Published:Updated:

ஒரே வாரத்தில் கிட்டார் வாசிக்கலாம்... செம ஸ்டார்ட் அப் ஐடியா..! #FretZealot

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஒரே வாரத்தில் கிட்டார் வாசிக்கலாம்... செம ஸ்டார்ட் அப் ஐடியா..! #FretZealot
ஒரே வாரத்தில் கிட்டார் வாசிக்கலாம்... செம ஸ்டார்ட் அப் ஐடியா..! #FretZealot

ஒரே வாரத்தில் கிட்டார் வாசிக்கலாம்... செம ஸ்டார்ட் அப் ஐடியா..! #FretZealot

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

காலங்கள் மாறினாலும் மவுசு குறையாத சில விஷயங்களில் முக்கியமானது கிட்டார். கல்லூரிகளில் ஒருவரை ஹீரோவாக்க உதவும் காஸ்ட்லி பைக், மைக்கேல் ஜாக்ஸன் நடனம், தேர்வில் முதல் மதிப்பெண், கிரிக்கெட்டில் ஹாட்ரிக் சிக்ஸ் போன்ற அனைத்தையும் விட பவர்ஃபுல் ஆன விஷயம் கிட்டார்தான். “இளைய நிலா பொழிகிறதே”வில் தொடங்கி “ராக் ஸ்டார்” வரை ஏதாவது ஒரு பாடலை... ம்ஹூம் ஒரே ஒரு இண்டர்ல்யூடை வாசிக்கத் தெரிந்தால் போதும். தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். ஆனால், அந்தக் கிட்டாரை கற்றுத் தேர்வது அவ்வளவு சாதாரண விஷயமா? “ஆம்” என்கிறது Fret Zealot.

கிட்டாரை வாசிப்பது அடுத்த விஷயம். பல ஹீரோக்களுக்கு வாசிப்பது போல நடிக்கக் கூட தெரியாது. இடது கையை இடம் மாற்றாமல், வலது கையால கம்பிகளை Strum செய்வது மட்டுமே கிட்டார் வாசிப்பது என்பது ஹீரோக்களின் புரிதல். சிலர், ஆர்வத்தின் காரணமாக இணையம் மூலம் கிட்டார் கற்க முனைவதுண்டு. பிடித்த பாடலுக்கான நோட்ஸ் எடுத்துக்கொண்டு, மெதுவாக வீடியோவில் சொல்வது போல வாசிக்க பயிற்சி செய்வார்கள். சிலருக்கு அது சாத்தியமாகிவிடும் ஆச்சர்யமும் நடக்கும். அதை விட எளிமையான வழியைக் காட்டுகிறது Fret Zealot.

எப்படி வேலை செய்கிறது?
ஒரு மொபைல் ஆப் மற்றும் LED லைட்டுகள் இணைந்து செய்யும் மாயாஜாலம் இது. கிட்டாரின் கம்பிகளுக்கு அடியில் இந்த LED லைட் வரிசையை ஒட்டிக்கொள்ள வேண்டும். நமக்குப் பிடித்த பாடலை ஆப்-ல் தேர்வு செய்துகொள்ள வேண்டும். பாடலை வாசிக்க எந்த நோட்ஸ் தேவையோ, அங்கு LED லைட் ஒளிரும். அதை வைத்து கைகளை அங்கே நகர்த்த வேண்டும். அவ்வளவுதான். ஒரே ஒரு நாள் பயிற்சி செய்தால் போதும். இந்த ஒளியைப் பின்பற்றி கிட்டார் வாசிக்கும் டெக்னிக் நமக்கு எளிதாகி விடும் என்கிறார்கள் இதன் தயாரிப்பாளர்கள். மொபைலும், கிட்டாரும் WiFiமூலம் கனெக்ட் ஆகியிருக்கும். 

எலக்ட்ரிக் கிட்டார்களில்தான் இந்த லைட்டிங் அட்டகாசமாய் இருக்கிறதென்றாலும், அக்வாஸ்டிக் கிட்டார்களில் இது வேலை செய்யும். எதிர்காலத்தில் பேஸ் கிட்டார்களுக்கும் வரும்.

”LED லைட்ட ஒட்ட வேண்டும் என்றால், அதில் பசை இருக்குமே? அது என் கிட்டாரை வீணாக்குமா?”என் பயமெல்லாம் தேவையில்லை. எந்தச் சிக்கலும் இல்லாமல் இருக்கத்தான் இவர்கள் நிதி திரட்டி புரோட்டோ டைப்பைத் தயார் செய்துகொண்டிருக்கிறார்கள். 

இடதுகைப்பழக்கம் இருப்பவர்களுக்கு எனத் தனி கிட்டார் உண்டல்லவா? அதற்கும் இதைப் பயன்படுத்த முடியும். இந்த ஆப்-ல் பாடல்கள் மட்டுமல்லாமல், ஏகப்பட்ட chordsம் உண்டு. 

விலை:
இதற்கான ப்ரீ-ஆர்டர் பதிவுத் தொடங்கிவிட்டது. 200 டாலர் ஆரம்ப விலை. அதாவது இந்திய விலையில் 13,000. இன்னும் இந்தியாவுக்கு வரவில்லை.

பல ஆண்டுகள் செலவிட்டு கிட்டார் கற்க பொறுமையில்லாதவர்களுக்கு மட்டுமே இது. மற்றபடி கிட்டாரை முறையாகக் கற்க விரும்புவர்கள் நல்லதொரு ஆசானைக் கண்டறிந்து அவரிடம் சேரலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு