Published:Updated:

``பிக் பாஸுக்கு எப்படி வோட்டு போடணும் கூகுள்" - 2017-ல் கூகுளை இப்படியா சோதித்திருக்கிறோம்?

``பிக் பாஸுக்கு எப்படி வோட்டு போடணும் கூகுள்" - 2017-ல் கூகுளை இப்படியா சோதித்திருக்கிறோம்?
``பிக் பாஸுக்கு எப்படி வோட்டு போடணும் கூகுள்" - 2017-ல் கூகுளை இப்படியா சோதித்திருக்கிறோம்?

``பிக் பாஸுக்கு எப்படி வோட்டு போடணும் கூகுள்" - 2017-ல் கூகுளை இப்படியா சோதித்திருக்கிறோம்?

“எப்படி கூகுள் செய்வது” என்று மட்டும்தான் நம்ம மக்கள் கூகுளின் தேடவில்லை. மற்றபடி மீதி அனைத்தையும் ‘how to‘ என கூகுள் செய்துவிட்டோம். நம்பவில்லையா? ஹோலி பண்டிகை கொண்டாடிய அடுத்த நாள் லட்சக்கணக்கானோர் ” How to remove Holi color from face” என்று தேடியிருக்கிறார்கள். 

 ‘மோசமானவங்கள்ல முக்கியமானவங்க” இவங்கதான் என கூகுள் 2017-ம் ஆண்டின் டாப் how to  க்களை பட்டியலிட்டிருக்கிறது. ஏழுகடல், ஏழு மலை தாண்டுவதைவிட சிரமமான ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைப்பதைத்தான் இந்தியர்கள் அதிகம் தேடியிருக்கிறார்கள். கூகுளும் ஆரம்பத்தில் வடிவேலு இரண்டு கைகளையும் பாக்கெட்டில் விட்டு “ஒண்ணுமில்லையே” என்ற இமேஜைதான் பதிலாக தந்திருக்கும். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக அந்தச் சூத்திரத்தைக் கண்டுபிடித்து நிறைய இணையதளங்கள் எழுதின.

கூகுளின் பட்டியல் இதோ.

1. How to link Aadhaar card with PAN card

ஆதார் கார்டை பான் நம்பருடன் (Pan number) இணைக்க முதலில் இந்த பக்கத்தில் லாக் இன் செய்யவும். அப்போதே ஒரு பாப் அப் வந்து “ஆதாரை இணைக்க வேண்டுமா” என கேட்கும். ஆம் என்றால்,பெயர், பிறந்த தேதி இன்னும் சில தகவல்களை கொடுக்க வேண்டும். அவையும், ஆதார் எடுத்தபோது கொடுத்ததும் பொருந்திப் போனால், ஆதார் எண்ணை கேட்கும். அதை டைப் செய்தால் முடிந்தது வேலை.

எளிதான புராசஸ் தானே? வெயிட்.

2. How to book Jio phone

வாடிக்கையாளர்கள் 1,500 ரூபாய் செலுத்தி இந்த ஸ்மார்ட்போனைப் பெற்றுக்கொள்ளலாம். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத்தொகையானது வாடிக்கையாளர்களுக்குத் திருப்பித்தரப்படும் என்பதால், இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.0 என ரிலையன்ஸ் நிறுவனம் விளம்பரப்படுத்தி வருகிறது. ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் ப்ரி-புக்கிங் செய்யப்படவிருக்கும் இந்த மொபைல் போனை வாங்க விருப்பமுள்ளோர், அந்நிறுவனத்தின் Jio.com தளத்தில் பதிவு செய்தால் விற்பனை குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

3. How to buy bitcoin in India

பிட்காயினை நம்புவதிலும் நிறைய பிரச்னைகள் உண்டு. சமீபத்தில் இதன் மதிப்பில் சரிவு ஏற்பட்டது. இது உலக அளவிலான மதிப்பு. ஆனால், இந்தியாவில் மட்டும் அதிகம் குறையவில்லை. காரணம், இந்தியாவில் பிட்காயின் சமீபத்தில் புகழ்பெற்றதால் நிறைய பேர் அதில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். அதனால், இந்தியாவில் மட்டும் இதன் டிமாண்ட் அதிகரித்தது. பிட்காயினை விற்கும் எக்ஸ்சேஞ்கள் இந்த ஆர்வத்தைப் பயன்படுத்தி அதிக விலைக்கு விற்றன. 

4. How to take a screenshot

5. How to remove Holi color from face

6. How to file GST return

7. How to invest in mutual funds

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு அதிகரித்தற்கான முக்கியக் காரணம், மார்க்கெட் குறித்த புரிதல் பொதுமக்களிடம் அதிகரித்து வருகிறது. அதனால் சந்தை சரியும்போது பணத்தை வெளியே எடுப்பது வெகுவாகக் குறைந்துள்ளது. மேலும், எஸ்ஐபி முறையில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. 

8. How to mine Bitcoin

நான் எப்படி பிட்காயினை வாங்க முடியும்?

  அ) ஒரு பொருள் அல்லது சேவைக்கான கட்டணமாக வாங்கலாம்
  ஆ) எக்ஸேஞ்சில் பிட்காயினை வாங்கலாம்
  இ) பிட்காயின் வைத்திருப்பவர்களிடம் பணம் தந்து வாங்கலாம்.
  ஈ) மைனிங் செய்யத் தெரிந்தால் செய்யலாம் அல்லது செய்யத் தெரிந்தவர்களிடம் கூடுதல் பணம் கொடுத்து வாங்கலாம்.

9. How to vote for Bigg Boss 11

கூகுள் தனது சர்ச் என்ஜின் மூலம் பல இலவசச் சேவைகளையும், பல கட்டணச் சேவைகளையும் வழங்கி வருகிறது. அதில் ஒன்றுதான் இந்த சர்ச் அடிப்படையிலான வோட்டிங் சிஸ்டம். இதற்கும், எத்தனை பேர் ஒருவரை தேடுகிறார் என்பதற்கும் தொடர்பு இல்லை. Bigg Boss vote என கூகுள் சர்ச் செய்வதன் மூலம் நேராக நமக்கு வாக்குச்சாவடியை காட்டுகிறது கூகுள். அங்கேயே யாருக்கு வாக்களிக்க வேண்டுமோ அதை ஒரு சில க்ளிக் மூலம் முடித்துவிடலாம்.

10. How to buy ethereum in India

அடுத்த கட்டுரைக்கு