Published:Updated:

புல்லட் ரயில் திட்டம்... இந்தியாவுக்கு உதவியா... உபத்திரமா? #BulletTrain

புல்லட் ரயில் திட்டம்... இந்தியாவுக்கு உதவியா... உபத்திரமா? #BulletTrain

புல்லட் ரயில் திட்டம்... இந்தியாவுக்கு உதவியா... உபத்திரமா? #BulletTrain

புல்லட் ரயில் திட்டம்... இந்தியாவுக்கு உதவியா... உபத்திரமா? #BulletTrain

புல்லட் ரயில் திட்டம்... இந்தியாவுக்கு உதவியா... உபத்திரமா? #BulletTrain

Published:Updated:
புல்லட் ரயில் திட்டம்... இந்தியாவுக்கு உதவியா... உபத்திரமா? #BulletTrain
  • இனி, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரைதான் ரயிலில் தூங்க முடியும் - ரயில்வேத்துறை புதிய அறிவிப்பு.
  • ஜப்பான் 1967 ஆம் ஆண்டு முதன் முதலில் புல்லட் ரயிலை அறிமுகப்படுத்தியது. 
  • இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் உருவாக்க ஒதுக்கப்பட்டத் தொகை 65,000 கோடி.
  • கடந்த 10 ஆண்டுகளில் ரயில் தடம் புரண்டதால் ஏற்பட்ட உயிரிழப்பின் என்ணிக்கை 458. அதில் 2016-2017 ஆண்டில் மட்டும் 193 
  • புல்லட் ட்ரெயினை விட விலை குறைவான, வேகமான ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் அமெரிக்காவில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டிருக்கிறது. அதை, ஆந்திராவுக்கு கொண்டு வர MoUல் கையெழுத்திட்டிருக்கிறர் சந்திரபாபு நாயுடு.

இந்தச் செய்திகளுக்குள் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், இதையெல்லாம் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டத்தை பற்றி பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய் செலவில் வரவிருக்கும் இந்த அதிவேக ரயில் அகமதாபாத் நகருக்கும் மும்பை நகருக்கும் இடையில் ஓடும். மொத்த தூரம் 508 கி.மீ. இந்தத் தூரத்தை 2 மணி நேரம் 30 நிமிடங்களில் கடந்துவிடும். வழியில் 12 இடங்களில் மட்டுமே நிற்கும். அவற்றுள் 4 ஸ்டேஷன் மஹாராஷ்டிரா எல்லைக்குள்ளும், 8 ஸ்டேஷன் குஜராத் மாநில எல்லைக்குள்ளும் இருக்கின்றன. கிட்டத்தட்ட 800-1000 பயணிகளை சுமந்து செல்லும் இந்த ரயில், இன்னும் ஆறு ஆண்டுகளில் பயன்பாட்டுக்கு வரும். 

இந்தத் திட்டம் பிரதமர் மோடியின் சிக்ஸர்களில் ஒன்று என வாட்ஸ்அப் ஃபார்வர்டுகள் பறக்கின்றன. ‘இல்லை இல்லை... நம்மை டக் அவுட் ஆக்கும் மோடியின் இன்னொரு யார்க்கர்” என ஃபேஸ்புக்கில் பதிலடிகள் வைரல் ஆகின்றன. உண்மையில், இந்த புல்லட் ரயில் யார்? எம்.ஜி.ஆரா நம்பியாரா? 

நான்கு முக்கியமான விஷயங்களைக் கொண்டு இந்தத் திட்டத்தை அணுகலாம். தொழில்நுட்பம், பொருளாதாரம், வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு.

தொழில்நுட்பம்:
முதல் பத்தியில் சொன்ன ஒரு செய்தியை நினைவுக் கூரலாம். ”ஜப்பான் 1967 ஆம் ஆண்டு முதன் முதலில் புல்லட் ரயிலை அறிமுகப்படுத்தியது.”. இந்த தொழில்நுட்பம் 50 ஆண்டுகள் பழையது. இந்தத் துறையில் அடுத்து எந்த மாற்றமும் நிகழவில்லையென்றால் நிச்சயம் இதை நாம் வரவேற்கலாம். ஆனால், ஹைப்பர்லூப் டெக்னாலஜி வந்துவிட்டது. புல்லட் ரயிலை விட ஹைப்பர்லூப் வேகமானது. முன்னது மணிக்கு 320  கி.மீ வேகத்தில் செல்லும்; பின்னது 800 கி.மீ. அதாவது இரண்டரை மடங்கு வேகமானது. அப்படியென்றால், அதிகச் செலவு ஆகுமா என்ற சந்தேகம் வந்தாக வேண்டும். இதுவரை தந்திருக்கும் தகவல்படி, ஹைப்பர்லூப் உருவாக்க புல்லட் ரயிலுக்கு ஆகும் அதே செலவுதான் ஆகும். அதே சமயம், நேரம் குறைவென்பதால் அதிக டிரிப் இங்கே சாத்தியம். அதனால், பயணக் கட்டணம் புல்லட் ரயிலை விட குறைவாகும். விஜயவாடாவுக்கும் அமராவதி நகருக்கும் இடையே இருக்கும் தூரத்தை 6 நிமிடங்களில் கடக்க ஹைப்பர்லூப் நிறுவனம் உதவுவதாக சொன்னது. அதன் சாத்தியங்களை ஆராய ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார் ஆந்திர முதல்வர்.
ஜப்பானின் வளர்ச்சியில் புல்லட் ரயிலின் பங்களிப்பை மறுப்பதற்கில்லை. ஆனால், நாடு முழுக்க இருக்கும் புல்லட் ரயில்களால் தான் அது சாத்தியமானது. இந்தியா போன்ற பரந்த நாட்டில் எத்தனை புல்லட் ரயில்கள் தேவைப்படும்? ஒவ்வொரு திட்டத்துக்கும் ஜப்பான் ஒரு லட்சம் கோடி தருமா? அல்லது நம்மிடம் அவ்வளவு பணம் இருக்கிறதா?

அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு 2 மணி நேரத்தில் வந்துவிடலாம். ஆனால், மும்பையில் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு போக இன்னொரு 2 மணி நேரம் ஆகுமே. அதற்கு நாம் என்ன திட்டம் வைத்திருக்கிறோம்?

ஹைப்பர்லூப் இன்னமும் பயணிகள் பயன்பாட்டுக்கும் எங்கும் வரவில்லை என்பதால் புல்லட் டிரெயிந்தான் தற்போதைக்கு வேகமான பயணிகள் ரயில் என்பதும் உண்மை. போலவே, ஜப்பானில் இதுவரை புல்லட் ரயில் விபத்தால் ஓர் உயிரிழப்புக் கூட நடக்கவில்லை என்பது முக்கியமான அம்சமே.

பொருளாதாரம்:
முதல் பத்தியில் சொன்ன ஒரு செய்தி. “இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் உருவாக்க ஒதுக்கப்பட்டத் தொகை 65,000 கோடி.” 
புல்லட் ரயில் திட்டத்தின் மதிப்பு ஒரு லட்சம் கோடி. அதாவது ஒட்டு மொத்த இந்தியாவையும் வளர்ச்சியை நோக்கித் தள்ளும் திட்டத்துக்கு ஆகும் செலவை விட ஒரே ஒரு புல்லட் ரயிலுக்கு 35 சதவிகிதம் அதிகப் பணம் தேவை. அதுவும் ஒரே ஒரு ரூட்டுக்கு.
”இந்த ஒரு லட்சம் கோடி ரூபாய் நம்ம பணம் இல்லையே... ஜப்பான் கொடுக்கிறதே?” என்கிறார்கள் இத்திட்டத்தை ஆதரிப்பவர்கள். உண்மைதான். ஆனால், ஜப்பான் இலவசமாக கொடுக்கவில்லை. அதன் டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் இதுதான்.

ஜப்பான் 80,000 கோடி கொடுக்கும். இதற்கு முதல் 15 வருடங்களுக்கு வட்டி கிடையாது. அதன் பிறகு, 35 ஆண்டுகளில் 0.5% வட்டியுடன் அசலையும் திருப்பித் தர வேண்டும். மொத்தமாக 94,000 கட்ட வேண்டியிருக்கும். அதற்கு 50 ஆண்டுகள் கால அவகாசம். 

ஆனால், இந்த 80,000 கோடியில் கணிசமான தொகையை இப்போதே ஜப்பான் தனது பாக்கெட்டுக்குள் கொண்டு வந்துவிடும். ஏனெனில், நமக்கு புல்லட் ரயிலையும் அந்தத் தொழில்நுட்பத்தையும் தரப்போவதே ஜப்பான் தான். 

