Published:Updated:

என் மகன், மொபைலில் நிறைய செயலிகளைத் தரவிறக்கம் செய்வதால் பாதிப்புகள் ஏற்படுமா? | Doubt of Common Man

Child Mobile usage
News
Child Mobile usage

ப்ளே ஸ்டோரில் இருந்து செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும்போது பயப்படுவதற்கு எதுவும் இல்லை. ஆனாலும், குழந்தைகள் என்னென்ன செயலிகளைப் பயன்படுத்துகிறார்கள் என்பதில் எப்போதும் ஒரு கண் வைத்துக் கொள்வது நல்லது.

Published:Updated:

என் மகன், மொபைலில் நிறைய செயலிகளைத் தரவிறக்கம் செய்வதால் பாதிப்புகள் ஏற்படுமா? | Doubt of Common Man

ப்ளே ஸ்டோரில் இருந்து செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும்போது பயப்படுவதற்கு எதுவும் இல்லை. ஆனாலும், குழந்தைகள் என்னென்ன செயலிகளைப் பயன்படுத்துகிறார்கள் என்பதில் எப்போதும் ஒரு கண் வைத்துக் கொள்வது நல்லது.

Child Mobile usage
News
Child Mobile usage
விகடனின் Doubt of Common Man பக்கத்தில் நிர்மலா என்ற வாசகர், "என் மகன் விருப்பத்துக்கு ப்ளே ஸ்டோரில் இருந்து செயலிகளைத் தரவிறக்கம் செய்கிறான், மீண்டும் அதனை அன்இன்ஸ்டால் செய்கிறான். அதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே!
doubt of common man
doubt of common man

இன்றைய காலத்துக் குழந்தைகள் தொழில்நுட்பத்தை நம்மை விட விரைவாகவும் விவேகமாகவும் கற்றுக் கொள்கிறார்கள். பிறந்து மூன்றே வயதான குழந்தை கூட மிக எளிதாக நம் மொபைல்களைப் பயன்படுத்துவதை நாம் பார்க்கலாம். சில நேரங்களில் அவர்கள் மொபைல் பயன்படுத்துவது ஏதாவது ஆபத்தில் முடிந்துவிடுமோ என்ற அச்சம் கூடப் பெற்றோர்கள் சிலருக்கு எழலாம். இதே போன்ற ஒரு சந்தேகத்தைத்தான் நமது Doubt of Common Man பகுதியில் மேற்கூறிய கேள்வியைக் கேட்டிருந்தார்.

மொபைலை அதிகம் பயன்படுத்தும் குழந்தைகள்
மொபைலை அதிகம் பயன்படுத்தும் குழந்தைகள்

மொபைல்களில் செயலிகளை பதிவிறக்கம் செய்வதாலோ அதனை அன்இன்ஸ்டால் செய்வதாலோ மொபைலில் பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. பொதுவாக குழந்தைகள் விளையாட்டுச் செயலிகளையே அதிகம் விரும்பிப் பதிவிறக்குவார்கள். ப்ளே ஸ்டோரில் இருக்கும் செயலிகள் பாதுகாப்பானவையாகவே இருக்கும். எனவே ப்ளே ஸ்டோரில் இருந்து செயலிகளைப் பதிவிறக்கம் செய்யும்போது பயப்படுவதற்கு எதுவும் இல்லை. ஆனாலும், குழந்தைகள் என்னென்ன செயலிகளைப் பயன்படுத்துகிறார்கள் என்பதில் எப்போதும் ஒரு கண் வைத்துக் கொள்வது நல்லது.

ஏனெனில் சில விளையாட்டுகளில் 'இன்-ஆப் பர்சேஸ்' என்ற சேவை இருக்கும். ஆன்லைனில் விளையாடத் தேவையானவற்றைப் பணம் கொடுத்து வாங்க வேண்டியிருக்கும். ப்ளே ஸ்டோரில் பெற்றோர்களுடைய கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு தரவுகள் சேமிக்கப்பட்டு இருந்தால், குழந்தைகள் தங்களுக்கே தெரியாமல் அதில் இருக்கும் பணத்தை செலவழித்துவிட வாய்ப்புகள் இருக்கின்றன. ப்ளே ஸ்டோரில் சில செயலிகள் அல்லது விளையாட்டுக்கள் பணம் செலுத்தினால் மட்டுமே பதிவிறக்கம் செய்ய முடியும். அது போன்ற விளையாட்டுதக்களைத் தவறுதலாகப் பணம் செலுத்திக் குழந்தைகள் தரவிறக்கம் செய்துவிடமுடியும், எனவே கவனம் தேவை.

 Child mobile usage
Child mobile usage

குழந்தைகள் அதிகம் மொபைல் பயன்படுத்துவதால், மொபைலுக்கு பாதிப்பு இல்லை. ஆனால், குழந்தைகளுக்குக் கண்டிப்பாக பாதிப்பு இருக்கும். குழந்தைகள் கை கால்களைப் பயன்படுத்தி ஓடி ஆடி விளையாடுவதே நல்லது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். குழந்தைகள் மொபைல் பயன்படுத்தினாலும், அதனை ஒரு வரையரைக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும், சிறிது நேரமோ, அதிக நேரமோ, எவ்வளவு நேரம் பயன்படுத்தினாலும், அவர்கள் என்ன விதமான உள்ளடக்கங்களைப் பார்க்கிறார்கள் என்பது பெற்றோர்களின் கண்காணிப்பின் கீழேயே இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.

இணையத்தில் தேவையில்லாத விளம்பரங்கள், முக்கியமாக பாப்-அப் விளம்பரங்கள் தேவையற்றதாக, குழந்தைகளுக்கு உகந்ததாக இல்லாமல் இருக்கும் வாய்ப்புகள் அதிகம். வயதுக்கு ஏற்ற விஷயங்களை மட்டும் குழந்தைகள் கற்றுக்கொண்டால் போதுமானது.

இணையம் கடல் போல, அந்தக் கடலிலிருந்து எந்தெந்த விஷயங்களை நம் குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டும் என நாம்தான் தேர்வு செய்ய வேண்டும்.

இதேபோல் உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களைக் கீழே பதிவு செய்யுங்க!

doubt of common man
doubt of common man

விகடன் குறித்து உங்களுக்கு எவ்வளவு தெரியும்? சின்ன quiz...

விகடன்
விகடன்

விகடன் நிறுவனர் தினம்: Quizல் கலந்து கொள்ள க்ளிக் செய்க... https://bit.ly/3DjBBxi