Published:Updated:

சிம் ஸ்வாப்பிங் என்றால் என்ன? இது ஒருவகை ஹைடெக் மோசடி!

சிம் ஸ்வாப்பிங் - ஒருவகை மோசடி!

சிம் ஸ்வாப்பிங்கை பொறுத்தவரை கஸ்டமர் கேர் உதவி இல்லாமல் இதை செய்ய முடியாது. இதில் ஈடுபடுகிறவர்கள் நிச்சயம் கஸ்டமர் கேரில் தங்களது ஆட்களை வைத்திருப்பார்கள்.

சிம் ஸ்வாப்பிங் என்றால் என்ன? இது ஒருவகை ஹைடெக் மோசடி!

சிம் ஸ்வாப்பிங்கை பொறுத்தவரை கஸ்டமர் கேர் உதவி இல்லாமல் இதை செய்ய முடியாது. இதில் ஈடுபடுகிறவர்கள் நிச்சயம் கஸ்டமர் கேரில் தங்களது ஆட்களை வைத்திருப்பார்கள்.

Published:Updated:
சிம் ஸ்வாப்பிங் - ஒருவகை மோசடி!

இன்றைய உலகம், மோசடிகள் என்னென்ன ரூட்டுகளில், என்னென்ன டைப்புகளில் வரும் என்று தெரியாத உலகமாக மாறி வருகிறது. எப்போதும் 'அலெர்டா இருடா ஆறுமுகம்' என்ற மோடில்தான் நாம் அனைவருமே இருக்க வேண்டியதாக இருக்கிறது. ஒவ்வொரு தினமும் புதுப்புது மோசடிகள் காளான் போல முளைத்து, நம்முடைய காசைக் கபளிகரம் செய்துவிடுகின்றன.

ஆனால் மக்களுக்கு இந்தப் புதுப்புது மோசடிகள் பற்றி அதிகம் தெரிவதில்லை. சமீப காலமாக பலரையும் பணத்தையும் கொள்ளை அடிக்க வழிசெய்துகொடுத்துக் கொண்டிருக்கிறது "சிம் ஸ்வாப்பிங் (Sim Swapping)" மோசடி.

Primefort நிறுவனர் ஶ்ரீராம்
Primefort நிறுவனர் ஶ்ரீராம்

இந்த சிம் ஸ்வாப்பிங் பற்றி நமக்கு Primefort நிறுவனர் ஶ்ரீராம் விளக்குகிறார்...

''சிம் கார்டு என்பது வெறும் சிப் (Chip) தான். இன்னும் எளிதாக கூற வேண்டுமானால், அது ஒரு மெமரி கார்டு போன்றது. நாம் புதிதாக சிம் வாங்கும்போது, அதில் போன் நம்பர் இருக்காது. நம்மிடம் சிம் விற்கும் நபர்தான், நமது சிம்மில் போன் நம்பரை ஆக்டிவேட் செய்து தருவார்.

ஒருவரது சிம் ப்ளாக் ஆகிவிட்டது எனி, நாம் கஸ்டமர் கேரில் புகார் செய்வோம். அவர்கள் நமது ப்ளாக்கான நம்பருக்கு மெசேஜ் செய்ய சொல்வார்கள். அப்போது நமது எண்ணுக்கு ஒரு கோட் (code) வரும். இந்த கோடை நாம் கஸ்டமர் கேரிடம் கூறும்போது, இதை மோசடி நபர்கள் பயன்படுத்தி அவர்கள் வைத்திருக்கும் சிம்மில் நமது போன் நம்பரை ஆக்டிவேட் செய்துவிடுவார்கள். இதுதான் 'சிம் ஸ்வாப்பிங்' ஆகும்.

இப்படி 'சிம் ஸ்வாப்பிங்' மூலம் நமது சிம் ஆக்சஸ் (access) மோசடி நபருக்கு கிடைத்துவிட்டால், நமது அக்கவுண்ட் OTP-யில் இருந்து பேஸ்புக் OTP வரை அனைத்தும் அவர்களுக்கு எளிதில் கிடைத்துவிடும்.

சிம் கார்டு- வெறும் சிப் தான்!
சிம் கார்டு- வெறும் சிப் தான்!

சிலர் மிஸ்ட் கால் மூலம் அக்கவுண்ட்டில் இருக்கும் பணத்தை கொள்ளையடித்து விட்டார்கள் என்று கூறுகிறார்கள். அந்த மாதிரியான மோசடிகளுக்கு வாய்ப்பே இல்லை. பெரும்பாலும் இது கதையாகவே இருக்கும். பொதுவாக, நமக்கு வந்த OTP-யைப் பிறரிடம் கூறி, பணம் பறிப்போனால் வங்கி பொறுப்பாகாது. இதனால்தான் பாதிக்கப்பட்டவர்கள் போன் எடுத்ததால்தான், பணம் பறிபோய்விட்டது என்று கூறிவிடுகிறார்கள்.