இந்தத் திட்டத்தால் இரண்டு மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகம் அதிகரிக்கும். அதனால் பொருளாதாரம் பலம்பெறும் என்கிறார்கள். யோசிக்க வேண்டிய விஷயம்தான். ஆனால், ஏற்கெனவே இரண்டு நகரங்களுக்கும் இடையே குறைந்தக் கட்டணத்தில் விமானச் சேவைகள் செயல்பாட்டில் இருக்கின்றன. ஏகப்பட்ட ரயில்களும் உண்டு. இவைத் தவிர முதல் தர எக்ஸ்ப்ரஸ்வேயும் உண்டு. இத்தனை வழிகளை வைத்துக்கொண்டு புல்லட் ரயிலுக்கு ஆயிரக்கணக்கில் டிக்கெட் வைக்க முடியாது. விலையைக் குறைத்தால் லாபம் கிடையாது. விலையை ஏற்றினால், பறக்கும் ரயிலைப் போல, ஆசைக்கு ஒரு தடவை பயணம் செய்துவிட்டு இந்தத் திட்டத்தையே மக்கள் மறந்துவிடுவார்கள். 50 ஆண்டுகளில் இந்தத் திட்டம் மூலம் ஒரு லட்சம் கோடியை எடுப்பது சாத்தியமா என்பது முக்கியமான கேள்வி.  
ஜப்பானுக்கு நாம் முதல் கஸ்டமர் கிடையாது. பல ஆண்டுகளுக்கு முன்பே தைவானுக்கு புல்லட் ரயிலை டோர் டோர் டெலிவரி செய்தது ஜப்பான். 8 ஆண்டுகால சேவைக்குப் பின், “இதனால் லாபம் இல்லை... வட்டியும் கட்ட முடியல. ரன்னிங் செலவே அதிகமா இருக்கு. நான் மூடிக்கிறேன்” என்றது அந்த நிறுவனம். நினைத்ததை விட குறைவானவர்களே இந்த ரயிலைப் பயன்படுத்தியதால் வந்த பிரச்னை அது. ஜப்பானிலே புல்லட் ரயில் லாபகரமானது கிடையாது. இந்தச் சேவையால் அதைச் சுற்றி இருக்கும் ரியல் எஸ்டேட் வளரும். அதில்தான் லாபமாக பார்க்க முடியும்.

பாதுகாப்பு:
”கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் ரயில் தடம் புரண்டதால் ஏற்பட்ட உயிரிழப்பின் என்ணிக்கை 458. அதில் 2016-2017 ஆண்டில் மட்டும் 193”

இந்தச் செய்தியில் இருக்கும் அத்தனை உயிரிழப்புகளுக்கும் காரணம் இந்திய ரயில்வேதுறை. ரயில்களின் பாதுகாப்பை அதிகரிக்க ரயில்வேத்துறை இவ்வளவு பணத்தை ஒதுக்கவில்லை; எந்தத் திட்டத்தையும் அறிவிக்கவில்லை. சமீபத்தில் அத்துறை வெளியிட்ட அறிவிப்புதான் இந்தக் கட்டுரையின் முதல் வரி. இந்த வேகத்தில் தான் நகர்ந்துகொண்டிருக்கிறது இந்திய ரயில்வே.

இதே புல்லட் ரயிலை சீன நிறுவனமும் தரத் தயாராக இருக்கிறது. ஆனால், ஜப்பான் பாதுகாப்பு விஷயத்தில் சிறந்தது என்கிறார்கள். இதுவரை ஜப்பானில் புல்லட் ரயில் விபத்தால் ஒரு உயிரிழப்புக் கூட நேர்ந்ததில்லை என்கிற புள்ளி விபரத்தை முன் வைக்கிறார்கள். அதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால், ஜப்பான் அல்லது சீனா என்ற ரேஸீல் ஜப்பான் வெல்லலாம். ஆனால், புல்லட் ரயில் ஏன் தேவை என்பதற்கு இந்த ஒப்பீடு ஒத்துவராது.

வளர்ச்சி:
”டெக்னாலஜியை நாங்கள் தருகிறோம். நீங்கள் தயாரித்துக்கொள்ளுங்கள்” என ஒத்துக்கொண்டிருக்கிறது ஜப்பான். மேக் இன் இந்தியா திட்டத்துக்கு கீழ் இத்திட்டம் வருகிறது என்கிறார்கள். இதனால், நிச்சயம் பல லட்ச வேலைவாய்ப்புகள் உருவாகும். ஆனால், பாதுகாப்புக்காக ஜப்பானிடம் போகிறோம் என்ற வாதம் இங்கே பலவீனம் ஆகிறது. இந்தியாவில் தயாரித்தால் ஜப்பானின் தரம் கிடைக்குமா?

நாம் தொழில்நுட்பத்தை ஜப்பானிடம் இருந்து வாங்குகிறோம். இன்னும் 10 ஆண்டுகளில் நாமே நமக்கான புல்லட் ரயிலை தயாரித்துக் கொள்ளலாம். அப்படித்தான் இன்று பெரும்பாலான தலைநகரங்களிலும் இருக்கும் மெட்ரோ ரயில் தொழில்நுட்பம் இந்தியாவுக்குள் வந்தது. அதையும் மறுப்பதற்கில்லை. பயண நேரத்தைக் குறைப்பது நிச்சயம் பல விதங்களில் நல்லதுதான். வர்த்தகம் முதல் சுற்றுலாத்துறை வரை செழிப்பாக்க அது உதவும்.

புல்லட் ரயில் பற்றி நடத்தப்பட்ட சர்வேயின் முடிவுகள்:

.