கோ-ப்ரோ கேமரா எல்லாம் நம்மால் வாங்க முடியுமா எனக் கவலைப்படுபவரா? கோ-ப்ரோ என்ட்ரி லெவல் ஹீரோ கேமரா, அமேஸான் வலைதளத்தில் 12,400 ரூபாய்க்கே கிடைக்கிறது. 1080p, 720p ரெசல்யூஷன்களில் ஷார்ப்பான வீடியோவை, எந்தச் சூழலிலும் எந்த இடத்திலும் எடுக்க முடியும். மைக்ரோபோனும் இருப்பதால், ஆடியோவும் பதிவாகிறது. 40 மீட்டர் வரை வாட்டர் ப்ரூஃப் கொண்டது. அளவில் சிறிது என்பதால், எளிதாகக் கொண்டு செல்ல முடியும். ஆனால், இந்த மாடலில், பின்னால் எல்சிடி திரை கிடையாது. எனவே, வீடியோ சரியாக எடுத்துள்ளோமா என்பதைத் தெரிந்துகொள்ள, கம்ப்யூட்டருடன் இணைத்துதான் பார்க்க வேண்டும். 60-க்கும் மேற்பட்ட கோ-ப்ரோ மவுன்ட்டிங் சந்தையில் உள்ளன.

15 ஆயிரம் ரூபாய்தான் பட்ஜெட்; ஒரு நல்ல டேப்லெட் வேண்டும். அது, அதிக வசதிகள் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்றால், மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் Laptab LT666 மாடல் பெஸ்ட். இதை லேப்டாப்பாகவும், டேப்லெட்டாகவும் பயன்படுத்தலாம். ஆனால், ஒரு சிம் கார்டு மட்டுமே பயன்படுத்த முடியும். விண்டோஸ் 8.1 ஆப்ரேட்டிங் சிஸ்டம் படு ஷார்ப். 1280 x 800 ரெசல்யூஷனில் 10.1 இன்ச் IPS டிஸ்ப்ளே துல்லியம். 2 GB RAM மெமரி, 1.33 GHz இன்டெல் Atom பிராசஸர், 32GB இன்டர்னல் ஸ்டோரேஜ், மைக்ரோ SD கார்டு சப்போர்ட், மைக்ரோசாஃப்ட் OneDrive மூலம் 1 TB கிளவுட் ஸ்டோரேஜ் என போதுமான வசதிகளைக் கொண்டுள்ளது. ஆனால், முன்னும் பின்னும் 2 மெகா பிக்ஸல் கேமரா மட்டுமே!

‘வீட்டுக்கு சிசிடிவி கேமரா மாதிரி, ஒரு செக்யூரிட்டி வேண்டும். ஆனால், நாமே சுலபமாகக் கவனிப்பது போலவும், விலையும் குறைவாக இருக்க வேண்டும் என்பவர்களுக்கு, இந்த TP-Link கிளவுட் கேமரா NC200 பெஸ்ட். இதை வாங்கிப் பொருத்திவிட்டால் போதும்; இன்ஸ்டன்ட்டாக வை-ஃபை மூலம் இன்டர்நெட்டில் கனெக்ட் செய்துகொள்ளலாம். TPCamera ஸ்மார்ட்போன் (ஆண்ட்ராய்டு, iOS) அப்ளிகேஷன் மூலம் எங்கிருந்தும் நம் வீட்டை லைவ்வாகக் கவனிக்கலாம். மேலும், மைக்ரோபோன் மூலம் ஆடியோவையும் கேட்க முடியும்.

A7000 ஸ்மார்ட்போனின் ஹிட் ஃபார்முலாவை மீண்டும் பயன்படுத்தி K3 நோட் போனையும் ஹிட்டடித்துவிட்டது லெனோவோ. 1.7 GHz பிராசஸர், ஃபுல்-HD 1080 x 1920 ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, 13 மெகா பிக்ஸல் பின் பக்க கேமரா என்று டெக்னாலஜியில் கில்லியாக இருக்கிறது. 2 GB RAM, 8 கோர் பிராசஸர் என பெர்ஃபாமிங் பேக்கேஜாக உள்ளது K3 நோட். அவ்வப்போது சர்ப்ரைஸ் சேல்கள் மூலம் லெனோவோ இந்த போனை விற்பனை செய்வதால், ஆன்லைனிலேயே இருந்தால்தான் இந்த போனை வாங்க முடியும்!

எம்பி-3 இப்போது ஓல்டு ஃபேஷன். ஹை-ரெசல்யூஷன் (உயர் தரம்) இசைக்கு க்ரேஸ் கூடிவரும் இந்த நேரத்தில் டிஜிட்டல் ஆடியோ ப்ளேயர்களுக்கு டிமாண்ட் அதிகரித்துவருகிறது. இதில் ரொம்பவே பிரபலமானது FiiO X3 போர்டபிள் ப்ளேயர். இதன் முதல் தலைமுறை மாடல் சூப்பர் ஹிட். இப்போது 2-வது தலைமுறை மாடல் வந்துள்ளது. மெட்டல் கேஸிங்கில் டிஸைனிலும், கட்டுமானத் தரத்திலும் உச்சத்தில் இருக்கிறது X3. FLAC போன்ற உயர்தர ஆடியோ ஃபார்மட் இசையை இந்த கேட்ஜெட் மூலம் கேட்பது அலாதியான அனுபவமாக இருக்கிறது. ஒவ்வொரு இசைக் கருவியும், பாடகரின் குரலும் அவ்வளவு தெளிவாக இருக்கிறது. இன்டெர்னல் ஸ்டோரேஜ் கிடையாது. நேரடியாக மெமரி கார்டில்தான் பாடல்களைப் பதிந்துகொண்டு கேட்க முடியும்.