Published:Updated:

வாட்ஸ்அப் உள்ள அம்மாக்கள் என்ன செஞ்சிட்டு இருப்பாங்க தெரியுமா?

வாட்ஸ்அப் உள்ள அம்மாக்கள் என்ன செஞ்சிட்டு இருப்பாங்க தெரியுமா?
வாட்ஸ்அப் உள்ள அம்மாக்கள் என்ன செஞ்சிட்டு இருப்பாங்க தெரியுமா?

வாட்ஸ்அப் உள்ள அம்மாக்கள் என்ன செஞ்சிட்டு இருப்பாங்க தெரியுமா?

அடுத்த லாங் வீக் எண்ட் வந்தால், உங்கள் சொந்த கிராமத்துக்கு ஒரு விசிட் அடிங்க. திண்ணையில, வெத்தலைப் பாக்கு இடித்துக்கொண்டிருந்த பாட்டிக்கள் இப்போ ஆண்ட்ராய்டு ஃபோன்ல சீரியல் பாத்துட்டு இருப்பாங்க. இல்லைன்னா, வாட்ஸ்அப்ல அதைப் பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டு இருப்பாங்க. லேப்டாப் வந்த புதுசுல சூட்கேஸ்ல அதை வச்சு எடுத்துட்டு போய் அலப்பறை பண்ண அப்பாக்கள் ரொம்ப கம்மி. ஆனா, மின்னல் வேகத்துல வாட்ஸ்அப் டெக்னாலஜியை புரிஞ்சிக்கிட்டு, அதுல அட்டகாசம் பண்ற அம்மாக்கள் அதிகம். “அம்மாக்களும் வாட்ஸ்அப்பும்”னு வெங்கட் பிரபு அண்ட் டீம் ஒரு படமே எடுக்கலாம். அதுக்குப் பயன்படும் வகைல சில விஷயங்களைப் பார்ப்போம்.

தோழியோட வீட்டுக்குப் போயிருந்தேன். அவளோட அண்ணன் ஒரு ரூம்ல கம்ப்யூட்டர்ல பிஸி. தம்பி, மொபைலோட மொட்டை மாடி. அப்பா, ஆஃபீஸ் லேப்டாப்ல யாருக்கோ அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் டைப் பண்ணிட்டு இருந்தாரு. அவளோட அம்மா சமைச்சு முடிச்சதும் சரியா மூணு பேரும் சாப்பிட கீழ வந்தாங்க. மணியடிச்சா சோறு போலன்னு நினைச்சேன். அப்புறம்தான் தெரிஞ்சது, லன்ச் க்ரூப்புன்னு ஒரு வாட்ஸ் அப் க்ரூப்பே வச்சிருக்காங்க. அம்மா, அதுல அப்டேட் பண்ணா எல்லோரும் டைனிங் டேபிளுக்கு வந்துடுறாங்க. 
“அட”ன்னு ஆச்சர்யமா அவங்ககிட்ட வாட்ஸ்அப் எதுக்கெல்லாம் பயன்படுத்துவாங்கன்னு கேட்டேன். அவங்க சொன்ன லிஸ்ட்டைக் கேட்டா லைட்டா கிர்ர்ருன்னு தான் இருக்கு.

வீட்டு வேலைக்காரம்மா பெர்மிஷன் சொல்றதுல இருந்து தண்ணி கேன் போடுறவனுக்குத் தகவல் சொல்ற வரைக்கும் எல்லாத்துக்கும் வாட்ஸ்அப்தான். இன்னும் சில மாசத்துல மார்கழி வேற வரப்போகுது. அதுவும் வந்துட்டா, அமெரிக்கால இருக்கிற ஆண்டிக்கு ஆலங்குளத்துல போடப்பட்ட கலர் கோலம் 360 டிகிரி வீடியோவாகப் போய் சேர்ந்துடும். 

பொண்ணோ பையனோ ஹாஸ்டலுக்குப் போயிட்டா இந்த அம்மாக்கள் அட்டகாசம் இன்னும் அதிகம் ஆயிடும். ‘இன்னைக்கு உனக்கு புடிச்ச கத்திரிக்காய் சாம்பார்,  செஞ்சேன்’னு அப்டேட் மட்டுமில்ல; போட்டோவும் போடுவாங்க. அதுல “வாசனை வருதா கண்ணு”ன்னு எக்ஸ்ட்ரா பன்ச் வேற. 

