Published:Updated:

ரெட்மிக்கு நிஜ சவால்... பட்ஜெட் மொபைல்களில் கில்லியா ஸ்மார்ட்ரான்? #Smartron

ரெட்மிக்கு நிஜ சவால்... பட்ஜெட் மொபைல்களில் கில்லியா ஸ்மார்ட்ரான்? #Smartron
ரெட்மிக்கு நிஜ சவால்... பட்ஜெட் மொபைல்களில் கில்லியா ஸ்மார்ட்ரான்? #Smartron

ரெட்மிக்கு நிஜ சவால்... பட்ஜெட் மொபைல்களில் கில்லியா ஸ்மார்ட்ரான்? #Smartron

இந்தியாவில் குறைந்த விலை ஸ்மார்ட்போன் சந்தையைப் பொறுத்தவரை சீன நிறுவனங்களே அசைக்க முடியாத இடத்தைப் பிடித்திருக்கின்றன. அதிலும் ஷியோமி வேற லெவல். இன்றைக்கு மொபைல் வாங்குபவர்களின் பெரும்பாலோனோருக்கு ஷியோமிதான் முதல் தேர்வு. இந்தியாவைச் சேர்ந்த மைக்ரோமேக்ஸ், லாவா மற்றும் இன்னும் சில மொபைல் நிறுவனங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சற்று குறைந்த விலையில் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வந்தன. அதன் பிறகு எதிர்பார்ப்பை சரிவர பூர்த்தி செய்யாததால் மக்களின் பார்வை வேறு நிறுவனங்களின் பக்கம் திரும்பியது. வாங்கினால் இந்திய நிறுவனத்தின் மொபைலையே வாங்குவோம் என்று தீர்மானம் செய்திருந்தவர்கள் கூட வேறு வழியின்றி சீன நிறுவனங்களின் போன்களை வாங்க வேண்டியிருந்தது.

கடும் போட்டி நிலவும் மொபைல் சந்தையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு புதிதாக கால்பதித்தது ஸ்மார்ட்ரான் நிறுவனம். மற்ற நிறுவனங்களைப் போல அதிகமான மொபைல்களை அறிமுகம் செய்யாமல் மிகக்குறைவாகவே அறிமுகம் செய்து வருகிறது ஸ்மார்ட்ரான். இதுவரை இந்த நிறுவனம் அறிமுகம் செய்த மொபைல்களின் எண்ணிக்கை இரண்டே இரண்டுதான். கடைசியாக எஸ்.ஆர்.டி என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டு அதற்கு சச்சின் டெண்டுல்கரை பிராண்ட் அம்பாசிடராக நியமித்தது. இன்று மூன்றாவதாக Smartron t.phone P என்ற மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது. 

Smartron t.phone P வசதிகள்

5.2 இன்ச்  280 x 720 HD திரை
1.4 GHz குவால்கோம் ஸ்னாப்ட்ராகன் 435 ஆக்டாகோர் ப்ராசஸர்
3  ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரி
13 மெகாபிக்சல் பின்புற கேமரா
5 மெகாபிக்சல் முன்புற கேமரா
5000mAh பேட்டரி
ஆண்ட்ராய்டு 7.1.1 நெளகட் இயங்குதளம்

பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் மக்கள் அதிகம் விரும்பும் வசதிகளில் ஒன்று பேட்டரி பேக்அப். அதை மையமாக வைத்தே இந்த ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் இருக்கும் 5000mAh பேட்டரி இரண்டு நாட்களுக்கு போதுமானதாக இருக்கும் என்கிறது ஸ்மார்ட்ரான்.  பின்புற கேமரா மற்றும்  5 மெகாபிக்சல் முன்புற கேமரா இரண்டிற்குமே ஃபிளாஷ் வசதி இருக்கிறது. ஸ்னாப்ட்ராகன் 435 ஆக்டாகோர் ப்ராசஸர் மற்றும் 3 ஜிபி ரேம் இருப்பதால் வேகத்திற்கு குறைவிருக்காது. இதே ப்ராசஸர்தான் ரெட்மி 4 ஸ்மார்ட்போனில் இருக்கிறது. இந்த செக்மன்டில் சிறந்த ப்ராசஸர் இருப்பது இந்த ஸ்மார்ட்போனில்தான்.


முழு மெட்டல் வடிவமைப்பு இந்த ஸ்மார்ட்போனுக்கு சிறப்பான தோற்றத்தை அளிக்கிறது. 32 ஜிபி இன்டர்னல் மெமரி கொடுக்கப்பட்டிக்கிறது, ஹைபிரிட் சிம் ஸ்லாட் மூலமாக 128 ஜிபி மெமரிகார்டு வரைக்கும் பயன்படுத்தலாம். ரிவர்ஸ் சார்ஜிங் வசதி இருப்பதால் இதன் மூலமாக மற்ற மொபைல்களை சார்ஜ் ஏற்றிக்கொள்ள முடியும். கிளவுட் ஸ்டோரேஜ் மூலமாக 1TB அளவிற்கு தகவல்களை சேமித்துக்கொள்ளும் வசதியைத் தருகிறது ஸ்மார்ட்ரான். இது தவிர tronx என்ற வாய்ஸ் அசிஸ்டன்ட் வசதியும் இதில் இருக்கிறது. 5000mAh பேட்டரி இருந்தாலும் இதன் எடை 160 கிராம்தான் எனவே கைகளில் வைத்துப் பயன்படுத்த வசதியாக இருக்கும். இதற்கு முன்பு ஸ்மார்ட்ரான் நிறுவனம் அறிமுகப்படுத்திய இரண்டு ஸ்மார்ட்போன்கள் சிறப்பானதாக இருந்தாலும் அவை சந்தையில் வரவேற்பைப் பெறவில்லை அதற்கு அதன் விலை காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் இந்த முறை ஃபிங்கர்பிரின்ட் சென்சார், சிறப்பான பேட்டரி திறன், அதிக ரேம் என பல வசதிகளை கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் சரியான விலையில் நிர்ணயிக்கப்பட்டிருப்பதால் இந்த ஸ்மார்ட்போன் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும் சீன நிறுவன மொபைல்களை தவிர்த்து வேறு வாங்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். 7,999 ரூபாயாக விலை நிர்ணயிக்கப்பட்டிக்கும் இந்த ஸ்மார்ட்போன் இன்று முதல் ஃப்ளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு