Published:Updated:

ஆல் இன் ஆல் ஆப்ஸ்!

ஆல் இன் ஆல் ஆப்ஸ்!

ஆல் இன் ஆல் ஆப்ஸ்!

ஆல் இன் ஆல் ஆப்ஸ்!

Published:Updated:

‘உன் மொபைல் மாடலைக் காட்டு, நீ யார்னு சொல்றேன்; நீ டவுன்லோடு பண்ணிருக்குற ஆப்ஸ் லிஸ்ட்டை காட்டு, உன் கெப்பாசிட்டி என்னனு சொல்றேன்!’

- இப்படி ‘தனியொருவன்’ ரவி ஸ்டைலில் கலாய்க்கும் அளவுக்கு, வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மட்டுமில்லாம, ஸ்மார்ட்போன்களில் ஆப்ஸ் அப்டேட்டும் அவசியம் கேர்ள்ஸ். இதோ சில சூப்பர் சஜஷன்ஸ்..!

ஆல் இன் ஆல் ஆப்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆல் இன் ஆல் ஆப்ஸ்!

சைமெரா (Cymera)

எடிட் பண்ணாம போட்டோ போஸ்ட் பண்றவ இடியட் என்பதுதான் இப்போ டிரெண்ட். சாதாரணமா எடுக்குற செல்ஃபிக்களைக் கூட, எக்ஸ்ட்ரீம்லி எடிட் பண்ணி ‘டல்’ திவ்யாக்கள் ‘தூள்’ திவ்யாக்களா டிபி-யில் பட்டையைக் கிளப்பக் கைகொடுக்கும்... ‘சைமெரா’ ஆப். குட்டிக் கண்களை குண்டு குண்டு கண்களாக்கிறதில்  இருந்து, கன்னத்தில் ரோஸ் பவுடர் டச் அப் வரை இதில் எல்லா எடிட்டிங்கும் சாத்தியம். உங்க போட்டோவை நீங்களே கலாய்ச்சு மீம் கூட செய்யலாம். கலர் டோன், ஸ்மைல், மேக்கப்னு  கவர்ந்திழுக்கும்  இந்த ஆப், யூத் பலரின்   போட்டோ எடிட்டர் ஆப்ஸா அள்ளுது ஓட்டு!

ஆல் இன் ஆல் ஆப்ஸ்!

மொபிக்விக் (MobiKwik)

இரவு நேரப் பயணம். திடீர்னு போன்ல பேலன்ஸ் காலி. எங்கயும் இறங்கி ரீசார்ஜ் செய்ய முடியாத நிலைமை. இந்த ஸீன்ல ‘மொபிக்விக்’ ஆப் உங்க போன்ல இருந்தா... அஞ்சே நிமிஷத்தில் ரீசார்ஜ் செஞ்சுடலாம். முன்கூட்டியே ஒரு குறிப்பிட்ட தொகையை ‘மொபிக்விக்’ அக்கவுன்ட்ல டிரான்ஸ்ஃபர் செஞ்சு வெச்சுக்கிட்டா, ரீசார்ஜ் செய்றது இன்னும் சுலபம். ‘மொபிக்விக் வாலட்’டில் நீங்க பணம் டெபாசிட் செஞ்சு வெச்சுக்கிட்டா, டிஷ் டி.வி பில், இன்டர்நெட் கார்டு ரீசார்ஜ்னு எல்லாமே செஞ்சுக்கலாம்...கண்ணிமைக்கும் நேரத்துல, இருந்த இடத்தில் இருந்தே!

ஆல் இன் ஆல் ஆப்ஸ்!