கோவிலுக்குப் போற டீமுக்கு ஒரு க்ரூப், காலைல வாக்கிங் போற டீமுக்குத் தனி க்ரூப், சீரியல் பார்க்குற ஆட்களுக்குத் தனித்தனி க்ரூப். ஒருவேளை சீரியஸ் மிஸ் ஆனா பிரச்னை இல்லை. அதோட ஆன்லைன் லிங்க் அந்த க்ரூப்புக்கு வந்துடும். கோயிலுக்குப் போறவங்க பிரசாதத்தை அனுப்ப முடியலையாம். அந்த வசதி எப்ப வரும்னு கூட அந்த க்ரூப்பு ஒரு டிஸ்கஷன் ஓடியிருக்கு. 
இது தவிர வேற என்ன என்ன க்ரூப்லாம் இருக்கு தெரியுமா?


சூப்பர் சிங்கர் க்ரூப்:
இது இசை க்ரூப். பேரு கூட “ரஞ்சனி”, “மோகனா”ன்னு ராகத்தோட பேருதான் வச்சிருப்பாங்க. காலைல காபிக்கு பால் காயுற கேப்ல, சின்னதா ஒரு தொகையறாவை பாடி அனுப்புவாங்க ஒரு சிங்கர். அதுல சர்க்கரை கம்மி, டிகாஷன் ஜாஸ்தி... மன்னிச்சுக்கோங்க. காபின்னதும் மனசு மாறிடுச்சு. பாட்டுல சுருதி எங்க விலகுச்சு, தாளம் எங்க எகிறுச்சுன்னு ஃபீட்பேக் வரிசையா வரும். 

ஃபார்வர்டு ஃபோரம்:
ரட்சகன் படத்துல நாட்டைப் பத்தி தப்பா பேசினதும் நாகார்ஜுனாவுக்கு நாக்குப்புச்சி எட்டிப் பார்க்குமே... அதோட டிஜிட்டல் வெர்ஷன்தான் இந்த க்ரூப். ”காந்தி என்னம்மா சொல்லியிருக்கார்ல கமலா”ன்னு ஒரு ஃபார்வர்டு வந்தா, அடுத்த நிமிஷம் ”விவேகானந்தர் என்ன சொல்லியிருக்கார் தெரியுமா விமலா”ன்னு பதில் வரும். எப்பவும் ஆக்டிவான க்ரூப் இதுதான். ஏன்னா, இங்க எதையும் அவங்களா டைப் பண்ண மாட்டாங்க. எல்லாமே ஃபார்வார்டுதான்.

அமானுஷ்ய க்ரூப்:
முன்னலாம், ”இதை போஸ்ட் கார்டுல எழுதி 14 பேருக்கு அனுப்பலைனா ஒரு வாரத்துல கெட்ட செய்தி வரும்”னு சொல்வாங்க இல்ல. இந்தக் க்ரூப் அதோட பரிணாம வளர்ச்சி. தங்கச்சிக்கு அண்ணன்கள் பச்சை புடவை எடுத்துக் கொடுக்கணும், மாமியாருக்கு மருமகள் பிளாட்டினம் வாங்கித் தரணும்னு இதுல வர்ற விஷயங்கள எல்லாம் பார்த்தா ப்ளூ வேல் கேமோட அட்மினே மிரண்டுருவாரு. சுருக்கமா சொல்லணும்ன்னா “10 ரூபா நோட்ட 10 ரூபான்னான்... 20 ரூபா நோட்டை 20 ரூபான்னான்... அப்படில்ல இருக்கு இந்த க்ரூப்பு”ன்னு விமர்சனம் பண்ணலாம்.

வாழ்த்துகள் க்ரூப்:
சில சமயம் ஒரு ஆர்வத்துல க்ரூப் ஆரம்பிப்பாங்க. ஆரம்பிச்சவங்க பாவமான ஆளா இருந்தா, அதை விட்டு வெளிய வரவும் தோணாது. அதுல பேசவும் தோணாது. ஆடிக்கு ஒரு தடவை ஒருத்தர் ’ஹேவ் எ நைஸ் டே’ அனுப்பினா, அமாவாசைக்கு ஒருத்தர் ‘சேம் டூ யூ’ன்னு அனுப்புவாங்க. “இருக்கீங்களா... யாராவது இருக்கீங்களா”ன்னு பயத்தோடதான் இந்த க்ரூப்பை அணுக வேண்டியிருக்கும்.

இனிமேலயும் அம்மாக்களை யாரும் ஏமாத்த முடியாது. “எங்க இருக்க”ன்னு கேட்டா, காலேஜுல இருக்கேன்னு பொய் சொல்ல நினைச்சா, “அப்பன்னா லொகேஷனை ஷேர் பண்ணு”ன்னு ஷெர்லாக் ஹோம்ஸா மாறிடுவாங்க. எல்லாப் புகழும் வாட்ஸ்அப்க்கே.

அடுத்த கட்டுரைக்கு