Published:Updated:

தங்கமே தங்கம்..!

தங்கமே தங்கம்..!

தங்கமே தங்கம்..!

தங்கமே தங்கம்..!

Published:Updated:
தங்கமே தங்கம்..!

ங்கம் விலை ஏறினாலும் இறங்கினாலும், நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் மட்டும் குறைவ

தங்கமே தங்கம்..!

தில்லை. இப்படி குவியும் மக்கள், தங்க நகைகள் வாங்கும்போது முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயங்கள் பற்றி விளக்குகிறார், ஈரோடு ‘ஜெம் அண்ட் ஜுவல்லரி டெக்னாலஜி’ பயிற்சி மையத்தின் இயக்குநர் சுவாமிநாதன்.

‘‘தங்கத்தின் விலை எதன் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது?’’

‘‘உலகச் சந்தையில்தான் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அமெரிக்க டாலரின் விலை, கச்சா எண்ணெயின் இருப்பு, உலக நாடுகளின் தேவைகள் இவற்றையெல்லாம் பொறுத்து, ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்கிறது. தங்கம் இந்திய மார்க்கெட்டுக்கு வந்த பிறகு அசல் விலைக்கு மேல், உள்ளூர் தங்க நகை வியாபாரிகள் 1% - 3% அதிக விலை வைத்து விற்பார்கள். இது தங்கத்தின் விலை மட்டும்தான். செய்கூலி, சேதாரம் தனி.’’

‘‘டிசைன் அதிக முள்ள நகைகளுக்கு அதிக சேதாரம் இருக்குமா?’’

‘‘ஆம்... வேலைப்பாடு அதிகரிக்க அதிகரிக்க சேதாரமும் அதிகமாகும். ஆனால், நகையின் எடைக்கும் சேதாரத்துக்கும் சம்பந்தம் இல்லை.’’

‘‘ஒரு பவுனுக்கு எவ்வளவு ரூபாய் வரி செலுத்த வேண்டும்?’’

‘‘தங்க நகையை என்ன விலைக்கு வாங்குகிறோமோ, அந்த விலையில் 1% வரியாகச் செலுத்த வேண்டும். ஹால்மார்க் நகை வாங்கும்போது, ஹால்மார்க் முத்திரைக்கான கட்டணம் தனியாகச் செலுத்த வேண்டும்.’’

தங்கமே தங்கம்..!

‘‘தங்க நகைகளை இன்ஷூர் செய்ய முடியுமா?’’

‘‘நிச்சயமாக! நகைகளுக்கு என்று தனியாக இன்ஷூரன்ஸ் கிடையாது எனினும், ‘ஹவுஸ் ஹோல்ட்ஸ்’ என்ற பிரிவின் கீழ் நகைகளை இன்ஷூர் செய்யலாம். அதற்கு அந்த நகைகளின் ரசீதுகள் அவசியம் என்பதால், நகை வாங்கும்போது அனைத்து நகைகளுக்கும் பில் கேட்டு வாங்கி பத்திரப்படுத்த வேண்டும்.’’

‘‘கல் நகைகள் வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?’’

‘‘சொல்லப்போனால், கற்கள் பதித்த நகைகளை தவிர்ப்பதே நல்லது. ஆபரணங்களை அத்தியாவசியம், அநாவசியம் என்று பிரிக்கலாம். கல் நகைகள், அநாவசியமே! ஆசைக்காக ஒரு நகை மட்டும் வாங்கலாம். காரணம், கற்களுக்கும் தங்கத்தின் விலையே போடப்படுவதால் வாங்குகிறவர்களுக்கு அது எடையின் விலையில் நஷ்டத்தைக் கொடுக்கும். மேலும் அதை மீண்டும் மாற்றும்போதும் கற்களுக்கான எடையைக் கழித்துவிட்டே வாங்குவார்கள் என்பதால், எடைக்கு மிகக்குறைவாகவே விலை கிடைக்கும்.’’

‘‘தங்க நகைகள் குறித்த புகாரை எங்கு தெரிவிக்கலாம்?’’

‘‘நகையின் தரம், எடையில் சந்தேகம், அல்லது வேறு ஏதாவது குறைபாடு என்றால் இந்திய தர நிர்ணய ஆணையம், சி.ஐ.டி வளாகம், 4-வது குறுக்குத் தெரு, தரமணி, சென்னை - 113 என்ற முகவரியிலோ, 044 - 22541216, 9380082849 என்ற தொலைபேசி எண்ணிலோ, meenu@bis.org.in என்ற இ-மெயில் முகவரியிலோ புகார் தெரிவிக்கலாம். இங்கு நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் நுகர்வோர் சேவை மையங்கள், நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் மற்றும் நுகர்வோர் நீதிமன்றங்களை அணுகலாம்.’’

‘‘தங்க நகைகளுக்கான பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை என்றால் என்ன?’’

‘‘அது, பிஐஎஸ் எனப்படும் இந்திய தர நிர்ணய ஆணையம் (BIS-Bureau of Indian Standards) எனும் அமைப்பு, நகையின் தரத்துக்கு வழங்கும் முத்திரை. இதில் ஐந்து விஷயங்களைக் கவனிக்க வேண்டும். பிஐஎஸ் லோகோ, தரக் குறியீடு (purity of gold - உதாரணமாக, 916 என்றால், 22 கேரட் தூய தங்கம் என்று அர்த்தம்), தரத்தை சோதனை செய்த ஆய்வகத்தின் லோகோ, ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட ஆண்டைக் குறிக்கும் எழுத்து, நகை விற்பனையாளர் லோகோ இதையெல்லாம் நகை எவ்வளவு சின்னதாக இருந்தாலும், பூதக்கண்ணாடி உதவியுடன் சரிபார்த்தே, அது ஹால்மார்க் நகையா என்று உறுதி செய்து வாங்க வேண்டும்.’’

‘‘பழைய நகைகளைக் கொடுத்து புதிய நகைகள் வாங்கும்போது என்ன இழப்பு?’’

‘‘பொதுவாக, பழைய நகைகளை வாங்கிய கடையிலேயே கொடுத்தால்தான் உரிய விலை கிடைக்கும். பிற கடைகளுக்குச் சென்றால், தரம் குறைவு, எடை கழிவு என்று குறைந்த விலையே கொடுப்பார்கள். ஒருவேளை வாங்கிய கடையில் கொடுக்க வழியில்லை என்றால், இரண்டு, மூன்று கடைகளில் அந்தப் பழைய நகை என்ன விலைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று கேட்டறிந்து, முடிவெடுக்கலாம்.’’

‘‘குறைந்த எடையில் நகை வாங்கினால் நஷ்டமா?’’

‘‘உண்மைதான். தரம் குறைவாக இருக்கும் என்பதால், முடிந்தளவுக்கு ஒரு கிராம், இரண்டு கிராம் நகைகளைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, அட்சய திரிதியையின்போது 100 மில்லி முதல் நாணயங்கள் விற்கப்படும். ஆனால், அதன் தரம் மிகக் குறைவாகவே இருக்கும்.’’

ந.ஆஷிகா