான் பார்க்கிறேன். நான் அது போல ஆக வேண்டும், அவர் போல பணம் சம்பாதிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். 

நீங்கள் எந்த திசையில் செல்ல விரும்புகிறீர்கள் என்பதை அறிவது சரிதான். ஆனால், நீங்கள் செல்லும் திசையில், ஏதோ  சரியாக நடக்கவில்லை என்று ஒரு சிக்னல் கிடைத்தால், அதை விட்டுவிடுங்கள். 

தொழில் வல்லுநர்கள் வாய்ப்புகளுக்காகக் காத்திருக்க வேண்டும். வாய்ப்புகள் கிடைக்கும்போது அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அப்போது அந்த மேஜிக் நடக்கும் என்று தெரிவித்துள்ளார்.