Published:Updated:

ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

லகத்துலேயே ரொம்பக் கஷ்டமான காரியம், பொறந்த குழந்தைங்களோட அழுகைக்கான அர்த்தத்தைத் தெரிஞ்சுக்கிறதுதான். ஏன், எதுக்குனே தெரியாம, பொசுக் பொசுக்குனு ‘ங்காஆஆ...’னு ஆரம்பிச்சிடும். குழந்தையோட அழுகையை நிறுத்த முடியாம ராத்திரி முழுக்க கண் விழிக்கிற எத்தனையோ அம்மாக்களைப் பார்த்திருப்பீங்க. சரி... அதுக்கு என்னன்னுதானே கேட்கிறீங்க. உங்க குழந்தைகள் ஏன் அழுவுது, எதுக்கு அழுவுதுனு கண்டுபிடிக்கிறதுக்காகவே ஆண்ட்ராய்டில் இருக்கிறது, ‘பேபி டிரான்ஸ்லேட்டர்’ அப்ளிகேஷன்! ஓப்பன் பண்ணா, உங்க குழந்தையின் அழுகையை நிறுத்தலாம். எப்படி?

ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

அப்ளிகேஷனைத் திறந்து அழுதுகொண்டிருக்கும் குழந்தையிடம் கேட்பதுபோல, ‘ஏன்ப்பா அழற, அம்மா பாவம் இல்லையா?’ என ஒரு சென்டிமென்ட் வசனம் பேசுங்கள். இப்போது ‘பேபி டிரான்ஸ்லேட்டர்’ அப்ளிகேஷனானது, நீங்கள் பேசியதைக் குழந்தைகளுக்குப் புரியும் ‘ஒலி’யாக மாற்றுமாம். பிறகு? குழந்தைக்குக் கேட்கும் தூரத்தில் மொபைலை வைத்துக்கொண்டு, அதில் ஒலிக்கும்

ஆள் பாதி ஆப்ஸ் பாதி!

ஒலியைக் கேட்கவைத்தால் போதும். அம்மா அல்லது அப்பா தன்னிடம் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதைப் புரிந்துகொண்டு, உங்கள் மீது கரிசனம் காட்டுமாம். இப்படித்தான் விவரித்திருக்கிறார்கள். அப்ளிகேஷனைப் பயன்படுத்திய சிலர், ‘சில நேரங்களில் கை கொடுக்கிறது, சில நேரங்களில் கை கொடுக்கவில்லை’ ரகங்களிலேயே விமர்சனங்களை வைத்திருக்கிறார்கள். அப்ளிகேஷனை வடிவமைத்திருப்பவர்களும் ‘இது ஒரு சோதனை முயற்சிதான். எனவே சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம்’ என்றே அறிவுறுத்தியிருக்கிறார்கள். இதே கான்செஃப்ட்டில் ஐ போன்களில் கிடைக்கும் ‘க்ரை டிரான்ஸ்லேட்டர்’ என்ற அப்ளிகேஷன் பல ஆய்வுகளுக்குப் பிறகு உருவானது. அழும் குழந்தையின் குரலைப் பத்து வினாடிகள் பதிவு செய்தாலே போதும். அழுகைக்கான காரணங்களை அடுக்கி வைக்கும். கிட்டத்தட்ட 96 சதவிகிதப் பயன்பாட்டாளர்கள், ‘க்ரை டிரான்ஸ்லேட்டர்’ என்ற ஐ போன் அப்ளிகேஷன் பயனுள்ளதாகத் தெரிவித்திருக்கிறார்கள். இந்த அப்ளிகேஷனுக்குப் போட்டியாகத்தான் இந்த ‘பேபி டிரான்ஸ்லேட்டர்’ அப்ளிகேஷன். ஸோ... முயற்சி பண்ணிப் பாருங்க. முடியலைன்னா, விட்டுடுங்க!

தவிர, அப்ளிகேஷனில் ஒலிக்கும் குரலைக் கேட்டு குழந்தை ஹை வோல்டேஜில் அழ ஆரம்பித்தால், நிர்வாகம் பொறுப்பல்ல. இதுபோன்ற சமயத்தில் ‘உடனடியாக அப்ளிகேஷனை ஆஃப் செய்வதே நன்று’ என்றும் தெரிவித்திருக்கிறார்கள் வடிவமைத்தவர்கள்!

டவுன்லோடு லிங்க் : https://play.google.com/store/apps/details?id=com.beeasy.babytranslator

- கூகுள்குமார்