Published:Updated:

நம் மொபைலுக்கு தேவையில்லாத கால்கள், குறுஞ்செய்திகள் வராமல் தடுப்பது எப்படி? | Doubt of Common Man

ஸ்பாம் அழைப்புகள்
News
ஸ்பாம் அழைப்புகள்

National Do Not Call Registry என்பது வணிக அழைப்புகளால் பயனாளர்கள் தொந்தரவு செய்யப்படுவதைத் தடுக்க இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் முயற்சி.

Published:Updated:

நம் மொபைலுக்கு தேவையில்லாத கால்கள், குறுஞ்செய்திகள் வராமல் தடுப்பது எப்படி? | Doubt of Common Man

National Do Not Call Registry என்பது வணிக அழைப்புகளால் பயனாளர்கள் தொந்தரவு செய்யப்படுவதைத் தடுக்க இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் முயற்சி.

ஸ்பாம் அழைப்புகள்
News
ஸ்பாம் அழைப்புகள்
விகடனின் 'Doubt of common man' பக்கத்தில் சிவராமன் என்ற வாசகர், "என் அலைபேசி எண்ணிற்கு நிறைய பணமோசடி சம்பந்தமான குறுந்தகவல்கள் வருகிறது. வராமல் தடுக்க யாரிடம் புகாரளிக்க வேண்டும்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே.
Doubt of common man
Doubt of common man

அலைபேசி நம் தினசரி வாழ்வில் முக்கிய இடம்பெற்றுவிட்டது. எங்குச் செல்வதாக இருந்தாலும் முதலில் அலைபேசியை எடுத்துவிட்டோமா என்றுதான் சரிபார்க்கிறோம். அலைபேசியால் நமக்குப் பல பயன்கள் உண்டு. அதே போல அலைபேசியால் சில தொல்லைகளும் உண்டு. அதில் முக்கியமானது ஸ்பாம் குறுஞ்செய்திகள் மற்றும் ஸ்பாம் கால்கள். பேங்க் லோன், பர்சனல் லோன், இன்சூரன்ஸ் என பல வகைகளில் இருந்து தேவையில்லாமல் விளம்பரம் செய்வதற்காக வரும் கால்கள் மற்றும் மோசடி குறுஞ்செய்திகள் எனப் பலவகைகளில் நம்மைத் தொந்தரவு செய்யும் வகையில் இவை இருக்கின்றன.

ஸ்பாம் அழைப்புகள்
ஸ்பாம் அழைப்புகள்

இதற்கு என்னதான் தீர்வு என நம்முடைய டவுட் ஆஃப் காமன் மேன் பகுதியில் மேற்கூறிய கேள்வியை வாசகர் ஒருவர் கேட்டிருந்தார். அவரது கேள்விக்கான பதிலைத் தெரிந்து கொள்ளத் தொழில்நுட்ப வலைப்பதிவாளர் சைபர் சிம்மனிடம் பேசினோம். அவர் கூறியது, "தேசிய வாடிக்கையாளர் விருப்பப் பதிவேடு (NCPR) அல்லது National Do Not Call Registry (NDNC) என்பது வணிக அழைப்புகளால் பயனாளர்கள் தொந்தரவு செய்யப்படுவதைத் தடுக்க இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின்(TRAI) முயற்சி. தேவையற்ற சந்தைப்படுத்தல் அழைப்புகள் மற்றும் செய்திகளை எப்போது வேண்டுமானாலும் தடுக்க பயனர்கள் இந்த சேவையில் பதிவு செய்யலாம்."

இந்த சேவையை ஆக்டிவேட் செய்வது எப்படி?

"1909 என்ற டோல் ஃப்ரீ எண்ணுக்கு அழைத்து, உங்கள் தேவைக்கு ஏற்ப ஆப்ஷன்களைத் தேர்ந்தெடுக்கலாம்.

அல்லது 1909 எண்ணிற்குக் குறுஞ்செய்தி அனுப்பலாம். எஸ்.எம்.எஸ்-இல் “START DND” என்றோ “START 0” என்றோ அனுப்ப வேண்டும். நமக்குச் சில துறை சார்ந்த குறுஞ்செய்திகள் மற்றும் கால்கள் வேண்டும் என்று தோன்றினால், கீழே இருக்கும் எண்களைப் பயன்படுத்தி அதனைச் செய்ய முடியும்.

1-அனைத்து வணிக அழைப்புகளும், குறுந்தகவல்களும் தடை செய்யப்படும்.

2- வங்கி, காப்பீடு, பொருளாதார முதலீட்டுத் திட்டங்கள், கிரெடிட் கார்டுகள் முதலியவற்றைக் குறித்த அழைப்புகள், குறுஞ்செய்திகள் மட்டும் வரும்.

3- ரியல் எஸ்டேட் தொடர்பான அழைப்புகள், குறுஞ்செய்திகள் மட்டும் வரும்.

நிறுத்துவது எப்படி?
நிறுத்துவது எப்படி?

4- ஆரோக்கியம் சார்ந்த அழைப்புகள், குறுஞ்செய்திகள் மட்டும் வரும்.

5- நுகர்வோர் பொருட்கள், வண்டிகள் தொடர்பான அழைப்புகள், குறுஞ்செய்திகள் மட்டும் வரும்.

6- தகவல்தொடர்பு, பொழுதுபோக்கு, ஒளிபரப்பு, ஐடி சம்பந்தமான அழைப்புகள், குறுஞ்செய்திகள் மட்டும் வரும்.

7- சுற்றுலா சார்ந்த அழைப்புகள், குறுஞ்செய்திகள் மட்டும் வரும்.

உதாரணமாகச் சுற்றுலா சார்ந்த அழைப்புகள், குறுஞ்செய்திகள் மட்டும் வேண்டும் என்றால் START 7 என 1909 எண்ணுக்குக் குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். சுற்றுலா மற்றும் ஆரோக்கியம் சார்ந்த அழைப்புகள்/குறுஞ்செய்திகள் இரண்டும் வேண்டும் என்றால் START 7,4 எனக் குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.

இந்த சேவையை ஆக்டிவேட் செய்த பின்பும் உங்களுக்குக் குறுஞ்செய்தியோ, அழைப்போ வந்தால் 1909 எண்ணுக்கு அழைத்து புகார் அளிக்கலாம்."

இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!

Doubt of common man
Doubt of common man