Published:Updated:

'செயலி' செய்ய விரும்பு!

'செயலி' செய்ய விரும்பு!
பிரீமியம் ஸ்டோரி
'செயலி' செய்ய விரும்பு!

Tamil App

'செயலி' செய்ய விரும்பு!

Tamil App

Published:Updated:
'செயலி' செய்ய விரும்பு!
பிரீமியம் ஸ்டோரி
'செயலி' செய்ய விரும்பு!

ண்ட்ராய்டில் கலக்கும் சில தமிழ் செயலிகளின் அறிமுகம் இங்கே...

'செயலி' செய்ய விரும்பு!

நம் தமிழ் மொழியில் உள்ள விடுகதைகள், புதிர்கள், பழமொழிகள், சிந்தனைகள்... நிறைய நிறைய! சில வருடங்களுக்கு முன்வரை செவிவழியாக உலா வந்த அவை அனைத்தும் இப்போது இந்த செயலியில் அடக்கம். பெயருக்கேற்ப நம்மை நிறையவே யோசிக்க வைக்கிறது. நாம் படித்து மகிழ்ந்ததை உடனடியாக சமூக வலைதளங்களில் பகிரவும் முடிவது சிறப்பு.

தமிழ் காலண்டர்

(Tamil calender)

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'செயலி' செய்ய விரும்பு!

இனி நல்ல நேரம், ராகு காலம், தமிழ் மாதப் பிறப்பு எல்லாம் பார்க்க தினசரி காலண்டர் எடுக்க வேண்டாம். ஸ்மார்ட்போனில் ‘தமிழ் காலண்டர்’ ஆப் இருந்தால் போதும். சந்திராஷ்டமம், முகூர்த்த நாள், கரி நாள், அம்மாவாசை, பௌர்ணமி விவரங்கள் எல்லாம் இனி உங்கள் விரல் நுனியில்.

தமிழ் ஸ்டேட்டஸ் அண்டு கோட்ஸ்

(Tamil status and qoutes)

'செயலி' செய்ய விரும்பு!

வாட்ஸ் அப்பிலும் ஃபேஸ்புக்கிலும் தினமும் தமிழில் ஸ்டேட்டஸ் மற்றும் கோட்ஸ் பதிவிடும் கொள்கை முடிவில் இருக்கும் அன்பர்களுக்கான பரிசு, ‘தமிழ் ஸ்டேட்டஸ் அண்டு கோட்ஸ்’ ஆப். நட்பு, காதல், உறவுகள், நகைச்சுவை, வாழ்த்துகள் என எந்த கேட்டகரியில் வேண்டும் என்றாலும் கொட்டித் தருகிறது.

கதை கதையாம்

(kathai kathaiyaam)

'செயலி' செய்ய விரும்பு!

வீட்டில் சிறுவர்களுக்கு அன்று தாத்தா, பாட்டிகள் கதைகள் சொல்லி அவர்களிடம் நற்பண்புகள் வளர்த்தார்கள். தாத்தா, பாட்டியைப் பிரிந்திருக்கும் இன்றைய நியூக்ளியர் ஃபேமிலி குழந்தைகளுக்கு ஒரு நல்ல கதைசொல்லி, ‘கதை கதை யாம்’ ஆப். தெனாலிராமன் கதைகள், பரமார்த்த குரு கதைகள், தத்துவக் கதைகள், நீதிக்கதைகள், சிறுகதைகள், ஔவையார் பாடல்கள் என அசத்துகிறது.

ஹேங்மேன் தமிழ் கிளாஸிக்

(Hangman tamil classic) :

'செயலி' செய்ய விரும்பு!

இது ஒரு விளையாட்டு செயலி. குறிப்பிட்ட வாய்ப்புகளுக்குள் சரி யான வார்த்தையை, கொடுக்கப்பட்டுள்ள உதவிச் சொற்களில் இருந்து கண்டுபிடிக்க வேண்டும். உலக நாடுகளின் பெயர்கள், இந்தியாவின் மாநிலங் களின் பெயர்கள், மாவட்டங்களின் பெயர்கள், உறவுகள், விளையாட்டு என பல பிரிவுகளின் கீழ் விளையாடலாம்; விளையாடிக்கொண்டே நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம்.

செல்லினம்

'செயலி' செய்ய விரும்பு!

ஸ்மார்ட்போனில் தமிழில் டைப் செய்ய உதவும் செயலி, செல்லினம். தமிழ் கீ போர்டுடன், தங்கிலீஷில் டைப் செய்தாலே அந்த தமிழ் வார்த்தை ‘உள்ளேன் அய்யா’ அட்டெண்டன்ஸ் போடு வது...  சிம்ப்ளி சூப்பர்ப்! 

கோட் அண்டு டைகர்

(Goat and Tiger):

'செயலி' செய்ய விரும்பு!

கிராமப்புறங்களில் வீட்டுத் திண்ணையில் கோடு போட்டு, கற்கள் வைத்து ஆடிய அதே ஆடு-புலி ஆட்டத்தின் ஆண்ட்ராய்டு அப்டேட்... இந்த ‘கோட் அண்டு டைகர்’ ஆப். நாம் ஆடு வைத்து ஆடுவதா, அல்லது புலியை வைத்து ஆடுவதா என்று தேர்வு செய்து... ஆட்டத்தை ஆரம்பிக்க வேண்டியதுதான்.

தமிழ் வளர்ப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism