Published:Updated:

மாயமில்லை... மந்திரமில்லை... உடைந்த மொபைல் ஸ்க்ரீன் தானாகச் சரியாகும்! #SelfHealingRubber

மாயமில்லை... மந்திரமில்லை... உடைந்த மொபைல் ஸ்க்ரீன் தானாகச் சரியாகும்! #SelfHealingRubber
மாயமில்லை... மந்திரமில்லை... உடைந்த மொபைல் ஸ்க்ரீன் தானாகச் சரியாகும்! #SelfHealingRubber

மாயமில்லை... மந்திரமில்லை... உடைந்த மொபைல் ஸ்க்ரீன் தானாகச் சரியாகும்! #SelfHealingRubber


இந்தியாவில் ஸ்மார்ட்போன்களுக்கு ஒரு நிரந்தர அடையாளம் உண்டு. அதன் ஸ்க்ரீன் உடைந்திருக்கும். ஒரு சின்ன விரிசலாவது இருக்கும். மொபைல் இல்லாதவர்களை விட உடைந்த திரை கொண்ட ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள்தான் அதிகம். சந்தேகம் இருந்தால், உங்களைச் சுற்றி இருப்பவர்களின் மொபைல்களை ஒருமுறை பாருங்கள். எத்தனை மொபைல்களின் திரையில் விரிசல் இருக்கிறது?

மொபைல், லேப்டாப் என ஒவ்வோர் ஆண்டும் டன் கணக்கில் மின்னணு கழிவுகளை நாம் குப்பைக்கு அனுப்புகிறோம். மொபைலே அதன் பிரச்னையை சரிசெய்ய முடிந்தால்?

”இதற்கு ஒரு வழி இல்லையா?” என மொபைல் யூஸர்களின் அலறல் ஆராய்ச்சியாளர்களில் காதில் விழுந்திருக்கிறது. அவர்களின் அதிரடி கண்டுபிடிப்புதான் “செல்ஃப் ஹீலிங் டிஸ்ப்ளே( Self healing display). அதாவது, தாமாகவே சரிசெய்து கொள்ளும் தொடுதிரை”. மோட்டோரோலா நிறுவனம் “Shape memory polymer" என்ற பெயரில் இதற்கு பேடண்ட் உரிமையைக் கோரியிருக்கிறது. மற்ற நிறுவனங்களும் இது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

எப்படி இது நடக்கும்? இவர்கள் கண்டுபிடித்திருக்கும் பொருள் வெப்பத்துக்கு உள்ளாகும்போது மீண்டும் பழைய நிலைக்கேத் திரும்பும் தன்மையுடையது. திரைக்குப்பின்னால் சின்ன கேப்ஸூல்களில் ”ஹீலிங் ஏஜென்ட்ஸ்” எனப்படும் பொருள்கள் இருக்கும். விரிசல் விழுந்தால், இவை வெளிவந்து திரையைச் சூடாக்கும். அப்போது, பழைய நிலைக்கே திரை மீண்டும் திரும்பும். 

ஒரு சில மாடல்களுக்கான ஐடியா வேறாக சொல்கிறார்கள். மொபைலில் ”repair" பட்டன் இருக்கும். அதை க்ளிக் செய்தால், அதன் பின் திரை சூடாகத் தொடங்கி பழைய நிலைக்குத் திரும்பும்.

எந்த வழியாக இருந்தாலும் விஷயம் இதுதான். கண்ணாடி, ப்ளாஸ்டிக்குக்கு மாற்றாக ஒரு பொருளைக் கண்டுபிடிக்கிறார்கள். அந்த பாலிமர், சூடாக்கினால் பழைய நிலைக்குத் தாமாக திரும்பும் தன்மை கொண்டது. அதைக்கொண்டு லேப்டாப், மொபைல் ஆகியவற்றின் ஸ்க்ரீன்களைத் தயாரிக்கவிருக்கிறார்கள்.

இது சாத்தியமானால் மொபைல் திரையோடா இந்த ஆராய்ச்சிகள் நிற்கும்? டயர்களுக்குக் கூட இந்தப் பொருளைப் பயன்படுத்தலாம். ஆட்டோமொபைலின் பல பாகங்கள் தொடங்கி மருத்துவத்துறை வரை பல தயாரிப்புகளுக்கு இது மாற்றாக அமையலாம். ”எங்கெல்லாம் ரப்பர் போன்ற பொருள்களால் வடிவங்கள் தயாரிக்கப்படுகின்றனவோ, அங்கெல்லாம் இது பயன்படும். இதனால், சுற்றுப்புறச் சூழலுக்கு எவ்வளவு நன்மை நடக்கும் என யோசித்துப் பாருங்கள்” என்கிறார்கள் இதைப் பற்றி ஆராய்ச்சி செய்பவர்கள்.

சராசரியாக இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு மொபைலைப் பயனர்கள் மாற்றுகிறார்களாம். இந்த வேகத்தில் போனால், அத்தனை மொபைல்களையும் தயாரிக்க தேவையான மூலப்பொருள்களுக்கே தட்டுப்பாடு வரலாம். அதனால், மொபைலை முழுவதுமாக மாற்றும் போக்கை மாற்ற வேண்டியது அவசியம் ஆகிறது. எந்தப் பாகத்தில் பிரச்னையோ அதை மட்டும் மாற்றும், அல்லது சரி செய்யும் யுத்திகள் வரவேற்கப்பட வேண்டியவை. அந்த வகையில், இந்த செல்ஃப் ஹீலிங் ரப்பர் ஒரு பெரிய புரட்சியாக இருக்கும் என நம்பலாம். 

ஆனால், மொபைலின் பேட்டரியைக் கூட கழட்ட முடியாதபடிதான் இப்போதைய ஸ்மார்ட்போன்கள் வடிவமைக்கப்படுகின்றன. மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களது லாபத்தை மட்டும் யோசிக்காமல், சுற்றுச்சூழல் மற்றும் பயனர்களின் நன்மை ஆகியவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்படி யோசிக்காமல், மொபைலுக்குள் “Save nature" ரக ஆப்ஸ் கொண்டு வருவதில் எந்த உபயோகமும் இல்லை.

அடுத்த கட்டுரைக்கு