பாதிக்கப்பட்டவர்கள் மேலும் பணம் கொள்ளைப்போவதை தடுக்க வேண்டுமானால், சம்பவம் நடந்த மூன்று நாள்களுக்குள் வங்கியிடம் பணம் கொள்ளைப் போனது பற்றி புகார் தெரிவிக்க வேண்டும்.

நமது அக்கவுண்ட் நம்பர் மற்றும் OTP இல்லாமல் கண்டிப்பாக ஒருவரால் நமது பணத்தை கொள்ளையடிக்க முடியாது. முதலில் நமது அக்கவுண்டிலிருந்து பணம் எடுக்க வேண்டுமானால், டெபிட் கார்டு, google pay அல்லது phonepe தேவைப்படும். இதற்கு நிச்சயமாக வங்கியை அணுக வேண்டும். இது எதுவுமே இல்லாதப்பட்சத்தில், மிஸ்ட் கால் மூலம் கண்டிப்பாக பணம் எடுக்க முடியாது.

OTP இல்லாமல் கண்டிப்பாக பணத்தை கொள்ளையடிக்க முடியாது!
OTP இல்லாமல் கண்டிப்பாக பணத்தை கொள்ளையடிக்க முடியாது!
onboarding-otp

பாதிக்கப்பட்டவர்கள் OTP-யைப் பகிர்ந்ததால்தான் மோசடி நடந்தது என்று கூறினால் வங்கி பொறுப்பாகாது என்ற காரணத்தால், மிஸ்ட் கால் மூலம் பணம் கொள்ளை போய்விட்டது என்று கூறுகிறார்கள். ஒருவேளை, மோசடி நடந்தால், உடனடியாக வங்கி மேனேஜரிடம் தெரிவித்து அக்கவுண்டை ப்ளாக் செய்ய வேண்டும். அடுத்ததாக cybercrime.gov.in என்ற இணையதளத்திலும், காவல் நிலையத்திலும் புகார் அளிக்க வேண்டும்.

இந்தியாவில் 'சிம் ஸ்வாப்பிங்' நடக்கிறதா என்பது சரியாக தெரியவில்லை. அப்படியே நடந்தாலும், அது அரிதாகவே இருக்கும். ஆனால், அமெரிக்காவில் 'சிம் ஸ்வாப்பிங்' நடக்கிறது. 'சிம் ஸ்வாப்பிங்' மோசடி மிகவும் காஸ்டலியானது ஆகும். இதனால் இது அதிகமாக நடக்க வாய்ப்புகள் இல்லை.

மேலும், ரூ.50,000 போன்ற சிறுதொகைகெல்லாம் 'சிம் ஸ்வாப்பிங்' நடக்காது. 'சிம் ஸ்வாப்பிங்'கைப் பொறுத்தவரை, கஸ்டமர் கேர் உதவி இல்லாமல் இதை செய்ய முடியாது. இதில் ஈடுபடுகிறவர்கள் நிச்சயம் கஸ்டமர் கேரில் தங்கள்து ஆட்களை வைத்திருப்பார்கள்.

அமெரிக்காவில் சிம் ஸ்வாப்பிங் நடக்கிறது!
அமெரிக்காவில் சிம் ஸ்வாப்பிங் நடக்கிறது!

மோசடிகளில் இருந்து மக்கள் தப்பிக்க கண்டிப்பாக மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். அடுத்ததாக நமது செல்போனை அப்டேட்டடாக வைத்திருக்க வேண்டும். செல்போனில் சரியான ஆன்டிவைரஸ் இருக்க வேண்டும். கூகுள் ப்ளே ஸ்டோர், ஐ.ஓ.எஸ் தவிர, மூன்றாம் தரப்பிடம் (third party) இருந்து ஏதாவது ஆப்பை டவுன்லோட் செய்யும்போது, இந்த மாதிரியான பிரச்னைகள் வர வாய்ப்புகள் அதிகம்.

நமது பர்சனல் தகவல்கள் இல்லாமல் நிச்சயம் 'சிம் ஸ்வாப்பிங்' உள்ளிட்ட மோசடிகள் நடக்காது. இதனால் போன் செய்து கேட்டால் யாரிடமும் நமது பர்சனல் தகவல்களைத் தெரிவிக்காமல் இருப்பது மிக மிக முக்கியம்" என்று கூறினார்.

அலர்ட்டா இருங்க மக்களே!