ஸ்நாப் சாட் (SnapChat)

‘e a t i n g’, ‘o n t h e w a y’ இப்படி ஒவ்வொரு எழுத்தா தட்டி சாட் பண்ற சிஸ்டமும் கொஞ்ச நாள்ல எக்ஸ்ஹாஸ்ட் ஆகப் போகுது. அடுத்த கட்ட டெக் பாய்ச்சல்... ஸ்நாப் சாட். அதாவது, போட்டோ மூலமே பேசிக்கிறது. கண்ணை மூடிட்டே ஒரு போட்டோ எடுத்து போஸ்ட் பண்ணி ‘தூங்குறேன்’னு சொல்றது, புக்கோட ஒரு போட்டோ எடுத்து போஸ்ட் பண்ணி ‘படிக்கிறேன்’னு சொல்றதுனு, இப்படி ‘ஸ்நாப் சாட்’டில் உங்க போட்டோக்களே கதைக்கும். உங்க ஃப்ரெண்ட் போடுற ஸ்நாப்புக்கு நீங்களும் உடனே ஒரு போட்டோ எடுத்து, ஸ்நாப் மூலமே பதில் சொல்லலாம். யார் யார் உங்க ஸ்நாப்பை பார்க்கலாம் என்பதையும் நீங்களே முடிவு பண்ணலாம். நல்ல கேமரா உள்ள போனை வெச்சிருக்கிறவங்க, ‘ஸ்நாப் சாட்’ வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க!

ஆல் இன் ஆல் ஆப்ஸ்!

ஃபிலிப்கார்ட் (Flipkart)

ஆன்லைன் ஷாப்பிங்கில் தனி சாம்ராஜ்யம் படைக்கும் ஃபிலிப்கார்ட், சமீபகாலமா தங்களோட பிரத்யேக மொபைல் ஆப்ஸை பயன்படுத்தி பொருள் வாங்குறவங்களுக்கு விசேஷ சலுகை கொடுக்குது. ஆனா, ஷாப்பிங்கைவிட, விண்டோ ஷாப்பிங்க்கு இதுமாதிரியான ஆப்ஸை யூஸ் பண்ணும் இளம்பெண்கள் நிறைய பேர். சும்மா ஃப்ரீடைம்ல மார்க்கெட்ல புதுசா வந்திருக்கிற பொருட்களைப் பார்த்து தங்களோட பொதுஅறிவை(!) வளர்த்துக்குறாங்களாமாம். ஜஸ்ட் போனை ஸ்வைப் செய்து ஜாலியா விண்டோ ஷாப் பண்றது ஒரு சூப்பர் ஹாபிங்கிற கொள்கையில் இருக்குறவங்க கவனிக்கவும்!

ஆல் இன் ஆல் ஆப்ஸ்!

பின்க் பேட் (Pinkpad)

‘போன மாச பீரியட்ஸ் டேட் ஞாபகம் இல்லையே’னு அப்பப்போ ரூம் போட்டு யோசிக்கும் பெண்களின் சிறந்த தோழி, ‘பிங்க் பேட்’ ஆப். இதில் ஒருமுறை மென்ஸுரல் டேட்-ஐ ரெஜிஸ்டர் பண்ணிட்டா, அதுக்கு அப்புறம் ஒவ்வொரு மாசமும் ஓவலேஷன் நடக்கும் நாட்கள், பீரியட்ஸ் ஏற்பட வாய்ப்புள்ள தேதிகள், அந்த சமயம் இருக்க வேண்டிய சரியான உடல் எடைனு உங்க மொத்த மென்ஸுரல் சைக்கிளையும் கவனிக்கும் மெடிக்கல் இன்ஸ்பெக்டரா மாறிடும் இந்த ஆப். அதையும் தாண்டி, பீரியட்ஸ் வர்றதுக்கு முன்னாடி ஏற்படும் ப்ரீமென்ஸுரல் சிண்ட்ரோம் மற்றும் அந்த மூன்று நாட்களில் ஏற்படும் உடல் சார்ந்த இதரப் பிரச்னைகள் பற்றியெல்லாம் பெயர் தவிர்த்து, ஆன்லைன் ஃபோரமில் உள்ள மத்த பெண்கள்கிட்ட கலந்துரையாடலாம். பீரியட்ஸ் பத்தி வெளிய பேசக் கூச்சப்படும் பெண்களுக்கு, ஸ்மார்ட் ஃப்ரெண்ட், இந்த பிங்க் பேட்!

குறிப்பு: நெட்கார்டு போடச் சொல்லி அப்பாவை நச்சரிக்கும் கேர்ள்ஸுக்கு, நாங்கள் பொறுப்பல்ல!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism