Published:Updated:

மொபைலில் தேவையில்லாத notifications-ஐ கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? | Doubt of Common Man

Push Notifications
News
Push Notifications

செயலிகளில் இருந்து வரக்கூடிய புஷ் நோட்டிபிகேஷன்கள் நம் பொறுமையை நிறையவே சோதிக்கும்.

Published:Updated:

மொபைலில் தேவையில்லாத notifications-ஐ கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? | Doubt of Common Man

செயலிகளில் இருந்து வரக்கூடிய புஷ் நோட்டிபிகேஷன்கள் நம் பொறுமையை நிறையவே சோதிக்கும்.

Push Notifications
News
Push Notifications
விகடனின் 'Doubt of common man' பக்கத்தில் வேல்ராஜ் என்ற வாசகர், "நம்முடைய மொபைலில் தேவையில்லாத செயலிகளில் இருந்துவரும் நோட்டிபிகேஷன்களைக் கட்டுப்படுத்த வழி இருக்கிறதா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே.
Doubt of common man
Doubt of common man

ஸ்மார்ட் போன் என்பது நம்முடைய தினசரி வாழ்வின் ஒரு முக்கியமான அங்கமாகவே மாறிவிட்டது. நம்முடைய தினசரி பண பரிவர்த்தனையில் இருந்து பங்கு வர்த்தகம் வரை அனைத்தையும் நம்முடைய ஸ்மார்ட் போன் மூலமாகவே நம்மால் செய்து முடித்துவிட முடியும். அப்படி இருக்கையில் அதனைச் சரியாகவும், முறையாகவும் பயன்படுத்த வேண்டியதும் அவசியம். ஸ்மார்ட் போன் பயனர்களுக்குக் கண்டிப்பாகத் தெரிந்திருக்கும். நாம் பயன்படுத்தும் பல்வேறு செயலிகளில் இருந்து வரக்கூடிய புஷ் நோட்டிபிகேஷன்கள் நம் பொறுமையை நிறையவே சோதிக்கும். நாம் பயன்படுத்தும் செயலியில் இருந்து வணிக நோக்கத்திற்காகவோ, அல்லது வேறு ஏதாவது விளம்பரப்படுத்தும் நோக்கில் அந்த செயலியின் நிறுவனம் அனுப்புவதே புஷ் நோட்டிபிகேஷன்கள் (Push Notifications). தேவையில்லாத சில புஷ் நோட்டிபிகேஷன்களால் சில நேரங்களில் நமக்குத் தேவையான நோட்டிபிகேஷனைத் தவறவிட்டுச் சிக்கலை சந்தித்திருப்போம். நம் வாசகர் ஒருவருக்கும் அப்படியான ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது. எனவே, நம் ஸ்மார்ட் போனில் வரும் நோட்டிபிகேஷன்களைக் கட்டுப்படுத்த முடியுமா என நமது டவுட் ஆஃப் காமன் மேன் பகுதியில் கேட்டிருந்தார்.

புஷ் நோட்டிபிகேஷன்கள்
புஷ் நோட்டிபிகேஷன்கள்

ஸ்மார்ட் போன்களில் நாம் விருப்பப்படும் செயலிகளைப் பதிவிறக்கம் செய்யலாம். ஆனால், தேவையில்லாத செயலிகளை அவ்வப்போது Uninstall செய்வது நல்லது. நாம் நிறையப் பயன்படுத்தாத செயலிகளில் இருந்துதான் சில சமயங்களில் தேவையில்லாத பல நோட்டிபிகேஷன்கள் வரும். எனவே, நாம் பயன்படுத்தாத செயலிகளை முதலில் ஸ்மார்ட்போனில் Uninstall செய்ய வேண்டும். நம்முடைய போனில் நாம் தேவையென வைத்திருக்கும் செயலிகளில் இருந்துவரும் தேவையில்லாத நோட்டிபிகேஷன்களை நிறுத்த செட்டிங்கில் சென்று மாற்றிக் கொள்ளலாம்.

Push Notifications
Push Notifications

மொபைல் போனில்

'Settings - Notifications - App Notifications (அ) Manage Notifications'

இந்த செட்டிங்குக்குச் சென்று நாம் நோட்டிபிகேஷன்களை கட்டுப்படுத்தலாம். App Notification-ஐக் கிளிக் செய்து உள்ளே சென்றவுடன் நம்முடைய மொபைலில் நாம் பயன்படுத்தும் செயலிகள் வரிசையாக இருக்கும், அவற்றில் எந்தெந்த செயலியில் இருந்தெல்லாம் நோட்டிபிகேஷன்கள் தேவை அல்லது தேவை இல்லை என்று நினைக்கிறோமோ, அவற்றின் அருகில் 'Opt in - Opt Out' பட்டனைப் பயன்படுத்தித் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். கவனம், இவற்றில் நாம் நோட்டிபிகேஷன்கள் வேண்டாம் என்று 'Opt Out' செய்துவிட்டால், அந்தக் குறிப்பிட்ட செயலியில் இருந்து எந்த நோட்டிபிகேஷன்களும் நமக்கு வராது. எனவே, நோட்டிபிகேஷன்கள் தேவையில்லை என்று நினைக்கும் செயலிகளை மட்டும் 'Opt Out' செய்ய வேண்டும்.

இதேமாதிரி உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!

Doubt of common man
Doubt of common man