Published:Updated:

அட... இதையா கூகுளில் இவ்வளவு பேர் தேடியிருக்கின்றனர்? #GoogleSearch

அட... இதையா கூகுளில் இவ்வளவு பேர் தேடியிருக்கின்றனர்? #GoogleSearch
அட... இதையா கூகுளில் இவ்வளவு பேர் தேடியிருக்கின்றனர்? #GoogleSearch

அட... இதையா கூகுளில் இவ்வளவு பேர் தேடியிருக்கின்றனர்? #GoogleSearch

வீட்டின் சுவர்க் கடிகாரத்தில் மணி பார்க்க, எப்படிக் கற்றுக்கொண்டீர்கள் என உங்களுக்கு நினைவிருக்கிறதா? அடுத்து இன்னொரு கேள்வி; குரங்கு பெடல் போட்டு சைக்கிள் ஓட்டி கீழே விழுந்து, விழுப்புண் பெற்ற அனுபவம் உங்களுக்கு இருக்கிறதா? 

"இவையெல்லாம் இப்போது எதற்கு? 'இவற்றைச் செய்த கடைசி தலைமுறை நாம்தான்' என ஸ்டேட்டஸ் தட்டும் அளவுக்கு, இவையெல்லாம் இன்னும் பழசாகி விடவில்லையே?" என நினைக்கிறீர்களா? நீங்கள் நினைப்பது சரிதான். ஆனால், மேலே நாம் பார்த்தவற்றிற்கும், இந்தக் கட்டுரைக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. 

மேலே சொன்ன இரண்டு விஷயங்களும் பால்ய வயதில் பெற்றோர்கள் மூலமாகவோ, நண்பர்கள் மூலமாகவோ கற்றுக்கொண்ட விஷயங்களாக இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பள்ளி, வீடு, நண்பர்கள் ஆகியோர்தான் வாழ்வின் ஆசிரியர்களாக இருந்தார்கள். கிணற்றில் நீச்சல் அடிப்பதில் தொடங்கி, மரத்தில் ஏறி மாங்காய் பறிப்பது வரை இப்படித்தான் கற்றுக்கொண்டோம். ஆனால் தற்போது நடப்பதே வேறு.

சட்டையை எப்படி அயர்ன் செய்வது, சிக்கனை எப்படி சமைப்பது, வீட்டின் கழிவறையை எப்படி சுத்தம் செய்வது என சின்ன சின்ன வீட்டு வேலைகளாக இருந்தாலும் சரி; கல்லூரியில் புரியாத கணக்குப் பாடங்களாக இருந்தாலும் சரி. அத்தனைக்கும் விடை சொல்லிக்கொண்டிருக்கிறார் ஓர் ஆசிரியர். தேடி வருபவர்களை என்றுமே திட்டாதவர்; இது உனக்குத் தேவையில்லாத விஷயம் என எதற்கும் தலையில் குட்டாதவர்; இன்டர்நெட் யுகத்தின் இன்ஸ்டன்ட் ஆசிரியரான கூகுள்தான் அவர்.

எந்தப் புதிய விஷயத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றாலும், எதுபற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றாலும் பலருக்கும் கூகுள்தான் தற்போது முதல் சாய்ஸாக இருக்கிறது. 'How to....' என கூகுள் சர்ச்சில் டைப் செய்தாலே போதும். இப்படி மக்கள் கூகுளில் தேடிய விஷயங்கள் வந்துகொட்டும். மக்கள் அதிகம் பேர் தேடிய விஷயங்கள், தேடிய புகைப்படங்கள், தேடிய வார்த்தை போன்றவற்றை ஒவ்வொரு வருடமும் இறுதியில் கூகுள் வெளியிடும். அதேபோல எந்த விஷயத்தை கற்றுக்கொள்ள மக்கள் அதிகம்பேர் கூகுளில் தேடியுள்ளனர் என்ற தகவலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது கூகுள். ஒவ்வொரு நாட்டிற்கும், ஒவ்வொரு மாதிரியான முடிவுகள் வெளிவந்துள்ளன. ஒட்டுமொத்தமாக உலகில் அதிகம்பேர் கூகுளில் How to போட்டு தேடிய விஷயம் எது தெரியுமா? இந்த டாப் 10 விஷயங்களைப் பாருங்கள்.

10. how to lose belly fat

9. how to make french toast

8. how to write a cover letter

7. how to make pancakes

6. how to make money

5. how to draw

4. how to lose weight

3. how to get pregnant

2. how to kiss

1. how to tie a tie

ஆமாம் பாஸ்... டை கட்டுறது எப்படின்னுதான் உலகம் முழுக்க அதிகம்பேர் கூகுள்ல தேடியிருக்காங்க. இரண்டாவதாக இருக்கும் விஷயம் அடுத்த சுவாரஸ்யம். இதுதவிர எப்படி ஃப்ரைட் ரைஸ் சமைப்பது, எப்படி மகிழ்ச்சியாக இருப்பது, எப்படி சிக்ஸ்பேக் வைப்பது, எப்படி கேர்ள் ஃப்ரண்டை இம்ப்ரஸ் செய்வது, எப்படி ஆம்லெட் போடுவது என வகைவகையான முடிவுகள் டாப் 100 பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 

ஆதார் கார்டை பான் கார்டுடன் இணைப்பது எப்படி, மொபைலை ரூட் செய்வது எப்படி, ஆபரேட்டிங் சிஸ்டம் இன்ஸ்டால் செய்வது எப்படி, வருமானவரி தாக்கல் செய்வது எப்படி என்பது போன்ற சீரியஸான தேடல்களும் கூகுளில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலானோர் கூகுளை ஜாலியாகத்தான் டீல் செய்துள்ளனர். கற்றுக்கொள்வதற்காக How to எனப் போட்டு அதிகம்பேர், எவை தொடர்பாக தேடியுள்ளனர் தெரியுமா? டாப் 5 விஷயங்கள் இவைதாம்.

5. ஆரோக்கியம் 

4. தொழில்நுட்ப விஷயங்கள்

3. வயது வந்தோர்க்கான விஷயங்கள்

2. காதல் தொடர்பான கேள்விகள்

1. சமையல் தொடர்பான விஷயங்கள்

கூகுளில் லட்சோபலட்சம் தகவல்கள் கொட்டிக்கிடந்தாலும் மக்களின் ஆதரவு என்னவோ சமையல் குறிப்புகளுக்குதான். இவற்றைக் கற்றுக்கொள்ளத்தான் பலரும் கூகுளை நாடியுள்ளனர். இப்படி வெறும் பொதுவான தகவல்களைத் தேடுபவர்கள் போலவே  'How to....' எனத் தேடுபவர்களின் எண்ணிக்கையும் 2004-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில்140% உயர்ந்திருக்கிறது என்கிறது கூகுள். எப்பேர்ப்பட்ட பெரிய டெக்னாலஜியாக இருந்தாலும், அது மக்களின் அன்றாட வாழ்க்கையோடு ஒன்றியிருப்பதில்தான் அதன் வெற்றி இருக்கிறது. கூகுள் எப்படி மென்மேலும் வளர்கிறது என இப்போது தெரிகிறதா?

அடுத்த கட்டுரைக்கு