Published:Updated:

இசைக்கருவிகளில் தந்தி வாத்தியம் என்று எதைச் சொல்கிறார்கள்? | Doubt of Common Man

தந்தி வாத்தியங்கள்
News
தந்தி வாத்தியங்கள்

வேட்டுவர் வில்லில் நாண் ஏற்றி அம்பை எய்தபோது, அந்த நாண் எழுப்பிய நல்லிசையைக் கேட்டனர். அதிலிருந்து பிறந்ததுதான் நரம்பிசைக் கருவியாகிய யாழ்.

Published:Updated:

இசைக்கருவிகளில் தந்தி வாத்தியம் என்று எதைச் சொல்கிறார்கள்? | Doubt of Common Man

வேட்டுவர் வில்லில் நாண் ஏற்றி அம்பை எய்தபோது, அந்த நாண் எழுப்பிய நல்லிசையைக் கேட்டனர். அதிலிருந்து பிறந்ததுதான் நரம்பிசைக் கருவியாகிய யாழ்.

தந்தி வாத்தியங்கள்
News
தந்தி வாத்தியங்கள்
விகடனின் 'Doubt of Common Man' பக்கத்தில் சித்தார்த் என்ற வாசகர், "இசைக்கருவிகளில் தந்தி வாத்தியம் என்று எதைச் சொல்கிறார்கள்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே!
doubt of common man
doubt of common man

இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கீழாக அமைக்கப்பட்டிருக்கும் சுவாமி விபுலானந்தா அழகிய கற்கைகள் நிறுவகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி வரும், வீணை இசைக் கலைஞர் ஐஸ்வரியா கணேசன் அவர்களிடம், ’இசைக்கருவிகளில் தந்தி வாத்தியம் என்று எதனைச் சொல்கிறார்கள்? ஏன் அப்படிச் சொல்கிறார்கள்?’ என்று கேட்ட போது, அவர் சொன்ன தகவல்கள்…

இசைக் கலைஞர் ஐஸ்வரியா கணேசன்
இசைக் கலைஞர் ஐஸ்வரியா கணேசன்

இயற்கை தரும் இனிய ஒலிகளைக் கேட்டு கருவியிசையெனும் அருங்கலையை உருவாக்கி அக்கலையைப் பேணி வளர்த்த பெருமைக்குரியவர்கள் தமிழர்கள். சிவபெருமான் கையில் உடுக்கை, சரஸ்வதி கையில் வீணை, கண்ணன் கையில் குழல் என்று இசைக் கருவிகளைத் தெய்வங்களுடன் இணைத்து, அந்த இசைக்கருவிகளைப் பெருமைப்படுத்தியிருக்கின்றனர். வீணை, குழல், மத்தளம் ஆகிய மூன்று இசைக் கருவிகளுக்கும் முதலிடம் கொடுத்து இக்கருவிகளை வாத்யத்ரயம் என அழைத்தனர்.

இசைக்கருவிகளைச் சாத்திர முறையில் முதன் முதலில் வகுத்தவர்கள் இந்தியர்கள்தான். பரதர் தனது நாட்டிய சாஸ்திரத்தின் 28-வது அத்தியாயத்தில் கூறியுள்ள பிரிவை இப்போது உலகமெங்கும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

நாதத்தின் தோற்றத்திற்குக் காரணமாக உள்ள மூல தத்துவத்தை ஆதாரமாகக் கொண்டு, தமிழர்கள் இசைக் கருவிகளைத் தோல், துளை, நரம்பு, கஞ்சம் என நான்காகப் பிரித்துள்ளனர்.

“சொல்லிய நற்றோல் துளைதுய்ய மென்னரம்பு

கல்வி மிகு கஞ்சம்…” (பஞ்சமரபு, இசை மரபு : 5)

இதே பாகுபாட்டினை வடமொழியாளர்கள் தத, அவனத்த, கன, ஸூசி என அமைத்திருக்கின்றனர். மேற்கு நாட்டவரும் இப்பாகுபாட்டைப் பின்பற்றியே Membranophones, Aerophones, Chordophones, Idiophones என்று அழைக்கின்றனர்.

இந்த நான்கு வகைப் பிரிவுகளையும் 'குயிலுவக்கருவி' என்பர்.

இசைக்கருவிகளில் நரம்புக் கருவிகளைத் தத வாத்தியம் என்கின்றனர். இதனைத் தந்தி வாத்தியம், நரம்பு வாத்தியம், சுருதி வாத்தியம் எனவும் சொல்வதுண்டு. இவற்றுள் சில முதன்மை வாத்தியமாகவும், சில உப வாத்தியமாகவும், சுருதிக்கு அடிப்படையாகப் பயன்படுத்தும் வாத்தியமாகவும் விளங்குகின்றன.

தந்தி வாத்தியங்கள்
தந்தி வாத்தியங்கள்

பண்டையக்காலத்தில், ஒரு வகையான கற்றாழையினை ஊறவைத்துப் பசை தடவித் திரித்து உருவாக்கிய மரல் நார் எனப்படும் நாரினை நரம்புகளாகப் பிரித்து யாழிற்குப் பயன்படுத்தியிருக்கின்றனர். அதற்குப் பின் வந்த காலத்தில் உலோகக் கம்பிகளால் நரம்பினைச் செய்ததாகக் கருதப்படுகிறது. இங்கு தந்தி என்பதும் நரம்பு என்பதும் ஒன்றே. நரம்பு என்பதனை ஒலி எழுப்புவதற்குப் பயன்படுத்தப்படும் கம்பி அல்லது நார் என்பர். அதாவது மீட்டுதல், வில் கொண்டு உராய்தல், குச்சி அல்லது ஏதாவது பொருளினைக் கொண்டு ஒலி எழுப்பக்கூடியவை.

