Published:Updated:

ட்விட்டர் ஊழியர்கள் பணி நீக்கம்?ப்ளூ டிக் ரூ.1,600 - எலான் மஸ்க் அதிரடி

எலான் மஸ்க், ட்விட்டர்
News
எலான் மஸ்க், ட்விட்டர்

நவம்பர் 1-ம் தேதி (நாளை)க்குள் ஆட்குறைப்பு நடவடிக்கை தொடங்கப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. பணியாளர்களின் எண்ணிகை 75% அதாவது 2,000 ஊழியர்களாகக் குறைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் ஊழியர்கள் பணி நீக்கம்?ப்ளூ டிக் ரூ.1,600 - எலான் மஸ்க் அதிரடி

நவம்பர் 1-ம் தேதி (நாளை)க்குள் ஆட்குறைப்பு நடவடிக்கை தொடங்கப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. பணியாளர்களின் எண்ணிகை 75% அதாவது 2,000 ஊழியர்களாகக் குறைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Published:Updated:
எலான் மஸ்க், ட்விட்டர்
News
எலான் மஸ்க், ட்விட்டர்

டெஸ்லா, ஸ்பேக்ஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி மற்றும் உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க், ட்விட்டர் வலைதளத்தை சுமார் 44 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளார்.

angaadi
angaadi
vikatan_qt_api

கடந்த வாரம், ட்விட்டர் நிர்வாகத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த எலான் மஸ்க், அதில் பல அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறார். அந்த மாற்றங்கள் அனைத்தும் ட்விட்டர் ஊழியர்களுக்கும் பயனாளர்களுக்கும் களேபரத்தை உண்டாக்குகிறது.

எலான் மஸ்க், ட்விட்டரை வாங்கிய கையோடு ஆட்குறைப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளார். இந்த நடவடிக்கை முதலில், தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் மீது பாய்ந்தது.

Parag Agrawal | பராக் அக்ரவால்
Parag Agrawal | பராக் அக்ரவால்

மேலும் எலான் மஸ்க், பணி நீக்கம் செய்யப்பட வேண்டியவர்களின் பட்டியலைத் தயார் செய்ய கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ட்விட்டரில் 7,500 ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நவம்பர் 1-ம் தேதி (நாளை)க்குள் ஆட்குறைப்பு நடவடிக்கை தொடங்கப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. பணியாளர்களின் எண்ணிகை 75% பேர் பணியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறுகின்றனர். அதன்படி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த 3 ஆண்டுகளில் ட்விட்டர் நிறுவனத்தின் வருவாயை இரட்டிப்பாக்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதால், அதற்காக சம்பள செலவைக் குறைக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

ஆட்குறைப்பு
ஆட்குறைப்பு
Moneycontrol

அடுத்ததாக, எலான் மஸ்க் போலிக் கணக்குகளை நீக்க அதிரடி நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ட்விட்டர் கணக்குகளை சரிபார்க்கும் செயல்முறை புதுப்பிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்குகளைக் குறிக்க ப்ளூ டிக் பயன் படுத்தப்படுகிறது. இதன் பயனர்கள் 4.99 அமெரிக்க டாலர்கள் (ரூ.410 வரை) செலுத்த வேண்டியிருந்தது. இந்த ப்ளூ டிக் வைத்திருப்பாரகள், ட்விட்டரில் பல்வேறு அம்சங்களை பயன்படுத்திக்கொள்ளலாம் மற்றும் அவர்களது ட்வீட்களை எடிட் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

ப்ளூ டிக்
ப்ளூ டிக்

இந்த நிலையில், ப்ளூ டிக் பயனாளர்களிடம் மாதம்தோறும் 19.99 அமெரிக்க டாலர்கள் (ரூ.1,600 வரை) கட்டணம் வசூலிக்க ட்விட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு வெளியான 90 நாள்களுக்குள் பயனாளர்கள் கட்டணம் செலுத்தவில்லை யென்றால், ப்ளூ டிக் நீக்கப்படும் என்று கூறப்படுகிறது.