Published:Updated:

’ஆன்டி இந்தியன்’ தெரியும்... ’ஆன்டி ட்ரம்ப்’ யார் தெரியுமா?

’ஆன்டி இந்தியன்’ தெரியும்... ’ஆன்டி ட்ரம்ப்’ யார் தெரியுமா?
’ஆன்டி இந்தியன்’ தெரியும்... ’ஆன்டி ட்ரம்ப்’ யார் தெரியுமா?

பிரதமர் மோடிக்கு எதிரான விமர்சனங்களை வைப்பவர்களை ’ஆன்டி இந்தியன்’ என்று விமர்சிப்பது வழக்கம். இப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள ட்விட்டில் ஃபேஸ்புக் நிறுவனத்தை ’ஆன்டி ட்ரம்ப்’ என்று குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ட்ரம்பின் இந்த விமர்சனத்துக்கு ஃபேஸ்புக் சி.இ.ஓ மார்க் சக்கர்பெர்க்கும் தனது பதிலைத் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே சிலிக்கான் வேலி சி.இ.ஓ.க்களுக்கும் ட்ரம்புக்கும் கருத்து வேறுபாடு இருந்து வருவது அனைவரும் அறிந்ததே.

எந்தவித ஆதாரங்களுமின்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ''ஃபேஸ்புக் ஆன்டி ட்ரம்ப் மனநிலையில் வேலை செய்கிறது. அந்த நிறுவனத்தின் செய்திகள் போலியாக உள்ளன'' என்ற விமர்சனத்தை முன் வைத்துள்ளார். இது தவிர நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையையும் சாடியுள்ளார் ட்ரம்ப். 

 ட்ரம்ப் ஆதரவாளர்கள் அதிகப் பேர் இருந்தாலும், ஃபேஸ்புக்கின் மவுஸை அவரது இந்த ட்விட் எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. அதற்கு பதில் ஃபேஸ்புக்கின் பங்குகள் 1.35% அதிகரித்து.

இதற்கு பதிலளித்துள்ள ஃபேஸ்புக் சி.இ.ஓ மார்க் சக்கர்பெர்க் '' நான் அதிபர் ட்ரம்பின் ட்விட்டுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். அவருக்கு எதிராக ஃபேஸ்புக் செயல்படுவதாக கூறியுள்ளார். பதில் சொல்வதற்கு முன் ஒரு விஷயத்தை நான் கூற விரும்புகிறேன் ஃபேஸ்புக் மக்களையும். சமூகத்தையும் இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இங்கு பலவிதமான ஆதரவு குரல்களும், எதிர்ப்புகளும் மக்களால் பதிவிடப்பட்டு வருகின்றன.  ட்ரம்ப் ஃபேஸ்புக் அவருக்கு எதிராக செயல்படுவதாகக் கூறுகிறார். சுதந்திர கட்சியினர் நாங்கள் ட்ரம்புக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறுகின்றனர். இருவரும் அவர்களுக்குப் பிடிக்காத விஷயங்களைப் பற்றி மட்டுமே பேசுகிறார்கள். அவர்களது கருத்துகளைக் கூறுகிறார்கள். இதுதான் இந்தத் தளத்தின் நோக்கம். ஒருவர் தங்கள் கருத்தை எந்தத் தயக்கமுமின்றி பகிர உதவுவதுதான் ஃபேஸ்புக்கின் நோக்கம்.

ஃபேஸ்புக் 2016ம் ஆண்டு தேர்தலில் முக்கியப் பங்கு வகித்தது என்று அனைவரும் கூறுகின்றனர். அதன் கூற்றுகள் இதோ...

- அதிகப்படியான குடிமகன்கள் பிரசார மேடைகளிலும், பொது இடங்களிலும் விமர்சிக்க தயங்கிய விவாதங்களை ஃபேஸ்புக்கில் விவாதித்தனர். இன்னும் சொல்லப்போனால் பத்திரிக்கைகள் கவனிக்காத விஷயங்கள் கூட இங்கு விவாதிக்கப்பட்டன.

- இணையதளத்தை விவாதக்களமாக மாற்றி அமெரிக்க மக்கள் சந்திக்கும் முதல் அமெரிக்க அதிபர் தேர்தல் இதுதான். ஒவ்வொரு வேட்பாளரும் லட்சக்கணக்கான லைக்குகளை வாங்கிக் குவித்தது இந்தத் தேர்தலில்தான்.

- இந்தத் தேர்தலுக்காக மில்லியன் கணக்கில் கட்சிகள் பணத்தை செலவழித்ததும் இப்போதுதான். இது சாதாரண விளம்பரங்களுக்கான செலவை விட 100 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

’get out the vote’ பிரசாரம் மூலம் 20 லட்சம் வாக்களர்களை வாக்களிக்கத் தூண்டினோம். இது ட்ரம்ப், க்ளின்டன் பிரசாரங்களை விடவும் பெரியது.

தேர்தலுக்குப் பிறகு ஃபேஸ்புக் தேர்தல் முடிவுகளை மாற்றியமைத்தது என்ற கருத்தை ஆதாரங்களோடு எதிர்த்தேன். இது நகைச்சுவையாக உள்ளது என்றும் கூறினேன். நாங்கள் ஒற்றுமைக்காகப் போராடி வருகிறோம். யாரையும் பிரிப்பது எங்கள் எண்ணமில்லை. அனைத்து மக்களுக்கான சமூகத்தை உருவாக்க வேண்டும். இதில் பாகுபாடு கூடாது. இந்தத் தளத்தில் உள்ள கருத்துகள் நல்ல சமூகத்தை எப்போதும் உருவாக்கும்” என்று மார்க் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள  புலம்பெயர்ந்தவர்களை வெளியேற்ற வேண்டும் என ட்ரம்ப் ஆரம்பித்தபோது ”என்னங்க சார் உங்க சட்டம்” என்று பொங்கி எழுந்ததும் மார்க் சக்கர்பெர்க்தான். ட்ரம்ப் ஃபேஸ்புக்கைக் குறைகூறுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதற்கு மார்க்கும் தக்க பதில் கூறிவருகிறார். ட்ரம்பின் இந்த ஃபேஸ்புக் மீதான தாக்குதல் மார்க்மீது உள்ள பயம்தான் என்கின்றனர் நெட்டிசன்கள். 

”ஒரு நாயகன்... உதயமாகிறான்” பாடலை அமெரிக்காவுக்கு டெடிகேட் செய்யும் நேரம் நெருங்குகிறதா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

மார்க் சக்கர்பெர்க் அரசியலுக்கு வருவாரா?
ஆம்
இல்லை
buildquizzes
 
 
 
 
 
 

.