“முரசதிர்ந்தன்ன வின்குர லேற்றொடு

நிரை செலனிவப்பிற் கொண்டுமூ”

(குறிஞ்சிப்பாட்டு, பத்துப்பாட்டு : 49:50)

முதலில் தோன்றிய இசைக்கருவி குழலாய் இருப்பினும், பின்னர் தோன்றிய அந்த வில்யாழ்க் கருவியின் வழியாகத்தான் இசை வளர்ச்சியடைந்தது எனக் கூறலாம். வேட்டுவர் வில்லில் நாண் ஏற்றி அம்பை எய்த போது, அந்த நாண் எழுப்பிய நல்லிசையைக் கேட்டனர். அதிலிருந்து பிறந்ததுதான் நரம்பிசைக் கருவியாகிய யாழ். முல்லை நிலத்தில் வாழ்ந்த தமிழர்கள் வில்யாழ் என்னும் இசைக் கருவியை உருவாக்கினர். அதுதான் தமிழரின் முதல் தாய் யாழாகும். அது நாளடைவில் வளர்ச்சியடைந்து ஐந்து துளைகளிட்ட புல்லாங்குழல் எழுப்பிய அதே இசையொலிகளை எழுப்பக் கூடிய ஐந்து நரம்புகள் கொண்ட வில் யாழாக விளங்கியது. இதுவே பின்னர் வீணையாகவும், சித்தாராகவும் மாற்றமடைந்ததெனலாம்.

நரம்புக் கருவிகளில் உள்ள தந்திகளில் (நரம்புகளில்) அசைவுகளை உண்டாக்கி, அதனால் எழும் நாதத்தினை உடையது தந்தி வாத்தியம். இதில், வீணை, கோட்டு வாத்தியம், சித்தார், யாழ், தம்புரா, மெண்டலின் போன்ற இசைக் கருவிகள் விரலினால் மீட்டி இசையை எழுப்புகின்றது. வயலின், சாரங்கி, தில்ரூபா போன்ற இசைக்கருவிகள் வில்போட்டு தந்திகளின் மீது உராய்ந்து நாதத்தினை உண்டாக்குகின்றது.

எடுத்துக்காட்டாக, வீணையில் 7 நரம்புகள் இருக்கின்றன. இவற்றுள் முதன்மையானதாக 4 நரம்புகள் வாசிக்கும் நரம்புகளாகவும், 3 பக்க நரம்புகள் தாளத்திற்காகவும், சுருதிக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. நரம்புகள் அனைத்தும் திருகாணிகளுடன் இணைக்கப்பட்டு வாசிப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு நரம்புக்கும் பயன்படுத்தப்படும் கம்பியின் கனம் வேறுபட்டு இருக்கும். இங்கு வீணையின் நரம்புகளை முறைப்படி மீட்டி வாசிப்பதன் மூலம் சிறப்பான இசை உருவாகின்றது.

தந்தி வாத்தியம் (Stringed Instrument), காற்று வாத்தியம், (Wind Instrument), கோட்டு வாத்தியம் (Percussion Instrument) எனும் பிரிவுகள் தற்போது வழக்கத்தில் உள்ளன.

தந்தி வாத்தியங்கள்
தந்தி வாத்தியங்கள்

நரம்பு வாத்தியங்கள், கம்பி வாத்தியங்கள் என்று சொல்லப்படும் தந்தி வாத்தியங்களை மூன்றாகப் பிரிக்கின்றனர்.

  1. வில் போட்டு வாசிக்கும் வாத்தியங்கள் - வயலின், சாரங்கி

  2. மீட்டி வாசிக்கப்படும் வாத்தியங்கள் - வீணை, சித்தார்

  3. தந்திகளைக் குச்சிகளாலோ அல்லது மரக்கட்டையாலோ தட்டி நாதத்தை உண்டாக்கும் வாத்தியங்கள் - கொட்டு வாத்தியம்.

இங்கு வில் வாத்தியங்களை இரண்டாக வகைப்படுத்துகின்றனர்.

  1. மெட்டு இல்லாத வாத்தியங்கள் - வயலின், சாரங்கி

  2. மெட்டுக்களைக் கொண்ட வாத்தியம் சாரி வாத்தியம் - பாலசரஸ்வதி, தில்ரூபா.

மீட்டு வாத்தியங்களையும் இரண்டாக வகைப்படுத்துகின்றனர்.

  1. மெட்டுக்களைக் கொண்ட வாத்தியம் - வீணை, சித்தார்

  2. மெட்டில்லாத வாத்தியம் - கோட்டு வாத்தியம், சரோட்

மேலும் தந்தி வாத்தியங்களைக் கீழ்க்காண்பவாறும் வகைப்படுத்துகின்றனர்.

  1. தந்தியில் ஏற்படும் அதிர்வுகளைத் தடையின்றி வாசிக்கும் வாத்தியங்கள் – தம்புரா.

  2. தந்தியில் ஏற்படும் அதிர்வுகளைத் தடுத்து வெவ்வேறு சுரங்களை ஏற்படுத்தும் வாத்தியங்கள் - வீணை, வயலின்.

இதேமாதிரி உங்களுக்குத் தோன்றும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்கள்!

doubt of common man
doubt of common man