Election bannerElection banner
Published:Updated:

கொலையான பெண்... கொலையாளியைக் கண்டுபிடித்த ஃபேஸ்புக்! #GadgetTippedCrimes அத்தியாயம் 8

கொலையான பெண்... கொலையாளியைக் கண்டுபிடித்த ஃபேஸ்புக்! #GadgetTippedCrimes அத்தியாயம் 8
கொலையான பெண்... கொலையாளியைக் கண்டுபிடித்த ஃபேஸ்புக்! #GadgetTippedCrimes அத்தியாயம் 8

கொலையான பெண்... கொலையாளியைக் கண்டுபிடித்த ஃபேஸ்புக்! #GadgetTippedCrimes அத்தியாயம் 8

உலகின் அழகான நாடுகளில் ஒன்று கனடா. அழகு மட்டுமல்ல;  ஆபத்தில்லா தேசமும். பெண்களுக்குப் பாதுகாப்பு நிறைந்த நாடுகளில் கனடாவும் ஒன்று. கனடாவில் எல்லா ஊர்களுமே அழகுதான். சாஸ்கட்டூன் ( Saskatoon) இன்னும் ஸ்பெஷல். எப்போதாவது கனடாவிலும் சோகம் நடக்கும். மார்ச் 25, 2015-ம் ஆண்டு அந்த சாஸ்கட்டூனில் நடந்த சோகம் இது.

பிரிட்டினி கார்கோல் (Brittney Gargol) என்பவரும் ரோஸ் ஆண்ட்டைன் (Cheyenne Rose Antoine) என்பவரும் நெருங்கியத் தோழிகள். 21 வயதாகும் இருவரும் பெரும்பாலான நேரங்களில் ஒன்றாகவே இருப்பவர்கள். பிரிட்டினியை மென்ஷன் செய்து ரோஸ் 2015ல் தனது ஃபேஸ்புக்கில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தார்.

"Where are you? Haven't heard from you. Hope you made it home safe"

பிரிட்டினிக்கு என்ன ஆனது? அதற்கு முந்தைய நாள் இருவரும் எங்கே சென்றார்கள்?

அன்று, இருவரின் தோழியின் வீட்டில் ஹவுஸ் பார்ட்டி. நண்பர்கள், இசை, மது என சந்தோஷமாகவே கழிந்தது. சில மணி நேரத்தில் தோழிகளுக்கு தனிமைத் தேவைப்பட, இருவரும் அருகிலிருந்த பார் ஒன்றுக்கு சென்றிருக்கிறார்கள். எப்போதும் போல உலகிலிருக்கும் அத்தனை விஷயங்களைப் பற்றியும் பேச்சு நீண்டது. எல்லாம் முடிந்ததும் பிரிட்டினி தனது இன்னொரு நண்பருடன் சென்றுவிட்டார். ரோஸ், தனது உறவினர் ஒருவர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். அடுத்த நாள் பிரிட்டினியின் மொபைல் ரீச் ஆகவில்லை. அதனால்தான் ஃபேஸ்புக்கில் அப்படியொரு ஸ்டேட்டஸ் தட்டியிருந்தார் ரோஸ். ரோஸுக்கு எல்லாமே ஃபேஸ்புக் தான். அப்படியொரு போதை ஃபேஸ்புக் மேல்.

பிரிட்டினியை கனடா போலீஸ் கண்டுவிட்டார்கள்; ஆனால், சடலமாக. பிரிட்டினி கொலை செய்யப்பட்டிருந்தார். யாரோ அவர் கழுத்தை நெரித்துக் கொன்றிருக்கி்றார்கள். போலீஸூக்கு எந்தக் க்ளூவும் அங்கு கிடைக்கவில்லை. சம்பவ இடத்தில் கிடைத்த பொருள்களும் போலீஸூக்குப் போதுமானதாக இல்லை. பிரிட்டினியை அழைத்துச் சென்ற இளைஞனைப் பற்றியும் ரோஸூக்கு தெரிந்திருக்கவில்லை. ரோஸின் உறவினர் தனது வீட்டுக்கு ரோஸ் மட்டும்தான் வந்தார் எனச் சொல்லிவிட்டார். போஸ்ட் மார்ட்டம் படி கொலை நடந்த நேரத்தில் ரோஸ் உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டார். அதனால், அவர் மீதும் போலீஸூக்கு சந்தேகம் வரவில்லை. 2 ஆண்டுகள் வரை கொலையாளியைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறியது கனடா போலீஸ்.

சென்ற வாரம் ரோஸ் தனது ஃபேஸ்புக்கில் பிரிட்டினியுடன் எடுத்த ஒரு புகைப்படத்தை பதிவேற்றியிருந்தார். அதைப் பார்த்த போலீஸூக்குப் பொறித் தட்டியது. அதில் ரோஸ் அணிந்திருந்த பெல்ட் பாதிதான் தெரிந்தது. ஆனாலும், அந்த பெல்ட்டை எங்கோ பார்த்திருக்கிறோமென தோன்றியது. பிரிட்டினி இறந்துகிடந்த இடத்தில் கிடைத்த பெல்ட் அது. 

இந்த முறை ரோஸிடம் தீவிரமாகவே விசாரிக்க நினைத்தது போலீஸ். ஆனால், அதற்கு வேலையின்றி தாமாகவே ரோஸ் உண்மையைச் சொல்லிவிட்டார். சம்பவம் நடந்த அன்று தோழிகள் இருவரும் மது மற்றும் கஞ்சா போதையில் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்குள் வாக்குவாதம் வந்திருக்கிறது. அது தீவிரமடைந்து கைக்கலப்பு ஆகியிருக்கிறது. அந்தச் சண்டையில் தனது தோழியை தன் கைகளாலே நெரித்துக் கொன்றிருக்கிறார் ரோஸ். அதற்கு அவர் பயன்படுத்தியது பெல்ட். அந்த பெல்ட்தான் ஃபேஸ்புக் ஃபோட்டோ வடிவில் அவரை மாட்ட வைத்திருக்கிறது.

``அன்றிரவு என்ன நடந்தது என்றே ரோஸுக்குத் தெரியவில்லை. அவ்வளவு போதை. என்ன காரணம் சொன்னாலும் என் தோழியை நானே கொன்றுவிட்டேன். அவள் திரும்ப வரப்போவதில்லை... சாரி சார்” என அழுதிருக்கிறார் ரோஸ்.

போலீஸ் சம்பவ தினத்தன்று இருவரது ஃபேஸ்புக் டைம்லைனை இப்போது மேட்ச் செய்து பார்த்திருக்கிறது. இரண்டும் ஒத்துப் போயிருக்கின்றன. ரோஸைக் காப்பாற்றுவதற்காக, அவரின் உறவினர் ரோஸ் உண்மையாக வீட்டுக்கு வந்த நேரத்தை மறைத்து, முன்பாகவே வந்துவிட்டதாக பொய்சாட்சி சொல்லியிருக்கிறார். ஆனால், ஃபேஸ்புக் டைம்லைன் உண்மையை சொல்லிவிட்டது. 
ரோஸ்மீது பதிவு செய்யப்பட்டிருந்த கொலை வழக்குக்கு இன்னும் அதிகமான தண்டனை கிடைத்திருக்கும். ஆனால், கொலை செய்வதற்கான நோக்கம் எதுவுமில்லை என்பதால் 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. 

போதை எந்த விதத்திலும் பிரச்னைதான்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு