Published:Updated:

டாப் 10 ஆப்ஸ் 10

டாப் 10 ஆப்ஸ் 10

டாப் 10 ஆப்ஸ் 10

டாப் 10 ஆப்ஸ் 10

டாப் 10 ஆப்ஸ் 10

Published:Updated:
டாப் 10 ஆப்ஸ் 10

‘உன் அப்பா போனில் புதுசா என்ன ஆப் டவுண்லோடு செய்தே?’ எனக் கேட்பதுதானே இப்போ ஃபேஷன். செம ஜாலியான, க்ரியேட்டிவ் ஆப்ஸ் நிறைய இருக்கு. அவற்றில், உங்களுக்காக 10. 

டாப் 10 ஆப்ஸ் 10

நீங்கள் செல்போன் மூலம் புகைப்படங்களை எடுக்கும்போதே, கார்ட்டூன்களைப் போலவும், காமிக்ஸ் போலவும், கறுப்பு வெள்ளை பேனா மற்றும் பென்சிலால் வரைந்தது போலவும் பல வகைகளில் எடுத்தால் ஜாலியாக இருக்கும். அதற்கான ஆப் இது. https://play.google.com/store/apps/details?id=com.fingersoft.cartooncamera

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டாப் 10 ஆப்ஸ் 10

எத்தனை நாளைக்குத்தான் காமிக்ஸ் படித்துக்கொண்டே இருப்பது, நாமே உருவாக்க வேண்டாமா? பேட்மேன், ஸ்பைடர்மேன், அயர்ன் மேன், ஹல்க், வோல்வரின், மிக்கி மவுஸ், டொனால்டு டக் போன்ற கதாபாத்திரங்களை வைத்து, இடங்களைத் தேர்வுசெய்து, அசத்தலான  காமிக்ஸை உருவாக்கலாம். https://play.google.com/store/apps/details?id=com.tiltedchair.cacomic

டாப் 10 ஆப்ஸ் 10

தீக்குச்சிகளில் விதவிதமான உருவங்களை அமைப்பது, இரண்டு குச்சிகளை மட்டும் இடம் மாற்றி வேறு உருவங்களை உருவாக்குவது, கூட்டல், கழித்தல் என எல்லாவற்றையும்  செய்ய உதவும் அட்டகாசமான ஆப் இது.http://appcrawlr.com/android/matches-puzzle-game

டாப் 10 ஆப்ஸ் 10

விமானம் ஓட்ட உங்களுக்கு ஆசையா? ‘வா, டேக் ஆஃப் ஆகலாம்’ என அழைக்கிறது இந்த ஆப். பைலட் கேபினில் உட்கார்ந்து எப்படி விமானம் ஓட்டுவது என்பதை அச்சு அசலாகச் செய்து பார்க்கவும், வெவ்வேறு இடங்கள் மற்றும் காலநிலைகளில் விமானங்களை ஓட்டும் முறைகளையும் உணர்த்துகிறது. https://play.google.com/store/apps/details?id=com.laminarresearch.xplane_default

டாப் 10 ஆப்ஸ் 10

வீட்டிலிருந்து ஏழு கடல்கள் தாண்டி, ஏழு மலைகள் தாண்டிச் செல்வோமா? இந்தப்  பயணத்தில் விளையாடும் நீங்கள், செய்யும் செயல்களுக்கு ஏற்ப நடக்கும் கதைகளை  அனிமேஷனோடு அனுபவிக்கலாம்.https://itunes.apple.com/us/app/little-big-foot/id915136540?mt=8

டாப் 10 ஆப்ஸ் 10

ஒரு துறைமுகத்தில் அடுக்கி இருக்கும் பெட்டிகளை நகர்த்தி அடுக்கியும், இடம் மாற்றியும் விரைவாகச் செயல்பட வேண்டும். நூற்றுக்கணக்கான லெவல்கள் இருப்பதால், உங்கள் கைகளுக்கு வேகமும் மூளைக்கு சுறுசுறுப்பையும் கொடுக்கும் செம லாஜிக் மேஜிக் ஆப் இது.https://itunes.apple.com/us/app/move-the-box/id491113310?mt=8&uo=4&at=10l4CB

டாப் 10 ஆப்ஸ் 10

ஹார்வி என்ற குட்டி நாயுடன் சேர்ந்து விண்வெளியில் சுற்றலாம். பிற கிரகங்களில் வாழும் ஏலியன்களையும், விண்வெளியில் இருக்கும் ரோபோக்களையும் நண்பனாக்கலாம். விண்வெளிப் பயணத்துக்கான ராக்கெட் ஆப்.https://play.google.com/sto/apps/details?id=com.sagosago.SpaceExplorer.googleplay&hl=en

டாப் 10 ஆப்ஸ் 10

முக்கோணம், சதுரம், செவ்வகம் போன்ற ஏழு வடிவங்களை ஒன்றோடு ஒன்று இணைத்து உருவங்களை உருவாக்கும் ஆப்.  வடிவங்களை எளிதில்  புரிந்துகொள்ளவும் உதவுகிறது. https://play.google.com/store/apps/details?id=com.jin.games.tangram

டாப் 10 ஆப்ஸ் 10

லார்ட் ஆஃப் த ரிங்ஸ், தி ஹாபிட் படங்களின் கதாபாத்திரங்கள் மூலம் ஒரு படையை  உருவாக்கலாம். தீய சக்திகளுக்கு எதிரான போரை நடத்தி ஜெயிக்கலாம். குறிப்பிட்ட கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து, தனி நபர் போரிலும் ஈடுபடலாம். செம த்ரில் ஆப்.https://play.google.com/store/apps/details?id=com.kabam.cnlotr

டாப் 10 ஆப்ஸ் 10

கை விரல்களை மடித்து டார்ச் விளக்கின் முன்பாகக் காட்டினால், சுவரில் விதவிதமான நிழல் உருவங்கள் தோன்றும். அதுபோல பல விதமான விலங்குகளை, உருவங்களை எப்படி உருவாக்கலாம் என்பதைக் கற்றுத்தருகிறது இந்த ஆப்.https://play.google.com/store/apps/details?id=com.italiamultimedia.android.ombre

- இனியன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism