அவள் 16
என்டர்டெயின்மென்ட்
Published:Updated:

நியூ இயர் ரெசல்யூஷன்...

காப்பாற்ற உதவும் மொபைல் ஆப்ஸ்!

புதுவருஷம் பிறக்கும்போது அனைவரும் தவறாமல் எடுப்பது, புத்தாண்டு உறுதிமொழி. வரும் வருடத்தில், வாழ்க்கையில் எதையெல்லாம் திருத்திக்கொள்ளப் போகிறோம் என்ற திட்டமிடல்தான், இந்த நியூ இயர் ரெசல்யூஷன்.

நியூ இயர் ரெசல்யூஷன்...

ஃபேஸ்புக் யுகத்தில், ஸ்டேட்டஸ் போடுவதற்காகவே ரெசல்யூஷன் எடுப்பவர்கள் பலர் என்றாகிவிட்டது. பொதுவாக, இளைய தலைமுறை எடுக்கும் உறுதிமொழிகள் இந்த வட்டங்களுக்குள்தான் இருக்கும்... உடம்பைக் குறைக்க வேண்டும்; ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என்று நேரத்தை வீணாக்காமல் இருக்க வேண்டும்; அநாவசியச் செலவுகளைக் குறைக்க வேண்டும். ஆனால், வருடாவருடம் இதே உறுதிமொழிகளை மீண்டும் புதிப்பித்துக்கொள்பவர்கள் அதிகம்! காரணம், 8% பேர் மட்டுமே தங்களின் புத்தாண்டு உறுதிமொழிகளைக் கடைப்பிடிக்கிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு. மீதி 92% பேர்... அவ்வ்வ்!

சரி, இப்போது முக்கால்வாசி பாப்புலேஷன் ஸ்மார்ட் போன்களிலேயே வாழ்வதால், இந்தப் பிரச்னைக்குத் தீர்வும் அங்கிருந்தே எடுத்தால்தான் வேலைக்கு ஆகும். அந்த வகையில், நியூ இயர் ரெசல்யூஷன்களைக் காப்பாற்றிக்கொள்ள கைகொடுக்கும் மொபைல் ஆப்ஸ்களைப் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க...

இணையத்தில் மூழ்காமல் காப்பாற்றும் ஆப்ஸ்..!

ஃபாரஸ்ட் - இந்த ஆப் ஓபன் செய்ததும் ஒரு செடி வளரத் தொடங்கும். அந்த நேரத்தில் ஃபேஸ்புக் போன்ற எந்த தேவையில்லாத தளங்களை திறந்தாலும் அந்தச் செடி கருகி இறந்துவிடும். 30 நிமிடம் வரை உங்கள் கவனத்தை சிதறாமல் வைத்துக்கொள்ளலாம்.

ரெஸ்க்யூ டைம் - உங்கள் தினசரி நடவடிக்கைகளை வைத்து நீங்கள் எவ்வளவு நேரம் விரயம் ஆக்குகிறீர்கள் என்றும், அதனைச் சரிசெய்துகொள்ளும் வழிகளையும் கூறும்.

நியூ இயர் ரெசல்யூஷன்...

செலவுகளைக் கண்காணிக்கும் ஆப்..!

பென்னி -  இந்த ஆப் உங்களுடைய செலவுகளைத் தொடர்ந்து கண்காணித்துக் கணக்கிட்டு, ஒரு விரிவான அறிக்கையைத் தரும். அதில் இருந்து பாடம் கற்று, ஓட்டைக் கையை இறுக்கிக்கொள்ளலாம்.

அறிவுசார் ஆப்ஸ்! 

நியூ இயர் ரெசல்யூஷன்...

ஹைப்ரோ - தினமும் 5 நிமிடங்கள் ஒதுக்கி கலை, வரலாறு, இலக்கியம், அறிவியல் அனைத்தும் கற்றுக்கொள்ளலாம்.

டுயோலிங்கோ-பல புது மொழிகள் கற்றுக்கொள்ளலாம்... இலவசமாக!

ஸ்கில்ஷேர் - ஆன்லை னிலேயே இலவசமாகக் கற்றுக்கொள்ளக்கூடிய ஆயிரக்கணக்கான கோர்ஸ்களை அளிக்கிறது.

லூமோசிட்டி - ஞாபகசக்தியை அதிகரிக்கப் பயிற்சி, மைண்ட் கேம்ஸ் என மூளையை சுறுசுறுப்பாக வைக்க உதவும்.

ஃபிட்னஸ் மற்றும் டயட் ஆப்ஸ்!

நியூ இயர் ரெசல்யூஷன்...

ஃபிட்டோக்ரஸி - ஃபிட்னஸ் எக்ஸ்பர்ட்களை உங்கள் போனுக்கே கொண்டுவருகிறது இந்த ஆப். உங் கள் பிரத்யேக ஃபிட்னஸ் பிளானை உருவாக்கிக்கொள்ளலாம். அதிலிருக்கும் சந்தேகங்களை ஃபிட்னஸ் டிரெயி னர்களிடம் தீர்த்துக்கொள்ளலாம்.

ஈட் திஸ் மச் - உங்களின் எடைக்கு எவ்வளவு கலோரி உணவு எடுத்துக்கொண்டால் போதும் என்பதை கணித்துச் சொல்லும்.

நியூ இயர் ரெசல்யூஷன்...

டெய்லி யோகா - ஜிம் செல்ல நேரமில்லாதவர்கள், வீட்டிலிருந்த படியே யோகா கற்றுக்கொள்ள சிறந்த ஆப்.

ரன் கீப்பர் - ஜாகிங் பயிற்சி செய்ய விரும்புவோருக்கு அருமையான ஆப் இது. இதை ஆன் செய்துவிட்டு வாக்கிங்/ஜாகிங்/ரன்னிங் செய்தால், எவ்வளவு தூரம் ஓடியிருக்கிறோம் என்பது முதல் எவ்வளவு கலோரிகள் எரிக்கப்பட்டுள்ளது என்பது வரை புட்டுப் புட்டு வைக்கும்!

இந்தப் புத்தாண்டு உறுதி மொழிகள், ஆப்ஸ் துணையுடன் நிறைவேற வாழ்த்துகள்!

ஐ.மா.கிருத்திகா