Published:Updated:

அனைத்து இணையதளங்களையும் ‘Malware’ என்றது கூகுள்... என்ன காரணம்? #ButterflyEffect

அனைத்து இணையதளங்களையும் ‘Malware’ என்றது கூகுள்... என்ன காரணம்? #ButterflyEffect
அனைத்து இணையதளங்களையும் ‘Malware’ என்றது கூகுள்... என்ன காரணம்? #ButterflyEffect

அனைத்து இணையதளங்களையும் ‘Malware’ என்றது கூகுள்... என்ன காரணம்? #ButterflyEffect

தசாவதாரம் படத்தை நினைவு கூர்வோம். நம்மைச் சுற்றி நடக்கும் எல்லாப் பெரிய நிகழ்வுகளுக்கும் காரணமாக இருப்பது இன்னொரு பெரிய விஷயமாகத்தான் இருக்கும் எனச் சொல்ல முடியாது. பிரேசிலில் பட்டாம்பூச்சிகள் சிறகடிக்கும் ஒரு சிறு நிகழ்வு டெக்சாஸில் சூறாவளியை ஏற்படுத்துகிறது என நம்பப்பட்டது. இதை butterfly effect என்றழைத்தார்கள்.

பெரிய நிகழ்வுகளுக்கான தூண்டுதல் மிகச் சிறியது என நிறுவுகிறது இந்த பட்டாம்பூச்சி வி்ளைவு. வரலாற்று நிகழ்வுகள் பலவற்றில் இதைக் காணமுடிகிறது.

1.உலகப் போரின் காரணம் ஒரு சாண்ட்விச் கடை:

செர்பியா சென்றிருந்த ஆஸ்திரிய இளவரசர் பர்டினன்டைக் (Archduke franz Ferdinand) கொல்ல சதி செய்யப்பட்டிருந்தது. அந்தக் குழுவில் பிரின்சிப் என்ற இளைஞனும் அங்கம் வகித்தான். பர்டினன்ட் சென்ற காரை நோக்கி எறியப்பட்ட கைக்குண்டு தவறுதலாக மற்றொரு கார் மேல் விழுந்தது. அன்று மாலை பர்டினனின் காயம் பட்டவரைப் பார்க்க மருத்துவமனைக்குச் சென்றார். கார் ஒட்டுநர் வழி தெரியாமல் தவறுதலான திருப்பத்தில் காரைச் செலுத்திவிட, அங்கு சாண்ட்விச் வாங்கிக் கொண்டிருந்த பிரின்சிப் தன்னிடமிருந்த துப்பாக்கியால் ஆஸ்திரிய இளவரசர் பர்டினான்டையும், அவர் மனைவி சோபியையும் சுட்டுவிடுகிறான். தங்கள் இளவரசரைக் கொன்றதால் ஆஸ்திரியா செர்பியா மீது போர் அறிவித்தது. பல்லாயிரக் கணக்கானவர்களின் உயிரிழப்பிற்குக் காரணமான முதல் உலகப்போர் தொடங்குவதற்கு ஒரு சாண்ட்விச் கடையும் தவறான திருப்பமும் காரணமாக அமைந்துவிடுகிறது.

2.பெயின்ட் துகளின் விலை பல்லாயிரம் டாலர்கள்.

கலிலியோவின் நூற்றாண்டைச் சிறப்பிக்கும் வகையில் அமெரிக்காவின் வான்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசாவிலிருந்து ஹபிள் டெலஸ்கோப் (Hubble telescope) விண்ணில் ஏவப்படுகிறது. பிரபஞ்ச ரகசியத்தைத் தெரிந்துகொள்ள அமெரிக்கா மட்டுமன்றி உலகம் முழுவதும் காத்துக்கொண்டிருந்தது. முதலில் வந்த சில தகவல்களும் புகைப்படங்களும் தெளிவாக இல்லை. அதற்கான காரணங்களை ஆராய்ந்த பொழுது ஹபிள் டெலஸ்கோபின் கண்ணாடியைச் சரியான இடத்தில் நிலைநிறுத்தப் பயன்பட்ட அளக்கும் கம்பியிலிருந்து ஒரு நுண்ணிய பெயின்ட் துகல் விலகியிருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இந்தக் குறைப்பாட்டால் ஹபிளின் கண்ணாடி இருக்க வேண்டிய இடத்தை விட 4 மைக்ரான்(மனித முடியைவிட  25 சதவிகிதம் குறைவு)நகர்ந்திருந்தது. இதன் தொடர்ச்சியாக பில்லியன் டாலர்கள் செலவுசெய்து கோளாறு சரி செய்யப்பட்டது. ஒரு பெயின்ட் துகளின் விலை பல்லாயிரம் டாலர்கள்.

3.ஒரு புத்தகம் அமெரிக்கப் பங்குசந்தயை வீழ்த்தியது:

1907 அமெரிக்க வணிகரான தாமஸ் லாவ்சன் ஒரு புத்தகம் எழுதுகிறார். அந்தப்  புத்தகத்தின் கதைப்படி பல அமானுஷ்ய சம்பவங்கள் ஒரு குறிப்பிட்ட நாளில் தொடர்ந்து நிகழ்கிறது. அந்தப் புத்தகத்தைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட திரைப்படங்களும், கிளைக்கதைகளும் கூட குறிப்பிட்ட அந்த நாளை தீய சக்திகள் ஓங்கும் நாளாகச் சித்தரித்தது. ஒரு சில மத நம்பிக்கைகளும் இந்தக் கூற்றுடன் ஒத்துப்போக ஆண்டின் குறிப்பட்ட அந்த நாள் மக்களைப் பீதிக்குள்ளாக்கும் குறியீடாக மாறிப்போனது. பல ஹோட்டல்களில் அந்தக் குறிப்பிட்ட நம்பரில் ரூம்கள் இருக்காது. அந்த நாளில் வெளியே செல்லாமல் மக்கள் வீட்டில் முடங்கத் தொடங்கினர். இதன் தொடர்ச்சியாக அமெரிக்கப் பங்கு வர்த்தகம் அந்தத் தினம் மட்டும் 0.2 சதவிகிதத்திற்கு குறைவாகத்தான் ஏற்றம் காண்கிறது. அந்த ஒரு நாளில் மட்டும் அமெரிக்காவிற்கு சராசரியாக 900 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படுகிறது. தாமஸின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்ட அந்த நாள் 13 friday.

4.ஒரு மேகக்கூட்டம் மரணத்தின் சாட்சியாய் மாறிப்போனது.

ஆகஸ்ட் 9,1945, காலை 0:44. ஜப்பானின் கொக்கூரா நகரத்தின் மீது அமெரிக்க போர் விமானமான பாக்ஸர் பறந்துகொண்டிருந்தது. விமானத்தின் பொறுப்பில் இருந்த சார்லஸ் கட்டுப்பாட்டறைக்குத் தொடர்பு கொள்கிறார்.

"Target was obscured by heavy ground haze smoke. I repeat ,unable  to locate the target " 

புகைமூட்டமாய் இருப்பதால், இலக்கு தெளிவாகத் தெரியவில்லை என அவர் தகவல் சொன்னவுடன், "அடுத்த இலக்கை நோக்கிச் செல்லுங்கள்", எனக் கட்டளை வருகிறது. தன் இரண்டாம் இலக்கை 11:50 am அடைகிறார் தாமஸ். அங்கும்  மேகம் சூழ்ந்திருக்கிறது. விமானத்தின் எரிபொருளும் குறைவாக இருந்ததால் பின் வாங்க தயாராகிறார் தாமஸ். கடைசி நிமிடத்தில், மேகம் கலைந்து நாகசாகி நகரம் தெளிவாகத் தெரிகிறது. 12:05pm ஃபேட் மேன் (fat man) அணுகுண்டு வீசப்படுகிறது. நாகசாகி மனித துயரத்தின் அடையாளமாக, மாறிப்போகக் காரணமாக ஒரு மேகக்கூட்டம் அமைந்துவிடுகிறது.

5.கூகுளும் குழம்பிப் போன நாள்:

2009 ஜனவரி 31. கூகுளைப் பயன்படுத்திய அனைவருக்கும் அதிர்ச்சிக் காத்திருந்தது. கூகுளில் எதைத் தேடினாலும் "This site may harm your computer" என்ற எச்சரிக்கைச் செய்தி தோன்றியது. கூகுளின் சொந்த இணையதளத்திலும் இந்த எச்சரிக்கைத் தோன்றியது. "நமக்கொரு பிரச்னைன்னா கூகுள்கிட்ட போவோம். கூகுளுக்கே ஒரு பிரச்னைன்னா நாங்க  யார்கிட்ட போவோம்" எனக் கலங்கி நின்றார்கள் நெட்டிசன்கள்.

கோளாறு சரிசெய்யப்பட்டவுடன் "கூகுளுக்கு என்னாச்சு" எனப் பாசமாக விசாரித்த இணையதள அன்பர்களுக்கு கூகுளின் மரிசா மேயர் பதிலளித்தார். கூகுள் நிறுவனம் மால்வேர் எனக் கண்டறியப்பட்ட தளங்களின் இணைப்புகளை malware directoryஇல் பதிவேற்றம் செய்யும். அப்படிப் பதிவேற்றம் செய்யும் பொழுது இணைப்பிற்கு பதிலாக,' / (slash) ' என்ற குறியீட்டை மட்டும் ஒரு malware linkகாக பதிவேற்றிவிட்டது. ’/’ இந்தக் குறியீடு எல்லா லிங்குகளிலும் இருப்பதால் அனைத்து லிங்குகளையும் மால்வேராக அடையாளப்படுத்தியது கூகுள். இந்தக் கோளாறு 40நிமிடங்களில் சரிசெய்யப்பட்டாலும் உலக வர்த்தகத்தில் இதன் தாக்கம் பெரிதாக இருந்தது.

அடுத்த கட்டுரைக்கு