Published:Updated:

டெக் டாக் GADGETS

ஆதவன்

டெக் டாக் GADGETS

ஆதவன்

Published:Updated:

 ஸ்மார்ட்ஃபோன்  மோட்டோரோலா மோட்டோ G 

டெக் டாக் GADGETS

இந்தியாவில் விற்பனையில் இருக்கும் இரண்டாவது தலைமுறை மோட்டோரோலா ‘மோட்டோ G’ ஸ்மார்ட்போன்தான் இப்போது கில்லி. இதன் 16 gb மாடல் ஃப்ளிப்கார்ட்டில் விற்பனைக்கு வந்தபோது, 15 நிமிடங்களுக்குள் விற்றுத் தீர்ந்தது (இதை ஃப்ளிப்கார்ட் மூலமாக மட்டுமே வாங்க முடியும்).  டெக்னிக்கலாக இந்த போனின் அம்சங்கள் மிரட்டினாலும், வெற்றி பெற உண்மையான காரணம், உயர் ரக போன்களின் உணர்வைத் தர முடிந்ததுதான். ஃப்ளிப்கார்ட் வலைதளமே ‘இந்த போனுக்கு டிமாண்ட் அதிகமாக இருப்பதால், டெலிவரி தாமதமாக வாய்ப்பு இருக்கிறது’ என்று சொல்கிறது. 1.2 Ghz குவால்காம் குவாட்-கோர் ப்ராசஸரும், Adreno 305 கிராஃபிக்ஸ் ப்ராசஸரும் ‘ரியல் ரேஸிங்’ போன்ற கிராஃபிக்ஸ் நிறைந்த கேம்களை அசால்ட்டாகச் சமாளிக்கிறது. 8 மெகா பிக்ஸல் பின்பக்க கேமரா தரமான படங்களை எடுக்கிறது. 2 மெகா பிக்ஸல் முன்பக்க கேமரா தரமான செல்ஃபிகள், வீடியோ கால்களுக்கு உதவுகிறது. ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட் ஆபரேட்டிங் சிஸ்டம் என்பதால், படபடவென அப்ளிகேஷன்களைப் பயன்படுத்த முடியும்.  மோட்டோரோலா மோட்டோ ஜி  - விலை 12,999 ரூபாய்.

 சிறந்த பட்ஜெட் கேமரா கேனான் EOS 600D

டெக் டாக் GADGETS

‘பாயின்ட் அண்டு ஷூட்’ கேமராக்கள் இப்போது ட்ரெண்டிலேயே இல்லை. DSLR கேமராவில்தான் ஆரம்பிக்கிறார்கள் இன்றைய இளைஞர்கள். இந்த செக்மென்ட்டில் பெஸ்ட் கேமராவாக இருக்கிறது கேனான் EOS 600D. மிக எளிதாக இந்த கேமராவை இயக்குவதற்குக் கற்றுக்கொள்ள முடியும். ஃபுல்-HD வீடியோ, சுழற்றிக் கொள்ளக்கூடிய ப்ரிவியூ ஸ்க்ரீன், மினி-HDMI போர்ட், நல்ல டைனமிக் ரேஞ்ச் போன்றவை இதன் கூடுதல் ப்ளஸ் பாயின்ட்ஸ். குறைந்த வெளிச்சத்தில் ஆட்டோஃபோகஸ் கச்சிதமாக இயங்காமல் இருப்பது மைனஸ். 31,000 ரூபாய் விலைக்குக் கிடைக்கிறது கேனான் 600D.

 அப்டேட்   ஸியோமிக்குத் தடா!

டெக் டாக் GADGETS

இந்தியாவில் சமீபத்தில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட ஸ்மார்ட்போன் நிறுவனம் ஸியோமி. ஆன்லைன் ஷாப்பிங் வலைதளங்களில், நிமிடங்களில் இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் விற்றுத் தீர்ந்தன. சீன நிறுவனமான ஸியோமி-க்குக் கிடைத்த வரவேற்பு, இந்தியாவில் குறைந்த விலைக்கு ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துகொண்டிருந்த மைக்ரோமேக்ஸ் போன்ற நிறுவனங்களின் அஸ்திவாரத்தையே ஆட்டிப் பார்த்தது. கூகுளின் ஆண்ட்ராய்டு ஒன் போன்களையும் விற்பனையில் முந்தியது ஸியோமி.
 
உயர்நீதிமன்றம் ஸியோமி போன்களின் விற்பனையைத் தடை செய்ததற்குக் காரணம், எரிக்ஸன் நிறுவனம் தொடர்ந்த காப்புரிமை மீறல் வழக்கு. எரிக்ஸன் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக ஸியோமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டால் மட்டுமே, மீண்டும் ஸ்மார்ட்போன்களை ஸியோமி நிறுவனத்தால் விற்பனை செய்யவும், ஏற்கெனவே முன்பதிவு செய்தவர்களுக்கு டெலிவரி செய்யவும் முடியும்.

 ஆப்ஸ்   டார்க் (TORQUE)

டெக் டாக் GADGETS

‘அப்ளிகேஷன்கள்’ இல்லாவிட்டால், ஸ்மார்ட்போன்கள் அம்பேல்தான். ஆனால், ஒரே வேலையைச் செய்யவே இங்கு பல ஆப்ஸ் இருக்கின்றன. இதில், நம் போனில் இன்ஸ்டால் செய்ய, ஒவ்வொரு வேலைக்கும் ஒரு ஆப்ஸ் தேடினால் நேரம்தான் வீணாகும். அப்படிப்பட்ட ஒரு ‘ஆப்’தான் ‘டார்க்.’ உங்கள் காரின் கூலன்ட் வெப்பம் முதல் மைலேஜ் வரை, எந்த ஆர்பிஎம்-ல் எவ்வளவு ஹார்ஸ் பவர் போன்ற எண்ணற்ற தகவல்களை காரின் கம்ப்யூட்டரில் இருந்து நமக்கு எடுத்துத் தருகிறது இந்த டார்க் அப்ளிகேஷன். திடீரென காரின் ‘Check Engine’ லைட் எரிந்தால், மேனுவலில் சர்வீஸ் சென்டர் நம்பரைத் தேடுவதற்கு முன்னால், இந்த அப்ளிகேஷன் மூலமாகவே என்ன பிரச்னை எனத் தெரிந்துகொள்ளலாம்.

OBD ப்ளூடூத் அடாப்டரை, காரின் OBD போர்ட்டில் இணைக்க வேண்டும். அனைத்து கார்களிலும், ஸ்டீயரிங் வீலுக்குக் கீழே வலதுபக்கம், இந்த போர்ட் இருக்கும். காரின் பாடி பேனலை சற்று தளர்த்தினால், இந்த போர்ட்டைப் பார்க்கலாம். அடாப்டரும், அப்ளிகேஷனும் இணைந்து இயங்க ஆரம்பித்ததும், காரின் அனைத்து டெக்னிக்கல் விபரங்களையும் லைவ்வாகப் பார்க்கலாம்.