Published:Updated:

படிக்கலாம் மெக்கானிக் கல்வி

படிக்கலாம் மெக்கானிக் கல்வி

படிக்கலாம் மெக்கானிக் கல்வி

ன்ஜினீயரிங் படிச்சாலே கெத்துதான்கிறது தெரிஞ்ச விஷயம். அதுலயும் மெக்கானிக்கல்... சொல்லவே வேணாம்! ஆனா, `படிச்சுட்டு வேலை கெடைக்கலயேப்பா!'னு பெத்தவங்க பொலம்புறத

படிக்கலாம் மெக்கானிக் கல்வி

கேக்கும்போதுதான் லைட்டா கண்ணு வேர்க்குது. அதைத் துடைக்க சில ஆலோசனைகளை வழங்குகிறார், ஆர்.எம்.கே கல்லூரிப் பேராசிரியர் முத்துகிருஷ்ணன்.

1.மேல்நிலை (ப்ளஸ் டூ) படிப்பில் கணினி அறிவியல் பிரிவையோ, கணித-உயிரியல் பிரிவையோ எடுக்க வேண்டும். தொழிற் சார்பு(Vocational) பிரிவையும் தேர்ந்து எடுக்கலாம். பாலிடெக்னிக் பயில்வோர் மெக்கானிக்கல் பிரிவை எடுக்க வேண்டும்.அப்போதுதான் B.E படிப்பில் மெக்கானிக்கல் தேர்ந்து எடுக்கலாம்.

படிக்கலாம் மெக்கானிக் கல்வி

2.ப்ளஸ் டூ தேர்வில் பெறும் கணக்குப் பாடத் தின் மதிப்பெண்ணை 100-க்கும் (200/2=100), இயற்பியல் மற்றும் வேதியியல் பாடத்தின் கூட்டு மதிப்பெண்களை 100-க்கும் (200+200=400; 400/4 = 100) கணக்கிட்டு வரும் மதிப்பெண்களை கூட்டினால் கிடைக் கும் மதிப்பெண் (100+ 100=200)'கட்-ஆஃப்’ மதிப்பெண்ணாகும். 12-ம் வகுப்பு கட்-ஆஃப் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழக பொதுக் கலந்தாய்வில் கலந்து கொள்ள அழைப்பு விடப்படும்.

3.ஐ.ஐ.டி. மெட்ராஸ், என்.ஐ.டி. திருச்சி, இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி,

படிக்கலாம் மெக்கானிக் கல்வி

டிசைன் அண்ட் மேனுஃபேக் சரிங் மற்றும் பல சுயநிதி பொறியியல் பல்கலைக்கழகங்கள், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங்கில் இளங்கலை பட்டம் வழங்குகின்றன. பத்தாம் வகுப்பு முடித்து பாலிடெக்னிக்கில் மெக்கானிக்கலில் டிப்ளோமா முடிக்கும் மாணவர்கள், பொறியியல் இரண்டாம் ஆண்டில் நேரடியாக சேரலாம்.

படிக்கலாம் மெக்கானிக் கல்வி

4.AUTOCAD, CREO, CATIA,      ANSYS போன்ற பல மெக்கானிக்கல் சாஃப்ட்வேர்களில் ஒன்றைக் கற்றுக் கொண்டால், தொழிற் சாலை பணியில் சேரும்போது மிகவும் பயனுள்ளதாக இருக் கும். செயல்முறை கல்விகள் கற்றுக் கொள்வதும் சிறப்பு. GO-KART, HYBRID போன்ற போட்டி களில் பங்கேற்று மாணவர்களே சொந்த மாக கார்களை உருவாக்கலாம். பெண்கள் மெக்கா னிக்கல் படிப்பை தேர்ந்தெடுப்பது அரிது. ஆனால், விரும்பி தேர்ந்தெடுத்தால், பெண்களும் தங்கள் சொந்தக் காலில் நிற்கும் திறனைப் பெறுவர்.

5.தரத்தின் அடிப் படையில் பெரிய கல்லூரிகளில் பெரிய நிறுவனங்களும், சிறிய கல்லூரிகளில் புதிய

படிக்கலாம் மெக்கானிக் கல்வி

மற்றும் சிறுமுதலீட்டு நிறுவனங்களும் கேம்பஸ் இன்டர்வியூவுக்கு வருவார் கள். இதற்கு மாணவர்கள் எடுக்கும் ஒட்டுமொத்த மதிப்பெண்களின் சராசரி குறைந்தபட்சம் 6 புள்ளிகள் இருக்க வேண்டும். மீதமுள்ள 400-க்கும் அதிகமான கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்காக அண்ணா பல்கலைக் கழகம் பொதுவான வேலைவாய்ப்பு முகாம் ஒன்றை நடத்தும். இதில் கலந்துகொள்ள, மாணவர்கள் எடுக்கும் ஒட்டுமொத்த மதிப்பெண் களின் சராசரி (CGPA) 7.5-க்கும் அதிகமாக இருக்க வேண்டும்.

படிக்கலாம் மெக்கானிக் கல்வி

6.இளங்கலை பட்டம் பெற்ற பின், இந்தியாவில் எம்.இ. பட்டமும், வெளிநாட்டில் எம்.எஸ். பட்டமும் பயிலலாம். இந்தியாவில் எம்.இ. பயில, ஐ.ஐ.டி-யால் நடத்தப்படும் `GATE' நுழைவுத் தேர்வில் பெறும் மதிப்பெண்ணைப் பொறுத்து, கல்லூரிகளில் இடம் கிடைக்கும். வெளிநாட்டில் எம். எஸ் பயில `GRE' நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். இந்தத் தேர்வில் பெறும் மதிப்பெண்களை பொறுத்தே படிப்புச் செலவு தீர்மானிக்கப்படும். பொதுவாக, ஜெர் மனியில் நிறைய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உள்ள தால், எம்.எஸ். படிப்புக்கு ஜெர்மனி நல்ல தேர்வு.

படிக்கலாம் மெக்கானிக் கல்வி
படிக்கலாம் மெக்கானிக் கல்வி

7.மத்திய அரசு கொண்டு வந்துள்ள ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தால், மெக்கானிக்கல் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு அதிகரிக்கும். மேலும், பல வெளிநாட்டு வாகன தொழிற்சாலைகளும் தொழில்நுட்ப நிறுவனங்களும் நம் நாட்டுக்கு வருவது அதிகரித் திருப்பதால், வேலை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. பொதுவாக, மெக்கானிக்கல் மாணவர்கள் எல்லா பொறியியல் பிரிவுகளைப் பற்றியும் படிப்பதால், இன்ஃபோ சிஸ், விப்ரோ, சி.டி.எஸ், டாடா போன்ற தொழில்நுட்ப நிறுவ னங்கள் மெக்கானிக்கல் மாண வர்களுக்கு முன்னுரிமை அளித்து பணிக்கு எடுக்கிறார்கள். இதே சிறப்புக் காரணத்தால், அவர்கள் சொந்தத் தொழிலும் தொடங்கி, வெற்றிகரமாக நடத்த முடியும்!

 - ச.ஸ்ரீராம் ரங்கநாத், ஜெ.விக்னேஷ்,

படம்: மா.நவீன்

அடுத்த கட்டுரைக்கு